இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத்தளபதியாக மேஜர் ஜெனரல் யூ.எல்.ஜே.எஸ் பெரேரா ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சி அவர்கள் அதிகாரப்பூர்வமாக கடமைகளை ஏற்றுக்கொண்டார். அவரது புதிய நியமனத்தின் குறிக்கும் வகையில், மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில், ஆரம்ப சம்பிரதாயங்கள் 2025 ஜனவரி 10 ஆம் திகதி நடத்தப்பட்டன.
அதைத் தொடர்ந்து 2025 ஜனவரி 16 அன்று பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை, அணிவகுப்பு மரியாதை, மரக்கன்று நாட்டுதல், படையினருக்கான உரை, அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரம் மற்றும் முகாம் ஆய்வு ஆகிய சம்பிரதாய நிகழ்வுகள் நடைபெற்றன.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.