வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிமித்தம் புலம்பெயரும் தொழிலாளர் சமூகத்திற்கு, தரமான பயிற்சியை வழங்குவது குறித்து தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அந்தப் பயிற்சி மையங்களில் உள்ள அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், பயிற்சி பெறுபவர்களுக்கு வழங்க வேண்டிய வசதிகள் மற்றும் அவ்வாறு வழங்கப்படும் வசதிகள் உயர் தரத்தில் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்த தகவல்கள் வழங்கப்பட்டன.
இது தற்போதுள்ள பயிற்சியை மிகவும் முறையான முறையில் வழங்குவதோடு, சர்வதேச தரங்களுக்கு ஏற்ப பணியாளர்களை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பயிற்சி (indoor) பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் (பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு) சஜித் சமிந்த மற்றும் பயிற்சி (indoor) பிரிவின் முகாமையாளர், ஆனந்த பிரேமசிறி ஆகியோரும், முழு நாட்டையும் உள்ளடக்கிய. 33 தனியார் பயிற்சி நிறுவனங்களைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அலுவலர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.