உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு விழா ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல்

உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு விழா ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல்
  • :

உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் (World Buddhist Sangha Council – WBSC) 60ஆவது ஆண்டு விழாவை நடத்துவது தொடர்பான ஏற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (15) நடைபெற்றது.

நாகானந்த சர்வதேச பௌத்த பல்கலைக்கழகத்தை மையமாகக் கொண்டு நடத்தப்படும் உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60ஆவது ஆண்டு விழா, எதிர்வரும் நவம்பர் 28 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளதுடன், அது டிசம்பர் 02 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் தேரவாதம், மகாயானம் மற்றும் வஜ்ராயனம் ஆகிய அனைத்து பௌத்த மரபுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 50 நாடுகளைச் சேர்ந்த தேரர்கள் உட்பட சுமார் 600 பிரதிநிதிகள், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று நிகாயாக்களைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் உட்பட சுமார் 5000 இற்கும் மேற்பட்ட மகா சங்கத்தினர் கலந்துகொள்ளவுள்ளனர்.

உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் ஆண்டு விழா ஏற்பாட்டுக் குழுவின் தலைவர், கலாநிதி வண. போதாகம சந்திம தேரர், அதன் தலைமைச் செயலாளர் வண. மாஇட்டிபே விமலசார தேரர் ஆகியோரின் தலைமையில், குழுவின் உறுப்பினர்களான வண. தலகல சுமனரதன தேரர், வண. இத்தேதெமளியே இந்தசார தேரர், வண. வெலமிடியாவே குணரதன நாயக்க தேரர், கலாநிதி வண. வல்மோருவே பியரதன தேரர், வண. Malai Phradhamma Vajirapanyacarya, வண. சூரியவெவ சுமேத தேரர், வண. பஸ்கொட சுமித்த தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, கம்பஹா மேலதிக மாவட்ட செயலாளர் பி. ஏ. ஏ. எஸ். வீரசேகர, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் எச். என். குமாரி ஆகியோருடன், அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்களும், பாதுகாப்புப் பிரிவினரின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Articles