திருகோணமலை துறைமுகத்தை மையமாகக் கொண்டு இலங்கையை கடல்சார் மையமாக மாற்றும் திட்டம்.

திருகோணமலை துறைமுகத்தை மையமாகக் கொண்டு இலங்கையை கடல்சார் மையமாக மாற்றும் திட்டம்.
  • :

திருகோணமலை துறைமுகத்தை மையமாகக் கொண்டு இலங்கையை கடல்சார் மையமாக மாற்றும் திட்டம் - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு

புதிய அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையின்படி, இலங்கைக்கு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை துறைமுகமான திருகோணமலை துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக துறைமுக விவகார பிரதி அமைச்சர் ஜனிதா ருவன் கொடிதுவக்கு மற்றும் சிரியாவைச் சேர்ந்த கலாநிதி மௌசலாம் அல்-திராபி ஆகியோருக்கு இடையில் அண்மையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் கையாளுதல் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன, மேலும் இந்தத் துறையை மேலும் விரிவுபடுத்துவதற்காக முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்த சிரியா பிரதிநிதிகள் பிரதி அமைச்சரிடம் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் ஒரு புதிய Dry port உருவாக்குவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இலங்கையை கடல்சார் மையமாக(Maritime hub) மாற்றுவதே முக்கிய குறிக்கோள் என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]