விசேட தேவையுடையோர்களுக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டி, தேசிய அளவில் அனுராதபுர மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீரர்களைப் பாராட்டும் விழா அண்மையில் தம்புத்தேகம பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
கஹடகஸ்திகிலிய பிரதேச செயலகத்தைச் சேர்ந்த சி.எம்.டபிள்யூ.எல். சந்திரசேகர நீளம் பாய்தல்; போட்டியில் இரண்டாம் இடத்தையும், ரம்பேவ பிரதேச செயலகத்தைச் சேர்ந்த விஹங்கன செவ்வந்தி ஈட்டி எறிதல் போட்டியில் மூன்றாம் இடத்தையும், தம்புத்தேகம பிரதேச செயலகத்தைச் சேர்ந்த ஹர்ஷனி கொடித்துவக்கு 100 மீட்டர் சக்கர நாற்காலி பந்தயத்தில் இரண்டாம் இடத்தையும் வென்றனர்.
அனுராதபுர மாவட்ட ஊடகப் பிரிவு


