திருகோணமலை சீனக்குடா விமானப்படை கலாசாலையில் (ஜனவரி 16) நடைபெற்ற விமானப்படை கெடெட் அதிகாரிகளின் பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறும் விழால் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்து கொண்டார். விழாவிற்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ வரவேற்றார்.
இவ்விழாவில் , KDU உள்வாங்கல் எண் 37 இன் 01 கெடட் அதிகாரி, KDU உள்வாங்கல் எண் 39 இன்13 கெடட் அதிகாரிகள் மற்றும் 02 பெண் கெடட் அதிகாரிகள், விமானப்படை கெடட் உள்வாங்கள் எண் 66 இன் 10 கெடட் அதிகாரிகள், கெடட் உள்வாங்கல் எண் 67 இன் 45 கெடட் அதிகாரிகள் மற்றும் பெண் கெடட் அதிகாரிகள் உள்வாங்கல் எண் 19 இன் 13 பெண் கெடட் அதிகாரிகள் உட்பட மொத்தம் 84 கெடட் அதிகாரிகள் தமது அதிகாரங்களை பிரதம அதிதியிடமிருந்து பெற்றுக் கொண்டதுடன் பாயிற்சி முடித்த 10 பைலட் அதிகாரிகளும் Flying Brevets பட்டங்களைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர் , மனிதாபிமான நடவடிக்கையின் போது உயிர் தியாகம் செய்த முப்படை வீரர்களின் மற்றும் காயமடைந்தவர்களின் தியாகத்தை பாராட்டியதோடு இன்று வெளியேறும் அதிகாரிகள், நமது தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்க எப்போதும் தயாராக இருக்கும் ஒரு சிறப்புமிக்க சேவையில் இணைகிறார்கள் என்பதை நினைவுபடுத்தினார்.
மேலும், அவர்களின் பொறுப்பிலுள்ள உள்ள மனித வளம், விமானங்கள் மற்றும் உபகரணங்கள் பொது நிதியின் மூலம் பெறப்பட்டுள்ளதால், அவர்கள் பொறுப்புடனும் பொறுப்புக்கூறலுடனும் சேவையாற்றுவதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு எடுத்துரைத்தார்.
பயிற்சியின் போது சிறந்த பெறுபேறுகளை பெற்ற கெடெட் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் விருதுகளை வழங்கினார்.
66 வது விமான கெடட் பயிற்சி நிலையத்தின் பொது கடமைகள் பைலட் பிரிவில் சிறந்த மாணவ அதிகாரிக்கான ‘Sword of Eagle’ விருது பைலட் அதிகாரி ஆர் என் ஜயலத்துக்கு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பெல் 212, பெல் 412, செஸ்னா 150, Y12, பீச்கிராஃப்ட் B 200 மற்றும் K8 விமானங்களின் விமான அணிவகுப்பு, கலாச்சார அம்சங்கள் மற்றும் விமானப்படை வீரர்களின் பாராசூட் நிகழ்ச்சியும் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.