பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), கராச்சியில் உள்ள பாகிஸ்தான் கடற்படை அகாடமியில் (PNA) நடைபெற்ற 122வது மிட்ஷிப்மேன் மற்றும் 30வது குறுகிய சேவை ஆணைய (SSC) பாடநெறியின் அதிகாரமளிப்பு விழாவின் போது, Sword of Honour விருதை பெற்ற இலங்கை கடற்படையின் மிட்ஷிப்மேன் T M I விமுக்தி தென்னகோனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இன்று (ஜனவரி 27) கொழும்பில் உள்ள பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சரை, மிட்ஷிப்மேன் T M I விமுக்தி தென்னகோன் சந்தித்தார். இதன் போது, பிரதி அமைச்சர் அவரின் சாதனையை பாராட்டியதுடன், தனது அறிவைப் இலங்கை கடற்படையில் உள்ள தனது சக அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்வதன் முக்கியத்துவத்தையும் மற்றும் அவர்களுடன் தலைமைத்துவத்தை வெளிப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். மேலும், இலங்கை கடற்படையில் அவரது எதிர்கால வாழ்க்கைக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட மற்றும் கடற்படை பணிப்பாளர் நாயகம்- பயிற்சி ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.