பெரஹெரவில் காணும் ஐக்கியம் மாற்றத்திற்குரிய நாட்டை உருவாக்கவும் தேவையானது - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

பெரஹெரவில் காணும் ஐக்கியம் மாற்றத்திற்குரிய நாட்டை உருவாக்கவும் தேவையானது - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய
  • :

பெரஹெர இடம்பெறும் போது காணும் ஐக்கியம் மாற்றத்திற்குரிய நாட்டை உருவாக்குவதற்கு தேவையானதெனவும் இது தனிமைப்படுத்தப்பட்ட செயற்பாடு அல்ல எனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஹொரணை ரஜமஹா விகாரையின் ரைகம்புர நவம் மகா பெரஹெர வீதி உலாவின் ஆரம்ப நிகழ்வில் (01) அன்று இணைந்துகொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

மனித நாகரிகம் ஆரம்பமான நாளிலிருந்தே உலகம் முழுவதும் ஒவ்வொரு மனித சமூகமும் தமக்கான தனித்துவம்மிக்க கலாசார பெறுமதிகளைக் கொண்டு தமது அடையாளத்தை கட்டியெழுப்பியுள்ளதை மனித வரலாற்றை உற்று நோக்கும் போது எம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

பெரஹெர என்பது மதத்தின் பெறுமை போன்று அழகியல் சார்ந்த பெறுமதிகளின் ஒன்றிப்பாகும். பெரஹெர ஊர்வலம் முழுவதும் எமக்குரியவை என்ற உணர்வு அனைவர் மத்தியிலும் இருக்கும்.

அதேபோன்று, பெரஹெர என்பது தனித்தனியான நபர்களுக்காக கூட்டு மனித செயற்பாடுகளை ஒன்றிணைக்கும் ஒரு கலாசார சந்தர்ப்பமாகும். தனித்தனியான மனித தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு பதிலாக கூட்டு மனித செயற்பாடுகளே நாடு என்ற அடிப்படையில் நமக்கு தற்போது தேவைப்படுவது என நான் எண்ணுகின்றேன்
.
வறுமையின் ஆழத்திற்கு விழச் செய்துள்ள எம்மைப் போன்ற நாடு மீண்டு எழுவதற்கு இந்த ஐக்கியம் மிகவும் முக்கியமானது என நாம் நினைக்கின்றோம்.

படுகுழிக்குள் தள்ளப்பட்டுள்ள எமது நாட்டை மறுமலர்ச்சி யுகத்தை நோக்கி கொண்டு செல்வதே இன்று எமக்குள்ள சவாலாகும். குறித்த மறுமலர்ச்சி நாட்டிற்கு பொருளாதார மறுமலர்ச்சியைப் போன்று கலாசார மறுமலர்ச்சியும் மிகவும் முக்கியமானது என நான் நம்புகின்றேன்.

அனைத்து மத, கலாசார, கலை என்பவற்றை ஒன்றாக வெளிப்படுத்தக்கூடிய ஒரே தளத்தில், ஒரே இடத்தில் அனைத்து கலாசாரங்கள் மற்றும் கலாசார அம்சங்களை வெளிப்படுத்தும் அழகிய தருணமே நாம் கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்கும் ’வளமான நாடு அழகிய வாழ்வு’ உடன் கூடிய நாட்டில் எமது எதிர்கால பிரார்த்தனையாகும். எமது நாடு சிங்களம், தமிழ், முஸ்லிம், பேர்கர், மலே, பௌத்தம், கத்தோலிக்கம், இந்து, இஸ்லாம் ஆகிய அனைத்து இன மற்றும் மத நிகழ்வுகளை ஒன்றாக பார்க்கும் நாடாகும். அந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஹொரணை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய மதுராவல சோபித தேரர், பிரதம மகா சங்கத்தினர், சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, தேசிய மக்கள் சக்தியின் பிரதம செயலாளர் விசேட வைத்திய நிபுணர் நிஹல் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் ஒஷானி உமங்கா உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டுனர்.

பிரதமர் ஊடக பிரிவு

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]