மல்வத்து ஓயாவின் ஆற்றுப் படுகையில் உயர் மற்றும் தாழ்நிலப் பிரதேசங்களில் இன்று மாலை 4.00 மணியளவில் அதிக மழை பெய்துள்ளது. மேலும் அதிக மழை செய்து வருவதுடன் அதற்கு மேலதிகமாக நாச்சதீவு நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் வான் கதவுகள் திறக்கப்பட்டு தற்போது நிமிடத்திற்கு 3700 கன அடி வேகத்தில் வான் பாய்கிறது.
இந்நிலையின் அடிப்படையில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் பராமரிக்கப்படும் நிலைகளின் பகுப்பாய்வுக்கு இணங்க தற்போது இருந்து 48 மணித்தியாலங்கள் வரையான காலப்பகுதியில் வெண்கலசெட்டிக்குளம், மடு, முசாளை, நானாட்டான் போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளுக்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மல்வத்து ஓயா வைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகள் ஊடாக வெள்ள நீர் வழிந்து ஓடும் மற்றும் வெள்ளத்தில் மூழ்கியுள்ள வீதிகள் மிகவும் அவதானமிக்கவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலை தொடர்பாக மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறு அப்பிரதேசத்தில் வாழும் மக்கள் மற்றும் பிரதேசங்களுக்கு ஊடாக பயணிக்கும் வாகன ஓட்டுனர்களிடமும் நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இது தொடர்பாக அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.