2026.05.18 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

2026.05.18 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
  • :

2026.05.18 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்


01. பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிரான வன்முறைகள் தொடர்பான உலகளாவிய சுகாதார ஆய்வுக் குழுவின் கருத்திட்டத்திற்காக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துடன் இணைந்து கொள்வதற்கான ஒத்துழைப்பு ஒப்பந்தம்

பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிரான வன்முறைகள் தொடர்பான உலகளாவிய சுகாதார ஆய்வுக் குழுவின் கருத்திட்டமொன்று ஐக்கிய இராச்சியத்தின் தேசிய சுகாதாரம் மற்றும் சமூக ஆய்வு நிறுவகத்தின் 173.92 மில்லியன் ரூபாய்கள் நிதியுதவியின் கீழ் அமுல்படுத்தப்படுகின்றது. குறித்த கருத்திட்டத்தை அமுல்படுத்தவதற்காக இலங்கையின் யாழ்ப்பாண பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியத்தின் பர்பின்ஹம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 11 வெளிநாட்டு நிறுவனங்களுக்கிடையே ஒத்துழைப்பு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இக்கருத்திட்டத்தின் மூலம் நிலைபேறானதும் சிறப்பாகப் பயிற்சி பெற்றதுமான சமுதாயத் தொடர்புகள் மற்றும் தலையீட்டுக் குழுக்கள் (Survivor Panel) உள்நாட்டு சுகாதாரக் கட்டமைப்பில் ஒருங்கிணைக்கப்படுவர். அதன்மூலம் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிரான வன்முறைகளுக்கு பதில்வினையாற்றல்களைப் பலப்படுத்தல்ய, பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிரான வன்முறைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதார பிரச்சினைகளை மதிப்பீடு செய்தல், அதன் பொருளாதார மற்றும் சமூக ரீதியான தாக்கங்களை மதிப்பீடு செய்தல், வன்முறைகளைத் தடுத்தல் மற்றும் இடையீடுகளின் பயனுள்ள மூலோபாயங்களை அடையாளங் காணல் மற்றும் நிறுவனங்களுக்கிடையே அறிவுப் பரிமாற்றம் மற்றும் இயலளவு விருத்திக்கான வசதிப்படுத்தல்கள் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, 04 ஆண்டுகள் காலப்பகுதிக்கு குறித்த கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தால் ஏனைய தரப்பினர்களுடன் கையொப்பமிடுவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


02. இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவால் யுஐயு குழுமத்தின் கண்காணிப்பு பேரவையின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ளல்

இலங்கையின் பணத்தூய்தாக்கலைத் தடுத்தல்ஃபங்கரவாதத்திற்கு நிதியளித்தலைத் தடுக்கும் தேவைகளை அதிகரிப்பதற்கான செயற்பாட்டுத் திட்டத்தின் ஒரு படிமுறையாக இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவால் வெளிநாட்டு பங்களார்களுடன் தகவல்களைப் பரிமாற்றிக் கொள்வதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கமைய, இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவால் ஆசிய பிராந்தியத்தில் காப்புறுதிக் கண்காணிப்பு அதிகாரிகளுக்கிடையே பயனுள்ள ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்களை உறுதிப்படுத்துவதற்காக தாபிக்கப்பட்டுள்ள, ஹொங்கொங் காப்புறுதி அதிகாரசபையின் தலைமையில் யுஐயு குழுமத்தின் கண்காணிப்பு பேரவையின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஹொங்கொங் காப்புறுதி அதிகாரசபையுடன் ஒருங்கிணைப்பு ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. குறித்த ஒப்பந்தத்தின் மூலம் யுஐயு குழுமத்தின் கண்காணிப்பு பேரவையின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டுள்ள ஏனைய காப்புறுதி ஒழுங்குபடுத்தல்ஃகண்காணிப்பு நிறுவனங்களுடன் கண்காணிப்புத் தகவல்களைப் பயனுள்ளவாறு பகிர்ந்து கொள்வதற்கு இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு வாய்ப்புக் கிடைக்கும். அதற்கமைய, இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவால் யுஐயு குழுமத்தின் கண்காணிப்பு பேரவையின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்வதற்கு ஹொங்கொங் காப்புறுதி அதிகாரசபையுடன் யுஐயு குழுமத்தின் ஒருங்கிணைப்பு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


