தேசிய பாதுகாப்பு கல்லூரியின் (NDC) தளபதி மேஜர் ஜெனரல் சமில முனசிங்க (ஓய்வு), இன்று (ஜனவரி 27) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
அன்பான வரவேற்பைத் தொடர்ந்து, பிரதி அமைச்சர் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் வளர்ச்சி மற்றும் தேசிய பாதுகாப்பில் அதன் பங்கை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வது குறித்து கவனம் செலுத்தி, மேஜர் ஜெனரல் முனசிங்கவுடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.