நேற்று (20) வெள்ளிக்கிழமை மாலை ஈரான் நாட்டின் வட மத்திய மாகாணத்தின் செம்னான் நகரத்தில் 5.5 றிச்டர் அளவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
செம்னான் நகரத்தில் இருந்து 36 கிலோ மீட்டர் (22.4 மைல் ) மற்றும் சோர்கெஹ் பகுதியில் இருந்து 17 கிலோமீட்டர் (10.6 மைல்) தொலைவில் உள்ள பிரதேசத்திலேயே இந்த பூமி எழுச்சி தாக்கியுள்ளதாக ஈரானிய செய்தி சேவை தெரிவித்துள்ளது.
இப்பூமியர்வினால் வடமேல் ஈரானில் 5 பேர் இறந்துள்ளதாகவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் ஈரானிய உத்தியாகப் பூர்வ தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.
அதிகமாக உள்ள பிராந்தியத்தில் ஈரான் அமைந்துள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக பல பூமி அதிர்வுகள் ஈரானில் ஏற்பட்டுள்ளன.
நாட்டின் சமீபத்திய வரலாற்றில் மிகவும் பேரழிவு தரும் நிலநடுக்கம் 2013 ஆம் ஆண்டு ஏற்பட்டது, அப்போது தென்கிழக்கு கெர்மன் மாகாணத்தில் அமைந்துள்ள பாம் நகரில் குறைந்தது 34,000 பேர் இறந்தனர். அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக இருந்தது.