03. உலர் வலயத்தில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான தொழிநுட்ப ஒத்துழைப்புக் கருத்திட்டத்தை அமுல்படுத்தல்
உலர் வலயத்தில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான தொழிநுட்ப ஒத்துழைப்புக் கருத்திட்டமொன்றை, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையின் (துஐஊயு) 300 மில்லியன் ரூபாய்கள் நன்கொடையின் கீழ் 03 ஆண்டுகளுக்கு அமுல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இக்கருத்திட்டத்தின் மூலம் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் நாளொன்றுக்கு 20 லீற்றர் தொடக்கம் 100 லீற்றர் வரைக்கும் உற்பத்தி செய்யக்கூடிய பால் பண்ணை தொழில்முயற்சியாளர்களை இலக்கு வைத்து, பால் பண்ணையாளர்களுக்கான பயிற்சி மற்றும் கற்கை நிகழ்ச்சித்திட்டங்களை உருவாக்குதல், பொருத்தமான தொழிநுட்ப முறைகளை அறிமுகப்படுத்தல், புற்கள் வளர்ப்பு மற்றும் விநியோகத்தைப் பலப்படுத்தல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்புடன் கூடிய பால் உற்பத்தி மற்றும் நுகர்வை அதிகரித்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கருத்திட்டத்தின் கீழ் குறித்த 04 மாகாணங்களில் ஒவ்வொரு மாகாணத்திலும் 02 மாவட்டங்கள் தெரிவு செய்யப்படுவதுடன், அந்தந்த மாவட்டங்களிலுள்ள கால்நடை மருத்துவப் பிரிவுகள் 03 வீதம் தேர்ந்தெடுத்து, அக்கால்நடை மருத்துவப் பிரிவுகளில் மொத்தம் 24 மாதிரிப் பால் பண்ணைகளைத் தாபிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள உலர் வலயத்தில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான தொழிநுட்ப ஒத்துழைப்புக்கள் கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


04. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளின் ஒழுங்குபடுத்தல் நிர்வாகத்தைப் பலப்படுத்துவதற்காக தேசிய ஒழுங்குபடுத்தல் மறுசீரமைப்புப் பேரவையைத் தாபித்தல்
தனியார் துறையின் விருத்தியை ஒழுங்கமைக்கும் போது, முதலீட்டுத் தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்தல், ஒட்டுமொத்த வணிகப் போட்டித்தன்மையை அதிகரிப்பதில் இலங்கையின் ஒழுங்குமுறைப்படுத்தும் சூழல் முக்கிய பங்காற்றுகின்றது. எமது நாட்டின் பொருளாதாரத்தின் கூறுகள் பலமாக இருப்பினும், தற்போது காணப்படுகின்ற ஒழுங்குபடுத்தல் மட்டுப்பாடுகள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளை முறையற்ற வகையில் தாக்கம் செலுத்துவதுடன், முதலீடுகளை மேற்கொள்ளக்கூடிய நாடாக இலங்கை திகழ்வதற்கும் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, கைத்தொழில் மற்றும் தொழில்;முயற்சி அபிவிருத்தி அமைச்சு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன், இலங்கையின் ஒழுங்குபடுத்தல் பணிச்சட்டகம் தொடர்பாக விபரமான மதிப்பீடொன்றை மேற்கொண்டுள்ளதுடன், அந்தந்த தரப்பினர்களுடன் மேற்கொள்ளப்பட்ட விரிவான கலந்துரையாடல்களின் பின்னர், தேசிய ஒழுங்குபடுத்தல் மறுசீரமைப்பு செயற்பாட்டுத்திட்டம் மற்றும் அதன் செயற்பாட்டுப் பொறிமுறை தயாரிக்கப்பட்டுள்ளது. இச்செயற்பாட்டுத் திட்டத்தின் மூலம் நடைமுறை ரீதியான செயற்பாடுகள் பல விதந்துரைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த விதந்துரைகளை குறுகியகால, நடுத்தரக்கால மற்றும் நீண்டகால சட்டகத்திற்கமைய முன்னுரிமைப்படுத்தி வரிசைக்கிரமமாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இச்செயற்பாட்டுத் திட்டத்தை அமுல்படுத்தல், செயற்படுத்தல் மற்றும் கண்காணிப்புக்கான மத்தியப்படுத்தப்பட்ட நிறுவனப் பொறிமுறையாக தேசிய ஒழுங்குபடுத்தல் மறுசீரமைப்பு பேரவையைத் தாபிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, கௌரவ ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இப்பேரவையைத் தாபிப்பதற்கும், அதன் செயலகமாக தத்தமது அமைச்சுக்களைப் பெயரிடுவதற்கும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


