விவசாய பணிப்பாளர் நாயகம் பதவிக்கு திருமதி. கலாநிதி. ஈ.ஆர்.எஸ்.பீ.எதிரிமான்ன நியமிக்கப்பட்டுள்ளார்

விவசாய பணிப்பாளர் நாயகம் பதவிக்கு திருமதி. கலாநிதி. ஈ.ஆர்.எஸ்.பீ.எதிரிமான்ன நியமிக்கப்பட்டுள்ளார்
  • :

விவசாய பணிப்பாளர் நாயகம் பதவிக்கு தற்போது விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் (விவசாய தொழில்நுட்பம்) பதவியில் கடமையாற்றுகின்ற இலங்கை விவசாய சேவையின் விசேடதர அதிகாரியான திருமதி. கலாநிதி. ஈ.ஆர்.எஸ்.பீ.எதிரிமான்ன அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (20.01.2025) நடைபெற்ற அமைச்சரவையில் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
விவசாய பணிப்பாளர் நாயகம் பதவியில் தற்போது கடமையாற்றுகின்ற திருமதி. கே.என்.எஸ்.ரணதுங்க அவர்கள் 2025.01.21 தொடக்கம் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles