வவுனியா மாவட்ட பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு ஜைக்கா (JICA) அமைப்பு ஆதரவு

வவுனியா மாவட்ட பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு ஜைக்கா (JICA) அமைப்பு  ஆதரவு
  • :

வவுனியா மாவட்டத்தில் இயங்கி வரும் பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு ஜைக்கா (JICA) அமைப்பு தனது கவனத்தை செலுத்தியுள்ளது.

வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களுக்கிடையில் காய்கறி மற்றும் பழங்களின் பரிமாற்றம் நடைபெறும் முக்கிய பொருளாதார மையமாக விளங்கும் இம்மையத்தில், நாளொன்றுக்கு சுமார் 80,000 கிலோகிராம் விவசாய உற்பத்திப் பொருட்கள் பரிமாறப்படுகின்றன.

இப் பொருளாதார மையத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன், அன்றாட வர்த்தக நடவடிக்கைகளையும் வலுப்படுத்துவதற்காக ஜப்பான் அரசின் உதவியுடன் செயல்படும் ஜைக்கா (JICA) அமைப்பு தனது கவனத்தை செலுத்தியுள்ளது.

இதுதொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில், மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத்சந்திர  ஜைக்கா அமைப்பின் பிரதிநிதிகளும் இடையே நடைபெற்றது.

இந்நிகழ்வில் வவுனியா மேலதிக மாவட்ட செயலாளர் என். கமலதாசன் உள்ளிட்ட அரச அதிகாரிகளும், வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

 

Related Articles