இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை மாணவர்களுக்கான மத்தியஸ்த சபை பற்றிய சமூக பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கு

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை மாணவர்களுக்கான மத்தியஸ்த சபை பற்றிய சமூக பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கு
  • :

தொழிற்பயிற்சி அதிகார சபையின் முல்லைத்தீவு பிராந்திய நிலையத்தில் பயிற்சி பெறும் மாணவருக்கான மத்தியஸ்த சபையின் செயற்பாடுகள் மற்றும் சமூக பாதுகாப்பு சபையின் செயற்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு கடந்த திங்கட்கிழமை (14) காலை மு.ப 9.00 முதல் நண்பகல் 12.00 வரை முல்லைத்தீவு பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் வளவாளராக மத்தியஸ்த சபையின் மாவட்ட உத்தியோகத்தர் திரு.ச.லக்ஸ்மன் அவர்களும் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரான திரு.க.சஞ்ஜீவன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இவர்கள் தமது விரிவுரையிலே மத்தியஸ்த சபையின் தோற்றம், செயற்பாடு, பிணக்குகளை தீர்க்கும் பொறிமுறை, என்பவற்றுடன் மத்தியஸ்த சபையின் உறுப்பினர் நியமனம் தொடர்பாகவும் மற்றும் சமூக பாதுகாப்பு சட்டம் பற்றியும் ஓய்வூதியத்திட்டங்கள் தொடர்பாகவும் இதன் நன்மைகள் பற்றியும் விளக்கமாக குறிப்பிட்டிருந்தனர்.

இந்தக் கருத்தரங்கில் தொழிற்பயிற்சி விரிவுரையாளர்களும் மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

 

Related Articles