மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நடனத் திறன்களை வெளிப்படுத்தும் சமூக சேவைகள் திணைக்களத்தால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் 'சித் ரூ' நடனப் போட்டி - 2025’ க்கான, மேல் மாகாணப் போட்டி அண்மையில் (18) கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
கம்பஹா மாவட்ட நடனக் குழு இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது. இவர்களுக்கான நடனப் பயிற்சியை கம்பஹா மாவட்ட கலாச்சார அதிகாரி சுரங்க நயனஜித் மேற்கொண்டார்.
கம்பஹா மாவட்ட ஊடகப் பிரிவு


