இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் (SLCG) ஒன்பது (09) உட்பட பத்து (10) இலங்கை அதிகாரிகள், மாலத்தீவு கடலோர பாதுகாப்பு படை மற்றும் மாலத்தீவு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் பங்கேற்பாளர்களுடன் IMO நிலை 1 மற்றும் நிலை 2 பயிற்சியை வெற்றிகரமாக முடித்தனர். கூட்டு இயற்கை பாதுகாப்பு குழு (JNCC) வுடன் இணைந்து அம்பிபார் (Ambipar) ஏற்பாடு செய்த இந்த பயிற்சிக்கு சமுத்திர நாட்டு கூட்டாண்மை திட்டம் (OCPP) நிதியுதவி அளித்ததாக SLCG ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எண்ணெய் கசிவு மீட்பு உத்திகளை மேம்படுத்துதல், பயனுள்ள சம்பவ கட்டளை அமைப்புகளை நிறுவுதல் மற்றும் களப் பயிற்சிகளின் போது கூட்டு நடைமுறை தீர்வுகளை செயல்படுத்துதல் போன்ற அம்சங்களில் இப் பயிற்சியின் போது கவனம் செலுத்தப்பட்டது. பங்கேற்பாளர்கள் மாலத்தீவு துறைமுகங்களில் தனித்த தீவு ஒன்றிலும் பூம்கலின் பயன்பாடு, வெயர் ஸ்கிம்மர்களை இயக்குதல் மற்றும் உருவகப்படுத்தப்பட்ட எண்ணெய் கசிவு சூழ்நிலைகளைச் சமாளிக்க மாலத்தீவு கடலோர காவல்படை சொத்துக்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல நடைமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இந்த பயற்சி SLCG மற்றும் மாலத்தீவு கடலோர காவல்படை இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறிக்கிறது. பகிரப்பட்ட சவால்களை நிவர்த்தி செய்வதிலும் கடல் சூழலைப் பாதுகாப்பதிலும் திறன் மேம்பாடு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.