இந்த ஆண்டு கண்டி மாவட்டத்தில் உள்ள குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் 3 மில்லியன் மீன் குஞ்சுகளை விடுவதற்கு மீன் வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை திட்டமிட்டுள்ளது.
இந்த மீன் குஞ்சுகள், அதிகாரசபையின் கண்டி மாவட்ட அலுவலகத்தின் வழிகாட்டுதலின் கீழ் விடப்படும். மேலும், விக்டோரியா நீர்த்தேக்கத்தில் உள்ள வலைக் கூண்டுகளில் அவை வளர்க்கப்படுகிறது.
மீன் குஞ்சுகள், அவற்றை விநியோகிக்கும் நிறுவனங்களால் வழங்கப்படுவதுடன், மீன் வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையால் மீன்கள் வளர்க்கப்பட்டு நீர்த்தேக்கங்களுக்கு அனுப்பப்படும் என்று கண்டி மாவட்ட மீன் வளர்ப்பு விரிவாக்க அதிகாரி கே.பி.ஏ.எச். குமாரசிங்க தெரிவித்தார்.
நீர்த்தேக்கங்களில் நன்னீர் மீன் தொழிலை மேம்படுத்துவதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், கண்டி மாவட்டத்தில் மீன் வளர்ப்பிற்காக ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு குளத்தின் தேவை எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அந்தத் தேவை பூர்த்தி செய்யப்பட்டால், அருகிலுள்ள பிற மாவட்டங்களுக்கும் மீன் குஞ்சுகளின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.


