"கனவு இலக்கு" திட்டத்தின் கீழ் பம்பலப்பிட்டிய ரயில் நிலையத்தின் நவீனமயமாக்கல் பணிகள் தடையின்றி முன்னெடுக்கப்படுகின்றன.
Clean Sri Lanka தேசிய திட்டத்தின் கீழ், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மேற்பார்வையில் செயல்படுத்தப்படும் "கனவு இலக்கு" திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் பம்பலப்பிட்டிய ரயில் நிலையத்தின் நவீனமயமாக்கல் பணிகள் தடையின்றித் தொடர்கின்றன.
அரச மற்றும் தனியார் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டமானது, இந்நாட்டில் வாழும் பல சமூகங்களின் நிதிப் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
தற்போது வரை 55 மில்லியன் ரூபாய் செலவில் நவீனமயமாக்கல் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குள் அனைத்துப் பணிகளையும் முழுமையாக நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.