05. இலங்கையின் குடிவரவு தொழிலாளர் புலம்பெயர் கொள்கையைத் தயாரித்தல்
எமது நாடு இதுவரை காலமும் முக்கியமாகக் கவனம் செலுத்தியது, இலங்கையர்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்ள் தொடர்பான முகாமைத்துவம் தொடர்பானதாக இருப்பினும், தற்போது எமது நாட்டின் பொருளாதாரத்தில் ஒருசில துறைகளுக்கான நிபுணத்துவமுடைய, பகுதியளவு நிபுணத்துவமுடைய மற்றும் விசேட நிபுணத்துமுடைய வெளிநாட்டு தொழிலாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான வேண்டுகோள்கள் முன்வைக்கப்படுகின்றன. தற்போது எமது நாட்டில் வெளிநாட்டு குடிவரவுத் தொழிலாளர்களை ஒழுங்குமுறைப்படுத்தல்களை பல்வேறு நிறுவனங்கள் கூலம் அமுல்படுத்தப்படும் பல்நிலை நிர்வாக நடவடிக்கைமுறைகளைக் கடைப்பிடித்து மேற்கொள்ளப்படுகின்றது. எமது நாட்டில் வெளிநாட்டு குடிவரவு தொழிலாளர்களின் புலம்பெயர்வு தொடர்பான தரவுகளை மத்தியமயப்படுத்தப்பட்ட தகவல் கட்டமைப்பில் உட்சேர்ப்பதன் மூலம் முறைசார்ந்த ஒழுங்குபடுத்தலை மேற்கொள்ள வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு இலங்கைக்கான குடிவரவு தொழிலாளர் புலம்பெயர்வு கொள்கையைத் தயாரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இக்கொள்கை மூலம் தொழில்வாய்ப்புக்களுக்காக இலங்கைக்கு வருகை தருகின்ற வெளிநாட்டு தொழிலாளர்களை உள்வாங்கல், அவர்களைத் தொழிலில் ஈடுபடுத்தல், கண்காணித்தல், பாதுகாப்பு வழங்குதல் மற்றும் ஒழுங்குபடுத்தல் பணிகளை ஒருங்கிணைக்கப்பட்டதும் வெளிப்படைத்தன்மையுடன் கூடியதுமான முறைசார்ந்த தேசிய பணிச்சட்டகமொன்று தாபிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதன்மூலம் இலங்கைத் தொழிலாளர்களின் வாய்ப்புக்கள் பாதுகாக்கப்படுல் உறுதிப்படுத்தப்படும். அதற்கமைய, இலங்கைக்கான குடிவரவு தொழிலாளர் புலம்பெயர் கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கும், அதற்கான கொள்கை வரைபைத் தயாரிப்பதற்கும் தொழில் அமைச்சின் செயலாளரின் தலைமையில் செயற்பாட்டுக் குழுவொன்றை நியமிப்பதற்கும் தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


06. இலங்கைக்கான விரிவான தேசிய புலமைச் சொத்துக் கொள்கையைத் தயாரித்தல்

தற்போதுள்ள 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்துச் சட்டத்தின் கீழ் புலமைச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான விரிவாக சட்ட ரீதியான பணிச்சட்டகம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆயினும், எமது நாட்டின் புலமைச் சொத்து முறைமையில் ஒருசில கட்டமைப்பு ரீதியானதும் செயற்பாட்டு ரீதியானதுமான சவால்கள் காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையின் தேசிய புலமைச்சொத்து அலுவலகத்திற்கு மேலதிகமாக அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்கள் சிலவும் புலமைச்சொத்து முறைமையில் துணை வகிபாங்குகளை வகிப்பதுடன், குறித்த நிறுவனங்களுக்கிடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாமை அவதானிக்கப்பட்டுள்ளது. அதனால், தெளிவான மூலோபாய திசைமுகப்படுத்தல்களை வழங்கல் மற்றும் இலங்கையின் புலமைச் சொத்துக்களை பயனுள்ள வகையில் அபிவிருத்தி செய்தல் மற்றும் பயன்படுத்தல் போன்றவற்றுக்கு தேசிய புலமைச் சொத்துக்கள் தொடர்பான கொள்கையொன்றின் தேவை அடையாளங் காணப்பட்டுள்ளது. அவ்வாறான கொள்கையின் மூலம் சர்வதேச ரீதியான சிறந்த நடைமுறைகள் பற்றி சரியான வகையில் கவனம் செலுத்தல், தேசிய விருப்புக்களைப் பாதுகாத்தல், பொருத்தமான கொள்கை ரீதியான தளங்களைப் பாதுகாத்தல் மற்றும் புத்தாக்கம், அறிவு, பரப்புரை மற்றும் பொது நலன் விருத்தி உள்ளிட்ட உள்நாட்டு முன்னுரிமைகளை நிறைவேற்றுவதற்கான வாயப்புக்களை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்விடயங்களை கருத்தில் கொண்டு, இலங்கைக்கான விரிவான தேசிய புலமைச் சொத்து கொள்கையை வகுப்பதற்காக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


