அதிமேதகு ஜனாதிபதியின் கருத்திற்கமைய "தூய இலங்கை" தேசிய திட்டம் 2025 ஜனவரி 01 ஆம் திகதி ஆரம்பமாகியது. அதன் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக, மாத்தறை மாவட்ட செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'சேவ் நில்வலா' திட்டம் 2025 மார்ச் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், அக்குரஸ்ஸ பிரதேசத்திலுள்ள நில்வலா ஆற்றின் கரைகள் இலங்கை இராணுவத்தின் ஆதரவுடன் சுத்தம் செய்யப்பட்டன. அதன்படி, இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினர் இந்த முயற்சியில் பங்கேற்றனர்.
'சேவ் நில்வலா' திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, நில்வலா கரையோரங்களில் ஒரு மாத கால சுத்தம் செய்யும் திட்டம் 2025 ஏப்ரல் 01 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2025 மே 01 ஆம் திகதி வரை தொடரும். இராணுவக் குழு தினசரி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. 2025 ஏப்ரல் 07 ஆம் திகதி ஆற்றங்கரை இருபுறமும் சுமார் 850 மீட்டர் சுத்தம் செய்யப்பட்டது.