நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் இலங்கை ஆசிரியர் சேவையின் அதிகாரிகளுக்கான முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை 2026

நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் இலங்கை ஆசிரியர் சேவையின் அதிகாரிகளுக்கான முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை 2026
  • :

2026 செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் இலங்கை ஆசிரியர் சேவையின் அதிகாரிகளுக்கான முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சைக்கான வர்த்தமானி அறிவித்தல் 2026.06.19 அன்று வெளியிடப்படுகிறது.

ஆசிரியர்கள் தமது பதவி உயர்வுகளுக்காக மூன்று வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சைகளுக்குத் தோற்ற வேண்டியுள்ளதுடன், அதற்காக 10 தொகுதிகளை (Modules) கற்க வேண்டும். அதன்படி, ஆசிரியர் சேவையின் 3 ஆம் வகுப்பு II ஆம் தரம், 3 ஆம் வகுப்பு I ஆம் தரம், 2 ஆம் வகுப்பு II ஆம் தரம் ஆகியவற்றிற்கு நேரடியாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை பொருந்தும் என்பதுடன், அவர்கள் 4 தொகுதிகளைக் (Modules) கற்க வேண்டும். இரண்டாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சையானது ஆசிரியர் சேவையின் 2 ஆம் வகுப்பு II ஆம் தரம் முதலாவது படி மற்றும் 2 ஆம் வகுப்பு II ஆம் தரம் மூன்றாவது படியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்குப் பொருந்தும் என்பதோடு, அவர்கள் 3 தொகுதிகளைக் (Modules) கற்க வேண்டும். மூன்றாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சையானது ஆசிரியர் சேவையின் 2 ஆம் வகுப்பு I ஆம் தர ஆசிரியர்களுக்குப் பொருந்தும் என்பதோடு, அவர்கள் மூன்று தொகுதிகளைக் (Modules) கற்க வேண்டும்.

 

2026.06.19 அன்று வெளியாகும் வர்த்தமானி அறிவித்தலானது முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சைக்கு மட்டுமே பொருந்தும். இரண்டாவது மற்றும் மூன்றாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சைகளுக்கான வர்த்தமானி அறிவித்தல்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படவுள்ளன. முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சைக்கான விண்ணப்பங்களை 2026.06.22 முதல் 2026.07.17 வரை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று ஆன்லைன் (Online) முறையில் சமர்ப்பிக்கலாம்.

 

இந்த வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சைகள் முதல் தடவையாக நடைபெறுவதால், அதற்குரிய பாடத்திட்டம் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் 'e-thaksalawa' உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றப்படும். பரீட்சைக்குத் தோற்றும் விண்ணப்பதாரர்கள் சுயாதீனமாகப் படித்துப் பரீட்சைக்குத் தோற்றுமாறு பரிந்துரைக்கப்படுவதுடன், கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் (Link) ஊடாக 'e-thaksalawa' இணையத்தளத்திற்குச் சென்று எதிர்காலத்தில் வெளியிடப்படவுள்ள பாட விடயங்களைக் கற்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

e-thaksalawa இணைப்பு: https://e-thaksalawa.moe.gov.lk/lcms/

Related Articles