07. இலங்கைக்கான விண்வெளிக் கொள்கையை வகுத்தல்
விண்வெளித் தொழிநுட்பம் மற்றும் அதன் நடைமுறைகள் அனர்த்த முகாமைத்துவம், தொடர்பாடல், பாதுகாப்பு, சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் பொருளாதார புத்தாக்கம் போன்ற முக்கியமான துறைகள் ஊடாக குறிப்பிடத்தக்களவு பயன்களைப் பெற்றுத்தந்து தேசிய அபிவிருத்திக்கு தற்போது அத்தியாவசியமான காரணியாக மாறியுள்ளது. நாளாந்தம் விருத்தியடைந்து வரும் விண்வெளி தொழிநுட்ப மூலோபாய முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அதற்காக எமது நாட்டில் ஒருங்கிணைந்த தேசிய பணிச்சட்டகமொன்றின் தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதனால், விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சால் தேசிய விண்வெளிக் கொள்கையை வகுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. உத்தேச கொள்கை மூலம் சர்வதேச ஒத்துழைப்புக்களை முறைமைப்படுத்தல் மற்றும் அதற்கான வசதிப்படுத்தல், உலகளாவிய விண்வெளி நிர்வாகப் பொறிமுறையில் இலங்கையின் விளைதிறனை அதிகரித்தல் மற்றும் அனைத்து தேசிய விண்வெளி செயற்பாடுகளின் சர்வதேச கடப்பாடுகள், ஒப்பந்தங்கள் மற்றும் தரநியமங்களுக்கமைய செயற்படுவதை உறுதிப்படுத்துவதற்கான இயலுமை கிட்டும். அதற்கமைய, விண்வெளி தேசிய கொள்கைளை வகுப்பதற்கு விசேட தொழிநட்ப அறிவுடன் கூடிய விசேட நிபுணத்துவக் குழுவை நியமிப்பதற்கு விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சர் அவர்கள் சமர்;ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


08. 2026 ஆம் ஆண்டின் முதலாம் அரையாண்டு நீர்க் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ளாதிருத்தல்
2024.07.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட நீர்க்கட்டண சமன்பாட்டுக்கமைய பிரதான செலவுக் காரணிகளில் ஏற்படுகின்ற மாற்றங்களைக் கருத்தில் கொண்டு நீர் விற்பனை அலகொன்றுக்கான செலவின் அரையாண்டு மீளாய்வு செய்யப்பட வேண்டியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் நிதிக் கூற்றுக்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வின்படி, சமகால நீர்க் கட்டணத்தின் மூலம் முழுமையான தொழிற்பாட்டுச் செலவுகளை ஈடு செய்யக்கூடியதாக இருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால், 2026 ஆம் ஆண்டின் முதல் 06 மாதங்களில் நீர் விற்பனை அலகொன்றுக்கான செலவை அதிகரிக்காமல் பேணிச் செல்வதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது. அத்கமைய, 2026 ஆம் ஆண்டின் முதல் 06 மாத காலத்தில் சமகால நீர்க்கட்டணத்தைத் திருத்தம் செய்யாமல் பேணிச் செல்வதற்காக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. 2026 ஆம் ஆண்டு சிறுபோகச் செய்கைக்கு தேவையான 15,000 மெற்றிக்தொன் உரம் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கமநல சேவைகள் செயற்குழு மூலம் கொள்வனவு செய்தல்
2026 சிறுபோகச் செய்கையில் 550,000 ஹெக்ரெயார் வயல் காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றமை மதிப்பீடு செய்யப்பட்டிருப்பினும், குறித்த வயல் காணிகள் 450,000 – 500,000 ஹெக்ரெயார்களென தற்போது மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு 75,000 மெற்றிக்தொன் தேவையெனக் கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள உரக் களஞ்சிய இருப்புக்களிலிருந்து தற்போது 48,297.87 மெற்றிக்தொன் கமநல சேவைகள் செயற்குழு மூலம் கொள்வனவு செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றது. 2026 சிறுபோகச் செய்கைக்கு கட்டுப்பாட்டு விலையில் உர விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக 50 கிலோகிராம் யூரியா உரப்பையொன்றை 10,200ஃ- ரூபாய்களுக்கு விவசாயிகளுக்கு கமநல சேவை நிலையங்கள் மூலம் வழங்குவதற்கு 2026.04.06 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 2026 சிறுபோகச் செய்கைக்கு மேலதிகமாகத் தேவைப்படும் 15,000 மெற்றிக்தொன் யூரியா உரத்தை கமநல சேவைகள் செயற்குழு மூலம் கொள்வனவு செய்து விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. மாத்தறை நில்வளா கங்கை ஊடாக உவர்நீர் அணைக் கட்டுமானத்தால் பிரதேசத்தில் நெற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களுக்கான இழப்பீடு வழங்கல்
நில்வளா கங்கை ஊடாக உவர்நீர் அணைக்கட்டு நிர்மாணிக்கின்ற காலப்பகுதியில் ஆற்றின் நீரோட்டம் தடைப்பட்டமையால் 2019 ஆம் ஆண்டு சிறுபோகம் தொடக்கம் 2022 சிறுபோகம் வரைக்குமான தொடர்ச்சியாக 07 போகங்களில் மாத்தறை மாவட்டத்தின் நெற்செய்கைக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக சரியான மதிப்பீட்டை மேற்கொண்ட பின்னர், வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள இழப்பீடுகளைச் செலுத்துவதற்காக 2025.07.07 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, விவசாயம் மற்றும் காப்புறுதிச் சபையின் நட்டஈடு செலுத்தும் பொறிமுறைக்கமைய செலவு மற்றும் நெல் விலைiயைக் கருத்தில் கொண்டு, இழப்பீட்டுத்தொகை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், 2026 வரவு செலவுத்திட்டத்தின் மூலம் 1,200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த நட்டஈட்டைப் பெற்றுக்கொள்வதற்குத் தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு கீழ்க்குறிப்பிட்டவாறு நட்டஈட்டை செலுத்துவதற்கு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

