மின் கட்டணம் சுமார் 20% வீதத்தால் குறைக்கப்படும் என்றும், பொதுப் பயன்பாட்டு ஆணைக் குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜயக்கொடி அறிவித்தார்.
மின் கட்டண குறைப்பு குறித்து இன்று (18) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதன்படி, ஜனவரி 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் மின் கட்டணக் குறைப்பு அமல்படுத்தப்படும் என்று நாட்டிலுள்ள அனைத்து மின்சார பாவணையாளர்களுக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
நாட்டின் அனைத்து மக்களும், குறிப்பாக ஹோட்டல் துறை மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்களும் இதனால் பெரிதும் பயனடைவார்கள் என்று நம்புவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், மின் கட்டணத்தில் ஏற்பட்டுள்ள இந்த குறிப்பிடத்தக்க குறைப்பு மக்களுக்குப் பெரும் சலுகை என்பதையும் நான் அறிவேன். மேலும் ஒரு அரசாங்கமாக, சிரமங்களை சமாளித்து மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்