தனியார் பாதுகாப்பு சேவை வழங்கும் நிறுவனங்களினால் செயல்படுத்தப்படும் வேலைகள் மற்றும் அவை தொடர்பாக நிலவும் பிரச்சினைகளை ஆராய்வதற்கும், அச்சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான வழிமுறையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று திங்கள் கிழமை (ஜனவரி 20) பாதுகாப்பு பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
தனியார் பாதுகாப்புத் சேவை நிறுவனங்களில் கணிசமான எண்ணிக்கையிலான ஓய்வுபெற்ற ஆயுதப்படை மற்றும் பொலிஸ் உறுப்பினர்கள் பணியாற்றுகின்றனர். தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்களின் தொழில்முறையை மேம்படுத்தல், தொழில் பாதுகாப்பை உறுதி செய்தல் அவற்றை ஒழுங்குபடுத்தல் மற்றும் உயர்தர சேவையை வழங்குவதற்கான முறையான வழிமுறையை உருவாக்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் இதன் போது கலந்துரையாடபட்டது.
இந் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (சிவில் சேவைகள் மற்றும் அபிவிருத்தி), தொழில் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துக் கொண்டனர்.