இலவசமாக கிடைக்கும் இந்த வேலைகளுக்கு இன்றே விண்ணப்பிக்கவும் - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்.
குறிப்பிட்ட விசேட திறமையுள்ள பணியாளர்கள் திட்டத்தின் (SSW) கீழ் ஜப்பானில் செவிலியர் பராமரிப்புத் துறையில் இலங்கையர்களுக்கு பல வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அந்த வேலைகளுக்கு தேவையான தகுதிகளை பூர்த்தி செய்தவர்கள் அவற்றுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஜப்பானில் வேலை தேடுபவர்களுக்கு அறிவித்துள்ளது.
பணியகத்திற்கும் ஜப்பானின் IM Japan நிறுவனத்திற்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, 18-35 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு இந்த வேலை வாய்ப்புகள் இலவசமாக கிடைக்கப்பெறும்.
இந்த வேலை வாய்ப்புகள் 5 வருடங்களுக்கு கிடைப்பதோடு, குறைந்தபட்ச சம்பளமாக ரூ.400,000.00 க்கும் அதிகமான தொகையை சம்பாதிக்க முடியும். ஜப்பானியர்களுக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் இந்த வேலைகளில் உள்ளவர்களுக்கும் கிடைக்கும் என்பது இந்த வேலைகளின் தனிச்சிறப்பாகும்.
இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, ஜப்பானிய மொழி அறிவு கட்டாயமானதாகும், மேலும் JFT அல்லது JLPT N4 நிலை மற்றும் திறன் தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருப்பது கட்டாயமானதுடன், உடலில் Tattoo இல்லாமல் இருத்தலும் அவசியமானதாகும்.
மேலே உள்ள தகுதிகளை பூர்த்தி செய்த வேலை தேடும் இளைஞர், யுவதிகள் பணியகத்தின் இணையதளத்தில் உள்ள இணைய போர்டல் மூலம் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.