மஹாவலி எச் (H) வலயத்தின் 25,000 ஹெக்டேயர் விவசாய நிலங்களுக்கு நீரை வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க கலா வெவ நீர்த்தேக்கத்தில், 42 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த நீர் கசிவுக்கு நிரந்தர தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் புனரமைப்புத் திட்டம் அண்மையில் (16) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
மஹா சங்கத்தினரின் செத் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் இந்த ஆரம்ப விழா வீடமைப்பு, நிர்மாண மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தலைமையில் நடைபெற்றது.
தற்போதைய அரசாங்கத்தின் நேரடித் தீர்மானத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் கலா வெவ நீர்த்தேக்கத்தின் கதவுகளற்ற வான்பாயும் பகுதியில் (Ungated Spillway) காணப்படும் பாரிய நீர் கசிவுகள் முற்றாகச் சீர்செய்யப்படவுள்ளன.


