"அசிதிசி பியவர" பொலன்னறுவை மாவட்ட ஊடகவியலாளர் செயலமர்வு வெற்றிகரமாக நிறைவடைந்தது

"அசிதிசி பியவர" பொலன்னறுவை மாவட்ட ஊடகவியலாளர் செயலமர்வு வெற்றிகரமாக நிறைவடைந்தது
  • :

ஊடகவியலாளர்களை விழிப்புணர்வூட்டும் வகையில் வெகுஜன ஊடக அமைச்சினால் மாவட்ட மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட "அசிதிசி பியவர" செயலமர்வின் ​​பொலன்னறுவை மாவட்ட ஊடகவியலாளர்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டம் கடந்த 10 ஆம் திகதி பொலன்னறுவையில் நடைபெற்றது.

ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்படும் எந்தவொரு அநீதிக்கு எதிராகவும் அரசாங்க தகவல் திணைக்களம் உறுதுணையாக நிற்கும் என்றும், தற்போதைய அரசாங்கம் அடுத்த ஆண்டு முதல் ஊடகவியலாளர்களுக்கு பல விசேட சலுகைகளை வழங்கவுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார தெரிவித்தார்.

மேலும், அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊடகங்களைக் கட்டுப்படுத்த ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது. சுதந்திரமான ஊடக சேவையொன்றை நிறுவுவதும் அவர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் சட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில், ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் பிரசன்ன பெரேரா, பொலன்னறுவை மாவட்டச் செயலாளர் சுஜந்த ஏக்கநாயக்க, உதவித் தகவல் பணிப்பாளர் திலகரத்ன லியனபடபெதிகே, தமன்கடுவ பிரதேச செயலாளர் இந்திக்க கருணாரத்ன, ஹிங்குராங்கொட பிரதேச செயலாளர் சந்தியா மல்லவ, அரசாங்க தகவல் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் பொலன்னறுவை மாவட்ட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பொலன்னறுவை மாவட்ட ஊடகப் பிரிவு

Related Articles