இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் இடையிலான சந்திப்பு

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் இடையிலான சந்திப்பு
  • :
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்யூ டக்வொர்த் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

 உயர்ஸ்தானிகரின் முதலாவது கிழக்கு மாகாண விஜயம் இதுவாகும். இதன்போது கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள், அதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கக்கூடிய ஒத்துழைப்பு, கடல்சார் மற்றும் பிராந்திய பாதுகாப்பு, சுற்றுலா, மீன்பிடி மற்றும் விவசாயத் துறைகளின் மேம்பாடு குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், கிழக்கு மாகாணத்தின் காணி தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசாங்கமும் ஜனாதிபதியும் விசேட கவனம் செலுத்தி, மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கம் இணைந்து காணிப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பொறிமுறையைச் செயற்படுத்தி வருவதாக ஆளுநர் விளக்கமளித்தார். இலங்கையின் கைத்தொழில் மற்றும் முதலீடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், முதலீட்டாளர்களுக்குச் சாதகமான சூழல் தற்போது உருவாக்கப்பட்டுள்ள விதம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அத்துடன், இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவு வலுவாக இருப்பதாகவும், கிழக்கு மாகாணத்துடன் நெருக்கமாகப் பணியாற்றவுள்ளதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

Related Articles