2023.08.01 ஆம் திகதி முதல் 2024.08.31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சத்தியப்பிரமாண மொழிபெயர்ப்பாளர் பரீட்சைக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கான பரீட்சை 2025.01.18 ஆம் திகதி நாளை கொழும்பு 10, ஆனந்தா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
பரீட்சைக்காக தகைமை பெற்ற விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல், பரீட்சை நேர அட்டவணை என்பன www.moj.gov.lk எனும் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் பரீட்சை அனுமதிப் பத்திரத்தை குறித்த இணையத்தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
மேலதிக விபரங்களுக்காக அவசியமாயின் 0112-446185 என்ற தொலைபேசி இலக்கத்திலும் தொடர்பு கொள்ளலாம்.