பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இலத்திரனியல் மக்கள்தொகை திட்டத்தின் கீழ் டிஜிட்டல் முறையில் தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று (08) பதுளை மாவட்ட மக்கள் செயலாளர் மேலதிக பதிவாளர் நாயகம் பிரபாத் அபேவர்தன தலைமையில் பதுளை மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் தேசியஇடம்பெற்றது.
பதுளை மாவட்டத்தில் 56 சிறுவர்களுக்கு குருத்த டிஜிடல் பிறப்பு சான்றிதழ் இதன் போது வழங்கப்பட்டது.
இச் சான்றிதழ் முதற் பிரதி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
டிஜிடல் தேசிய பிறப்பு சான்றிதழ் பாரம்பரிய கடதாசி சான்றிதழை விட நவீன மற்றும் பாதுகாப்பான ஆவணமாகும்.
அழித்து மாற்ற முடியாததாக தகவல் தரவுப் பொறிமுறையில் சேமித்து வைப்பதன் ஊடாக போலி ஆவணங்களைத் தயாரிப்பது குறைவடையும்.
சிங்கள, தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்கு முடிவதனால் பிறப்பு சான்றிதழில் வேறு மொழி பெயர்ப்பை மேற்கொள்வது அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.