போகம்                                              ஒரு ஏக்கருக்கான   நட்டஈட்டுத் தொகை (ரூபா)
2019 சிறுபோகம் 40,000/-
2019ஃ20 பெரும்போகம் 46,860/-
2020 சிறுபோகம் 40,000/-
2020ஃ21 பெரும்போகம் 42,150/-
2021 சிறுபோகம் 49,901/-
2021ஃ22 பெரும்போகம் 58,272/-
2022 சிறுபோகம் 64,102/-

11. மாலபே – கடுவெல வீதியை (டீ 263) புனரமைத்தல்
தேசிய அதிவேக நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்தல் மற்றும் புனரமைத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி மாலபே – கடுவெல வீதியின் (டீ 263) 5.56 கிலோமீற்றர் தூரத்தை புனரமைப்பதற்கு தேசிய போட்டி பெறுகை முறையைக் கடைப்பிடித்து விலைமுறி கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக 08 விலைமுறிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த விலைமனுக்களை மதிப்பீடு செய்த பின்னர், உயர்மட்ட பெறுகைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைக்கமைய கணிசமான பதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்தபட்ச விலைமனுதாரரான ஆஃள ளுநயெசயவா நுபெiநெநசiபெ (Pஎவ) டுவன இற்கு 819 மில்லியன் ரூபாய் தொகைக்கு (பெறுமதி சேர் வரியில்லாமல்) ஒப்பந்தத்தை வழங்குவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


12. வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமானக் கம்பனியின் மயிக்றோசொஃப்ற் அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்கும் ஒப்பந்தத்தை வழங்கல்
வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமானக் கம்பனியின் மயிக்றோசொஃப்ற் அனுமதிப்பத்திரம் மற்றும் அதுசார்ந்த சேவைகளை வழங்குவதற்கான இயலுமையுடன் கூடிய தகுதி அணுமதிப்பத்திர சேவை வழங்குநரை அடையாளங் காண்பதற்கு மட்டுப்படுத்தப்பட்ட தேசிய போட்டிப் பெறுகை முறையின் கீழ் விலைமுறிகள் கோரப்பட்டுள்ளன. அதற்காக 02 விலைமனுதாரர்கள் முன்வந்துள்ளனர். குறித்த விலைமனுக்களை மதிப்பீடு செய்த பின்னர் உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில் கணிசமான பதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்தபட்ச விலைமனுதாரரான Crayon Software Lanka (Private இற்கு குறித்த ஒப்பந்தத்தை 02 ஆண்டுகளுக்கு 1.816 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வழங்குவதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


13. 'Take Care – வீதிகளில்' கருத்திட்டம் 2026 – 2028 காலப்பகுதியில் அமுல்படுத்தல்

