தேசிய நல்லிணக்கம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கிளிநொச்சியில் தெளிவூட்டல் கலந்துரையாடல்

தேசிய நல்லிணக்கம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கிளிநொச்சியில் தெளிவூட்டல் கலந்துரையாடல்
  • :
தேசிய நல்லிணக்கம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கிளிநொச்சியில் தெளிவூட்டல் கலந்துரையாடல்.

 தேசிய நல்லிணக்கம் மற்றும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் சமூகமட்ட அமைப்புகளை தெளிவூட்டும் கலந்துரையாடல் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார அவர்களின் தலைமையில்

 
மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் மற்றும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி மகேஸ் கட்டுலந்த , ஆகியோரின் பங்குபற்றுதலுடனும் அண்மையில் (19.06.2026) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் அவர்கள்......
 
போரினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு உறவுகளை இழந்து பல இன்னல்களை எதிர்கொண்டு தமது வாழ்க்கையை முன்னெடுத்து வரும் மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வுகளை வழங்குவதற்காக கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த நீதி அமைச்சருக்கு மாவட்ட மக்கள் சார்பாக தமது நன்றிகளை தெரிவித்தார்.
 
மேலும் இன்னும் தீர்வு காணப்படாதுள்ள இவ் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக மக்கள் தமது முழுமையான தகவல்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் இந் நிறுவனத்தால் வழங்கப்படும் உதவிகள் அவர்களது நாளாந்த வாழ்வாதாரத்தை முன்னெடுக்க உதவியாக அமையுமெனவும் தெரிவித்தார்.
 
தொடர்ந்து உரையாற்றிய நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார அவர்கள்...
தேசிய ஒற்றுமை, சகவாழ்வு, மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டுவரும் இவ்அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் ,மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்தொடர்பாக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் துரிதப்பட்டுள்ளதாகவும் எனவே பொதுமக்கள் தேவையான விபரங்களை முழுமையாக வழங்கி முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் , சமூக மட்ட அமைப்புகள்,மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் பூரண ஆதரவு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தவர்களிடம் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் அவர்கள் கேட்டறிந்து கொண்டார்.
 
குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி ,யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன், மாவட்ட Clean srilanka திட்டத்தின் தலைவர்,காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் ,
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் , தேசிய மக்கள் சக்தியின் பிரதேச இணைப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Articles