புத்தளம் புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதி மக்கள் பாவனைக்கு

புத்தளம் புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதி மக்கள் பாவனைக்கு
  • :
 
202 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புத்தளம் புதிய நீதிமன்ற கட்டடம் மக்கள் பாவனைக்கு வழங்கும் நிகழ்வு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தலைமையில் நேற்று (15) நடைபெற்றது.

 நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் சாம்பலினால் தயாரிக்கப்பட்ட கற்களைப் பயன்படுத்தி இந்நீதிமன்றக் கட்டடத் தொகுதி நிருமாணம் இடம்பெற்றது.

இதன் போது, நீதவான்கள், வடமேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், புத்தளம் நகர தவிசாளர், சட்டத்தரணிகள், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles