இலத்திரனியல் ஒலிபரப்பாளர்கள் சங்கம் மற்றும் ஊடக அமைச்சு இணைந்து ஒலிபரப்பு மாநாடொன்றை (Broadcasting Symposium) இலங்கையில் நடாத்துதல் தொடர்பான கலந்துரையாடல் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் மற்றும் இலத்திரனியல் ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் அண்மையில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்த ஒலிபரப்பு மாநாடு துறை சார் தொழில் வல்லுனர்களுக்கு, ஊடகவியலாளர்களுக்கு, ஊடகத்துறை சவால்கள், பொறுப்புக்கள் மற்றும் எதிர்காலத்தை எதிர்பார்த்திருப்பவர்களுக்காக வாய்ப்பாக அமைவதுடன், நெறிமுறைகளுடனான ஊடகக் கலையின் உயர் தரம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய இரண்டு துறைகளுக்காகவும் சிறந்த பயன்பாட்டை முன்னேற்றியுள்ளதாகவும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன் போது அடுத்த ஐந்து வருடங்களுக்குள் ஒலிபரப்புத் துறையின் எதிர்காலம், தற்போது காணப்படும் பிரச்சினைகளை தீர்த்தல், ஒலிபரப்பு உரிமை என்பன தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
மேலும் தீர்மானிக்கப்பட்ட இலத்திரனியல் ஒலிபரப்பு மாநாடு நான்கு அமர்வுகளுடன் ஒருநாள் செயலமர்வாக நடாத்துவதற்கும், மாநாட்டின் அமர்வுகளுக்கான நான்கு விடயங்களை உள்ளடக்கியதான தொனிப்பொருளில் நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
அவ்வாறே 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த மாநாட்டை நடத்துவதற்கு பொருத்தமாக இருக்கும் எ0ன இதன்போது திட்டமிடப்பட்டது.
அமர்வுகளின் தலைப்புக்கள் இறுதியானதாக கலந்துரையாடப்பட்டதன் பின்னர் உப குழுவை நியமிப்பதற்கும், ஒலிபரப்பு மாநாட்டை நடத்தும் போது மேற்கொள்ள வேண்டிய விடயங்களின் கீழ் பிரச்சார செயற்பாடுகள், நிதி வளப் பங்களிப்பு மற்றும் உதவிச் சேவைகள் போன்ற ஒவ்வொரு செயற்பாடுகளுக்காகவும் உப குழுக்களை நியமிப்பதற்கும் இதன் போது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மாநாட்டில் பங்கு பெற்ற முடியாத, ஒலிபரப்பு மாநாட்டிற்காக ஆர்வம் காட்டும் தரப்பினருக்காக நிகழ்நிலை முறை ஊடாக தொடர்பு கொள்வதற்கு வாய்ப்பளிப்பதன் முக்கியத்துவம், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் நிதிப் பங்களிப்பை இதற்காக பெற்றுக்கொள்ள முடியுமா என கண்டறிவதற்காக ஒலிபரப்பு மாநாட்டை நடாத்துவதுடன் ஊடகத்துறையின் ஊடகவியலாளர்களுக்காக மாத்திரம் பயிற்சி பட்டறையை நடாத்துதல் தொடர்பாக இதன் போது யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சரின் ஆலோசனையின் கீழ் இதனுடன் சம்பந்தப்பட்ட எதிர்கால செயற்பாடுகளை திட்டமிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி, திட்டமிடல் மற்றும் தகவல்) என். ஏ. கே. எல். விஜேநாயக்க, பணிப்பாளர் (அபிவிருத்தி), டபிள்யு.பி.செவ்வந்தி, பணிப்பாளர் (ஊடகம்) கே.ஜி. ஜயந்த, சட்ட அதிகாரி யுரேகா வேலாரத்ன, உதவி தகவல் பணிப்பாளர் ஹர்ஷ பி. அபேகோன், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத், இலங்கை ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் அசங்க ஜயசூரிய, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடக ஆய்வாளர் சதுரங்க ஹபுஆரச்சி,பெக்டம் நிறுவனத்தின் ஆலோசகர் மந்தன இமயில் , ஆசியப் பிராந்திய ஆலோசகர் கலாநிதி ரங்க கலன்சூரிய, ஊடக ஆய்வாளர் நாலக குணவர்தன உட்பட இலங்கை ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் அங்கத்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.