2026 ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறாவது பிரதேச செயலாளர் மாநாடு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில்

2026 ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறாவது பிரதேச செயலாளர் மாநாடு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில்
  • :
மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகத்தின் மூலம் மக்களிற்கு வினைத்திறனும் தரமுமான சேவைகளை வழங்குவதனை இலக்காகக் கொண்டு,
2026 ஆம் ஆண்டிற்கான முல்லைத்தீவு மாவட்டத்தின் முதலாவது சுற்றின் இறுதி, ஆறாவது பிரதேச செயலாளர் மாநாடு நேற்று (25) காலை 8.30 மணிக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இன்றைய தினம் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர், பிரதேச செயலகத்தின் அலுவலக முறைமை, பிரதேச செயலாளர் மாநாட்டின் பின்னரான மாற்றங்கள் தொடர்பில் பார்வையிட்டனர்.
 
இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் தேசிய ரீதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உற்பத்தித்திறன் சுட்டெண் தரங்கணிப்பில் குறிப்பிடத்தக்க இடங்களைப் பெற்ற பிரதேச செயலகங்களுக்கான சான்றிதழ்களை மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் வழங்கிவைத்தார்.
 
தொடர்ந்து நடைபெற்ற பிரதேச செயலாளர் மாநாட்டில், கடந்த முறை நடைபெற்ற மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட பல்வேறு விடயங்களின் முன்னேற்ற நிலைகள் மற்றும், 2026 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடுகள், மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், பிரதேச செயலகங்களினூடாக மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் மற்றும் பொதுமக்கள் சேவைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில், அரசாங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள கிராமிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டம் உட்பட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சமூக நலத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், பிரதேச செயலகங்களின் நிர்வாக, நிதி மற்றும் திட்டமிடல் செயற்பாடுகள், அவற்றின் முன்னேற்றங்கள், சமூக நலச்சேவை நடவடிக்கைகள், அபிவிருத்தித் திட்டங்கள், , 2026 வரவு-செலவுத் திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் செயற்பாட்டு முன்னேற்றங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
 
அத்துடன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் இனங்காணப்பட்டுள்ள அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வு நடவடிக்கைகள் உட்பட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இன்றைய இந்த மாநாட்டினை கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் விஜயகுமார் அவர்கள் கரைதுறைப்பற்று பிரதேச செயலக அலுவலர்களது ஒத்துழைப்புடன் சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தார்.
 
இம் மாநாட்டில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி எஸ். மஞ்சுளாதேவி (நிர்வாகம்), மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர். சி. ஜெயக்காந் (காணி), மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் சற்குணேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், புதுக்குடியிருப்பு, துணுக்காய், வெலிஓயா, மாந்தை கிழக்கு உள்ளிட்ட பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள், மாவட்ட தொழில் பயிற்சி அதிகாரசபையின் இணைப்பாளர், மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.

Related Articles