காணி ஆணையாளர் நாயகம் பதவிக்கு தற்பாது பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் உள்நாட்டலுவல்கள் பிரிவின் மேலதிக செயலாளராக (நிர்வாகம்) கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவை விசேடதர அதிகாரியான, திரு. ஆர்.ஏ.சந்தன சமன் ரணவீர ஆராச்சி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்..
நேற்று (20.01.2024) நடைபெற்ற அமைச்சரவையில் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் (காணி) பதவியில் கடமையாற்றிய, இலங்கை நிர்வாக சேவை விசேடதர அதிகாரியான, திரு. டீ.டீ.கே.விக்கிரமராச்சி அவர்கள், அவருடைய நிரந்தரப் பதவிக்கு மேலதிகமாக 2024.12.12 தொடக்கம் காணி ஆணையாளராகப் பதில் கடமைக்கு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.