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கண்காணிப்பின் கீழ் 'க்ளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்தின் நிதியைப் பயன்படுத்தி நாடளாவிய ரீதியில் 60 பாடசாலைகளை உள்ளடக்கியவாறு வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் மூலம் Take Care – வீதிகளில்' கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு 2025.05.19 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த அங்கீகாரத்திற்கமைய இக்கருத்திட்டம் 2025 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதனை 2026-2028 காலப்பகுதியில் தொடர்ந்து அமுல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை பொலிசின் போக்குவரத்து பொலிசின் நிர்வாகம் மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவு மற்றும் கல்வி அமைச்சின் இணைப்பாடவிதானப் பிரிவுடன் இணைந்து ஒரு ஆண்டில் 100 பாடசாலைகளை இணைத்த மிகவும் விரிவாக இக்கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கண்காணிப்பின் கீழ் வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் மூலம் 'க்ளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 833 மில்லியன் ரூபாய்களைப் பயன்படுத்தி 2026,2027 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் முன்மொழியப்பட்டவாறு கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


14. 'Healthy Food – Happy Life – ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆரோக்கியமான உணவு' தேசிய ஊடகக் கருத்திட்டத்தை அமுல்படுத்தல்
ஆரோக்கியமான வாழ்வுக்கு உணவுப் பாதுகாப்பு மாதிரிகளை பரப்புரை செய்யும் நோக்கில் 'ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆரோக்கியமான உணவு' கருத்திட்டம் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் நிதியைப் பயன்படுத்தி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மூலம் 2025 ஆம் ஆண்டில் அமுல்படுத்துவதற்காக 2025.08.11 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சிறுவர் அபிவிருத்தியின் ஆரம்பப் பருவம் தொடக்கம் வளர்ந்தோர் பருவம் வரைக்கும் போசாக்கு, நோய்த்தடுப்பு, உளநல ஆரோக்கியம் மற்றும் சுத்தமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் போசாக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்தலை நோக்கமாகக் கொண்ட 'Healthy Food – Happy Life – ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆரோக்கியமான உணவு' தேசிய ஊடக கருத்திட்டம் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மூலம் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியொதுக்கீட்டில் 600 மில்லியன் ரூபாய்களைப் பயன்படுத்தி 2026,2027 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து அமுல்படுத்துவதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


15. கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்தின் மூலம் உள்நாட்டு விவசாயிகளின் உருளைக்கிழங்குகளை நேரடியாகக் கொள்வனவு செய்து லங்கா சதொச மூலம் வாடிக்கையாளர்களுக்குவிற்பனை செய்தல்
உள்நாட்டு உருளைக்கிழங்கு விவசாயிகளை நியாய சந்தை விலையைப் பேணுவதற்காக அரசு தற்போது இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு ஒரு கிலோவுக்கு ரூபா 80ஃ- விசேட வர்த்தகப் பண்ட வரி விதித்துள்ளது. நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் அறுவடை ஆரம்பிக்கின்ற போது, இடைத்தரகர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் ஒரு கிலோ உருளைக்கிழங்குக்கு ரூபா 200ஃ- தொடக்கம் ரூபா 220ஃ- பண்ணை விற்பனை விலை விதிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து வரும் காலங்களில் அறுவடையின் அளவு அதிகரிப்பதால் குறித்த விலையில் ஏற்றத்தாழ்வு உருவாக முடியும். எமது நாட்டின் அத்தியாவசிய உணவுப் பண்டங்களின் உள்நாட்டு விநியோகம் உயர்ந்தபட்சமாகவும் பொருத்தமான வகையிலும் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்த வேண்டிய தேவையைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டு உருளைக்கிழங்கு விவசாயிகளிடமிருந்து கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக நேரடியாக உருளைக்கிழங்கு கொள்வனவு செய்வதற்கும், குறித்த இருப்பை வரையறுக்கப்பட்ட லங்கா சதொச கம்பனிக்கு விற்பனை செய்து கம்பனியின் சில்லறை விற்பனை வலையமைப்பின் மூலம் சந்தைக்கு விநியோகிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒரு உருளைக்கிழங்கு விவசாயிடமிருந்து உயர்ந்தபட்சம் 1000 கிலோகிராம் கொள்வனவு செய்வதற்கு, உத்தேச முறையை அமுல்படுத்துவதற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அவர்களும் ஒருங்கிணைந்து சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


16. வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் நாடளாவிய ரீதியில் தாபிக்கப்பட்டுள்ள வனவிலங்கு பாதுகாப்பு பிரதேச அலுவலகங்கள் மற்றும் வட்டார வன அலுவலகங்களுக்கான 181 உந்துருளிகள் கொள்வனவு செய்தல்
காட்டு யானைகள் முகாமைத்துவம் தொடர்பான கடமைகள் மற்றும் ஏனைய களநிலைக் கடமைகளை மேற்கொள்வதற்கு வனசீவராசிகள் திணைக்களத்திற்குச் சொந்தமான வனவிலங்கு பாதுகாப்பு பிரதேச அலுவலகங்கள் மற்றும் வட்டார வன அலுவலகங்களுக்குத் தேவையான வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்காக 2025.08.18 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இரட்டைரக கெப் ஊர்திகள் 16 உம், தனிரக கெப் ஊர்திகள் 84 உம் மற்றும் உழவு இயந்திரங்கள் 09 உம் கொள்வனவு செய்வதற்கான பெறுகையை வழங்குவதற்கு 2026.05.04 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த பெறுகையின் ஒருபகுதியாக 181 உந்துருளிகளைக் கொள்வனவு செய்வதற்காக தேசிய போட்டி பெறுகை முறையைக் கடைப்பிடித்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக 04 விலைமனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. குறித்த விலைமனுக்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், உயர்மட்ட பெறுகைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்தரைகளின் அடிப்படையில், கணிசமான பதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்தபட்ச விலைமனுதாரரான னுயஎனை Pநைசளை ஆழவழச ஊழஅpயலெ இற்கு 91.26 மில்லியன் ரூபாய்களுக்கு (வரியில்லாமல்) பெறுகையை வழங்குவதற்கு சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. பதில் கடமையில் நியமிக்கப்பட்ட பணிப்பாளர் நாயகங்களை அப்பதவியில் நிரந்தரமாக நியமித்தல்
திறைசேரியின் அரசி நிதிக் கொள்கைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு 2020.01.02 திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் மூலம் அப்போதைய இலங்கை திட்டமிடல் சேவையின் ஐ ஆம் தர அதிகாரியான திரு. எம்.கே.சீ.சேனாநாயக்க அவர்களை முழுநேர பதில்கடமை அடிப்படையில் நியமிப்பதற்கும், 2024.12.09 திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் மூலம் அப்போதைய இலங்கை திட்டமிடல் சேவையின் ஐ ஆம் தர அதிகாரியான திரு. பீ.எம்.கே.ஹெட்டியாராச்சி அவர்களை அபிவிருத்தி நிதித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு முழுநேர பதில்கடமை அடிப்படையில் நியமிப்பதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை திட்டமிடல் சேவை பிரமாணக் கோவையின் ஏற்பாடுகளுக்கமைய 2026.01.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த இரண்டு அதிகாரிகளையும் இலங்கை திட்டமிடல் சேவையின் சேவை மூப்பின் அடிப்படையில் அரச சேவைகள் ஆணைக்குழுவால் தரமுயர்த்தப்பட்டுள்ளனர். அதற்கமைய, 2026.01.01 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில், திரு. எம்.கே.சீ.சேனாநாயக்க அவர்களை அரசி நிதிக் கொள்கைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கும், திரு. பீ.எம்.கே.ஹெட்டியாராச்சி அவர்களை அபிவிருத்தி நிதித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கும், நிரந்தரமாக நியமிப்பதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


18. இரத்தினபுரி நிர்வாக மாவட்டத்திற்கான மாவட்டச் செயலாளர்ஃஅரசாங்க அதிபர் பதவிக்கு நியமித்தல்

இரத்தினபுரி நிர்வாக மாவட்டத்திற்கான மாவட்டச் செயலாளர்ஃஅரசாங்க அதிபர் பதவிக்கு திரு. கே.ஜீ.எஸ்.சிநாந்த அவர்கள் 2026.04.27 திகதி தொடக்கம் கேகாலை மாவட்டச் செயலாளர்ஃஅரசாங்க அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டமையால், இரத்தினபுரி நிர்வாக மாவட்டத்திற்கான மாவட்டச் செயலாளர்ஃஅரசாங்க அதிபர் பதவி வெற்றிடமாக உள்ளது. அதற்கமைய, இலங்கை நிர்வாக சேவை விசேட தர அதிகாரியான திரு. எம்.ஜீ.லலித் ஆனந்த அவர்களை இரத்தினபுரி நிர்வாக மாவட்டத்திற்கான மாவட்டச் செயலாளர்ஃஅரசாங்க அதிபர் பதவிக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்கு பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


19. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பயங்கரவாதச் செயல்கள் மற்றும் அதுசார்ந்த செயற்பாடுகளால் உயிரிழந்த, இயலாமைக்குட்பட்ட இலங்கை பொலிசின் (விசேட அதிரடிப்படை உள்ளிட்ட) மற்றும் முப்படையினரை திட்டவட்டமாக அடையாளங் காணல் மற்றும் அவர்களுக்கான சலுகைகளை வழங்குதல்

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பயங்கரவாதச் செயல்கள் மற்றும் அதுசார்ந்த செயற்பாடுகளால் உயிரிழந்த, இயலாமைக்குட்பட்ட இலங்கை பொலிசின் (விசேட அதிரடிப்படை உள்ளிட்ட) மற்றும் முப்படையினரை திட்டவட்டமாக அடையாளங் காணல் மற்றும் அவர்களுக்கான சலுகைகளை வழங்கும் நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்காக மேற்கொள்ள வேண்டிய மற்றும் அவ்வாறான சலுகைகளை வழங்குவதற்கு இதுவரை அவ்வப்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளை அனைத்துக்கும் பதிலாக பொதுவான சுற்றறிக்கையொன்றை வெளியிடுதல் பற்றிய விதந்துரைகள் உள்ளிட்ட அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்காக 2025.07.14 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த குழுவால் தமது அவதானிப்புக்கள் மற்றும் விதந்துரைகள் அடங்கிய அறிக்கை 2026.05.12 அன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இதுவரைக்கு அடையாளங் காணப்பட்டுள்ள தரப்பினர்களுக்கு செலுத்தப்படும் கொடுப்பனவுகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில், இக்குழுவின் விதந்துரைக்கமைய முப்படையினருக்கு, இலங்கை பொலிசுக்கு மற்றும் விசேட அதிரடிப்படைக்கு ஏற்புடையவாறு புதிதாக அடையாளங் காணப்பட்ட தரப்பினர்களுக்கு சலுகைகளை உரித்தாக்குவதற்கான சுற்றறிக்கை ஆலேசனைகளை வெளியிடுவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


20. மோட்டார் வாகன இறக்குமதியின் போது அறவிடப்படும் இறக்குமதி சுங்க வரி மீதான 50மூ மிகைவரியை அறவிடுதல் தொடர்பான ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவுகின்ற யுத்தச் சூழலால் அனைத்து இறக்குமதிச் செலவுகளும் அதிகளவில் அதிகரித்துள்ளதுடன், அதனால் தேசிய பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்துகின்ற எதிர்மய தாக்கங்களைச் சமப்படுத்துவதற்காக துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கமைய, 2026.05.16 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில், வாகன இறக்குமதியை மட்டுப்படுத்தாமல், வாகன இறக்குமதியின் போது சுங்கக் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய தற்போது அறவிடப்படுகின்ற 30மூ வீதமான இறக்குமதி சுங்க வரி (ஊரளவழஅ ஐஅpழசவ னுரவல) இன் அடிப்படையில் 50மூ மிகைவரி விதிப்பை 03 மாத காலத்திற்கு மாத்திரம் செல்லுபடியாகும் வகையில் வலுவாக்கம் செய்து, அதற்குரிய ஒழுங்குவிதிகள் 2026.05.15 திகதிய 2488ஃ56 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, 2026.05.15 திகதிய ஒழுங்குவிதிகள் 2026.05.16 இன் பின்னர் வாகன இறக்குமதிக்காகத் திறக்கப்படுகின்ற கடன் பத்திரங்களுக்கு மாத்திரம் ஏற்புடையாவதுடன், அதன்மூலம் அதற்கு முன்னர் வாகன இறக்குமதிக்காக திறக்கப்பட்ட கடன் பத்திரங்களுக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது. அத்துடன், 2026.05.17 திகதி வெளியிடப்பட்டுள்ள 2488ஃ69 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், 2026.05.15 திகதி அல்லது அதற்கு முன்னர் திறக்கப்பட்ட கடன் பத்திரங்களுக்குரிய இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்களின் எண்ணிக்கை, வாகன அடையாள இலக்கம், வாகன விபரம் அல்லது வாகன தொழிநுட்ப விபரக்குறிப்புக்கள் போன்றவற்றில் ஒன்றையோ அல்லது பலவற்றையோ 2026.05.15 திகதிக்கு பின்னர் திருத்தம் செய்யப்பட்டால், மேற்குறிப்பிட்ட மிகைவரியை குறித்த வாகனங்களுக்கு ஏற்புடையதாக்கி ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய, தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள அதிகளவான வாகனங்களில் விலையில் மாற்றங்கள் ஏற்படாத வகையிலும் மற்றும் எதிர்வரும் 03 மாதங்களில் வாகன இறக்குமதியை மட்டுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேற்படி மிகைவரி விதிப்பு மற்றும் வாகன இறக்குமதியை ஒழுங்குமுறைப்படுத்துவதற்குரிய ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

Related Articles