நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக அனுராதபுரம் மாவட்டத்தின் பதவிய, புத்தன்கல பிரதேசங்களில் கடற்படையின் அனர்த்த நிவாரணக் குழுக்கள் 2 ஐ தயார் நிலையில் வைப்பதற்கு கடற்படையினரால் ஜனவரி 15 ஆம் திகதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது அந்த நிவாரணக் குழுக்கள் புத்தன்கல பிரதேசத்தில் அதிக மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன.
அசாதாரண காலநிலை காரணமாக அதிக மழையினால் பதவிய, மாஒயா நீர் வழிந்து ஓடுகின்றமையினால் அப்பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள எச்சரிக்கை யினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண குழுக்கள் 2 உயிர் காக்கும் உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி இந்த நிவாரண குழுக்கள் இன்று (19) காலை நீரில் மூழ்கிய பதவிய புத்தன்கல வீதியின் ஊடாக அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கான வசதிகள் உட்பட அனர்த்த நிவாரண உதவிகளை மேற்கொண்டனர்.
மேலும் நாட்டை பாதிக்கும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள எச்சரிக்கை யினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான நிவாரண உதவிகளை விரைவாக வழங்குவதற்காக அத்தியாவசியமான இடங்களில் கடற்படையினருக்கு மேலதிகமாக 50 நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.