கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கான இழப்பீடு இன்று (30) முதல் வழங்கப்படும் என்று விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது.
பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பயிர் சேதத்திற்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று அதன் தலைவர் பேமசிறி ஜாசிங்கராச்சி தெரிவித்தார்.
அதன்படி, பயிர் சேதமடைந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் குறித்த நட்டஈட்டுத் தொகையை வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்;.
அதன்படி, 13,379 ஏக்கரில் உள்ள 6,234 விவசாயிகளுக்கு இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.