இலங்கையின் ஏற்றுமதியாளர் ஒருவர் பெறக்கூடிய மிக உயர்ந்த விருதான, ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் விழா, 2025 பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற உள்ளது.
இந்த ஆண்டு விருதுகள் வழங்கும் விழாவில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில், 2023ஃ24 நிதியாண்டிற்கான ஏற்றுமதித் துறையில் முழுமையாகவும், தனித் தனியாகவும் பொருட்கள் மற்றும் சேவைத் துறையிலும் அதிவிசேட முன்னேற்றத்தைக் காட்டிய சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த ஆண்டுக்கான ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் வழங்கும் விழா, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியின் வழிகாட்டுதலின் கீழ், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மற்றும் அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர ஆகியோரின் ஆலோசனைக்கமைய, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மங்கள விஜேசிங்கவின் மேற்பார்வையின் கீழ், ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.