விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை நிறைவு செய்த பின்னர், அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS CANBERRA (LCS 30)’ தீவிலிருந்து புறப்பட்டது
விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 2026 ஜூன் 12 ஆம் திகதி தீவிற்கு வந்தடைந்த அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS CANBERRA (LCS 30)’ ', நேற்று 2026 ஜூன் 14) தீவிலிருந்து புறப்பட்டுச் சென்றது. இதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் அக்கப்பலுக்கு பாரம்பரிய கடற்படை மரபுகளின்படி பிரியாவிடை அளித்தனர்.
மேலும், ‘USS CANBERRA’ வின் கட்டளை அதிகாரிக்கும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதிக்கும் இடையேயான உத்தியோகபூர்வ சந்திப்பு மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றது.


