மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழுநோயை அகற்றுவதற்கான செயற்திட்டம் பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வரனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் தொழு நோய் தடுப்பு பிரிவின் மருத்துவ அதிகாரி கே.லுபோஜிதாவின் மேற்பார்வையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
சந்தேகத்திற்கிடமான தோலின் தெளிவான புகைப்படத்தை 077 470 4286 எனும் இலக்கத்திற்கு வாட்ஸ்அப் செய்வதினால் தொழுநோய் தொடர்பான மருத்துவ ஆலோசனை மற்றும் உதவிகள் தொழுநோய் தடுப்பு பிரிவினரினால் வழங்கப்படவுள்ளன.
நாடளாவிய ரீதியில் ஒப்பிடுகையில் தொழுநோய் பாதிப்பில் மட்டக்களப்பு மாவட்டம் மூன்றாவது இடத்தில் காணப்படுகின்றது.

தொழுநோய் பூரணமாகக் குணப்படுத்தக் கூடிய ஒரு நோயாக காணப்படுகின்ற போதிலும், மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வின்மை மற்றும் பாதிப்புக்கள் தொடர்பான தெளிவின்மையினால் சமூகத்தில் இந்நோய் பரவிச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது


