02025.02.24 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
1. கொழும்புத் துறைமுக நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கருத்திட்ட முகாமைத்துவ அலகின் கால வரையறையை நீடித்தல்
கருத்திட்டக் கண்காணிப்பு, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணல் மற்றும் பயன்பாட்டு சேவைகள் ஒருங்கிணைப்புக்காக இலங்கை அரசு மற்றும்CHEC Port City Colombo (Pvt) Ltd நிறுவனத்தை இணைப்புச் செய்வதற்கான பிரதான அலகாக, கொழும்புத் துறைமுக நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கருத்திட்ட முகாமைத்துவ அலகு இயங்கி வருகின்றது. இக்கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள பணிகள் 2027 யூன் மாதமளவில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால், கொழும்புத் துறைமுக நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கருத்திட்ட முகாமைத்துவ அலகின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டுமென அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தின் கருத்திட்ட முகாமைத்துவ அலகின் தொழிற்பாட்டுக் காலத்தை 2027.06.05 ஆம் திகதி வரை நீடிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் (BIDTI) மற்றும் பிலிப்பைன் குடியரசின் வெளிநாட்டு சேவைகள் நிறுவனம் (FSI) இற்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
இருநாடுகளுக்கிடையிலான நல்லுறவு மற்றும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக் கொள்வதற்கும், விருத்தி செய்துகொள்ளும் நோக்கில் இலங்கை மற்றும் பிலிப்பைன் வெளிநாட்டு சேவைகள் அதிகாரிகளுக்கிடையே இராஜதந்திர களத்தரிசிப்புக் கற்கைகள், ஆய்வுகள் மற்றும் பயிற்சி வேலைத்திட்டங்களை நடாத்துதல் மற்றும் நிபுணத்துவங்களைப் பரிமாற்றிக் கொள்ளல் போன்றவற்றுக்கான வசதிகளை ஏற்பாடு செய்யும் வகையில், இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்திற்கும், பிலிப்பைன் குடியரசின் வெளிநாட்டு சேவைகள் நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்தில் இருதரப்பினரும் கையொப்பமிடுவதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. சர்வதேச சிவில் விமான சேவைகள் உடன்படிக்கைக்கான திருத்தங்களுக்கு ஏற்புடைய Article 3 bis – ஒழுங்குமுறைப் பத்திரத்தை அணுகுவதற்கான சமகால அமைச்சரவையின் கொள்கை ரீதியான அங்கீகாரத்தைப் பெறல்
பறந்து கொண்டிருக்கும் சிவில் விமானத்திற்கு எதிராக உறுப்பு நாடுகள ஆயுதங்களைப் பிரயோகிப்பதைத் தடுப்பதற்கு இயலுமாகும் வகையில் சிகாகோ உடன்படிக்கையைத் திருத்தம் செய்வதற்காக 1984.05.10 ஆம் திகதி இடம்பெற்ற சர்வதேச சிவில் விமான சேவைகள் அமைப்பின் 25 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த திருத்தத்திற்குரிய ஒழுங்குமுறைப் பத்திரம் (Artcle 3 bis Chicago Convention) 1998.10.01 தொடக்கம் நடைமுறையிலுள்ளது. சர்வதேச சிவில் விமான சேவைகள் உடன்படிக்கையின் உறுப்பு நாடுகள் குறித்த ஒழுங்குமுறைப் பத்திரத்தை அணுகுவதற்காக 2024.02.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், இதுவரை அதுதொடர்பாக எவ்வித தொடர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கிணங்க, குறித்த ஒழுங்குமுறைப் பத்திரத்தை அணுகுவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. சர்வதேச சிவில் விமான சேவைகள் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சட்டவிரோத செயல்களைத் தடுப்பதற்கான சமவாயத்தை (பீஜிங் சமவாயம், 2010) இலங்கையில் வலுவாக்கம் செய்தல்
கொலை, மோசமான உடற் காயங்களை ஏற்படுத்தல் அல்லது மோசமான தீங்குகளை ஏற்படுத்தும் நோக்கில் சிவில் விமானமொன்றைப் பயன்படுத்தல், ஏதேனும் உயிரியல், இரசாயன அல்லது அணு ஆயுதங்களை அல்லது பொருட்களை விடுவிப்பதற்காக சிவில் விமானங்களைப் பயன்படுத்தல், ஏதேனும் உயிரியல், இரசாயன அல்லது அணு ஆயுதங்களை அல்லது அதற்கு ஒத்ததான பொருட்களை விமானத்தில் அல்லது சிவில் விமானத்திற்கு எதிராகப் பயன்படுத்தல் போன்ற செயல்கள் குற்றவியல் குற்றமாகக் குறிப்பிட்டு சர்வதேச சிவில் விமான சேவைகள் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சட்டவிரோத செயல்களைத் தடுப்பதற்கான சமவாயம் (பீஜிங் சமவாயம், 2010) 2010.09.10 அன்று பீஜிங் இல் இடம்பெற்ற விமானச் சட்டங்கள் தொடர்பான சர்வதேச மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவ்வாறான குற்றங்கள், எமது நாட்டில் தற்போது வலுவாக்கத்திலுள்ள 1996 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க சர்வதேச விமான சேவைகளின் போது சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் சட்டத்தின் ஏற்பாடுகளில் உள்வாங்கப்படாததுடன், பீஜிங் சமவாயத்தை வலுவாக்கம் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக 2022.05.02 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தைத் தயாரிப்பதைத் துரிதப்படுத்தி பூர்த்தி செய்வதற்கு இயலுமாகும் வகையில் சமகால அமைச்சரவையின் கொள்கை ரீதியான அங்கீகாரத்தை வழங்குவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 'தேசிய மகளிர் வாரத்தை' பிரகடனப்படுத்தல்
ஐக்கிய நாடுகள் சபையால் 1977 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 08 ஆம் திகதியை சர்வதேச மகளிர் தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. அன்று தொடக்கம் இன்று வரை ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து உறுப்பு நாடுகளும் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 08 ஆம் திகதி மகளிர் தினத்தைக் கொண்டாடுகின்றது. இம்முறை சர்வதேச மகளிர் தினம் 'அனைத்துப் பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகளுக்காக : உரிமைகள், சமத்துவம், வலுப்படுத்தல்' எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படுகின்றது. அதற்கு இணையாக 'மாதருக்கு நிலைபேறான எதிர்காலம் - மாதரின் வல்லமையே எமது வழிகாட்டி' எனும் தொனிப்பொருளில் 2025 பங்குனி மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் 08 ஆம் திகதி வரை 'தேசிய மகளிர் வாரமாகப்' பிரகடனப்படுத்துவதற்கு சர்வதேச மகளிர் தினத்தின் தேசிய நிகழ்வுகள் உள்ளடங்கலாக தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்திலான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நல்லுறவைக் கொண்டாடுமுகமாக முத்திரை வெளியிடுவதற்காக இலங்கை அஞ்சல் திணைக்களம் மற்றும் பாகிஸ்தான அஞ்சல் நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 75 ஆண்டு நிறைவின் நல்லுறவை முன்னிட்டு 02 நினைவு முத்தரைகளை வெளியிடுவதற்கு இருதரப்பும் உடன்பட்டுள்ளது. அதற்கிணங்க, இருநாடுகளின் அஞ்சல் நிர்வாக நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக 2024.10.21 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கியுள்ளது. உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கமைய இருநாடுகளிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த வணக்கத்தலங்களை எடுத்துக்காட்டும் வகையில் முத்திரைகளைத் தயாரிப்பதற்கும், வெளியிடுவதற்குமான 5000 முத்திரைகள் மற்றும் 2000 முதல் நாள் முகவட்டைகளையும் (குசைளவ னுயல ஊழஎநச யுடடிரஅ) இரு நாடுகளுக்கிடையில் பரிமாற்றிக் கொள்வதற்கும், இலங்கை அஞ்சல் திணைக்களம் மற்றும் பாகிஸ்தான் அஞ்சல் நிறுவனமும் உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இதுவரை கையொப்பமிடப்படாமையால் அதற்கு சமகால அமைச்சரவையின் கொள்கை ரீதியான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கும், உத்தேச ஒப்பந்தத்தில் இம்மாத இறுதியில் கையொப்பமிடுவதற்கும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. வறுமையை ஒழிப்பதற்காக பல்வித அணுகுமுறைகளைக் கொண்ட ஒருங்கிணைந்த வேலைத்திட்டமாக 'பிரஜா சக்தி' வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
தற்போது இலங்கையின் ஒட்டுமொத்த சனத்தொகையில் 06 பேரில் ஒருவர் பல்பரிமாண வறுமைக்குட்பட்டு இருப்பதுடன், குறித்த சனத்தொகையில் 95.3மூ வீதமானவர்கள் கிராமிய மற்றும் பெருந்தோட்டங்களில் வாழ்கின்றனர். இலங்கையில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ள வறுமையொழிப்பு வேலைத்திட்டங்களின் இறுதிப் பெறுபேறுகள் பற்றி எந்தவொரு தரப்பினரும் திருப்தியடையவில்லை என்பதைக் கருத்துக்கள் மூலம் காணக்கூடியதாகவுள்ளது. கடந்த பல தசாப்தங்களாக வறுமையொழிப்பு நலனோம்புகை வேலைத்திட்டங்கள் மூலம் நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ள பயனாளிகளின் எண்ணிக்கையும், அதற்காக செலவிடப்பட்டுள்ள நிதியும் படிப்படியாக அதிகரித்துள்ளது. 2000 ஆம் ஆண்டில் 1.10 மில்லியன் பயனாளிகளும், 2010 ஆம் ஆண்டில் 1.57 மில்லியன் பயனாளிகளாக அதிகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் 1.79 மில்லியன் பயனாளிகள் வரை அதிகரித்துள்ளது. இந்நிலைமையை தொடர்ச்சியாகப் பேணிச் செல்வது நாட்டின் பொருளாதாரம் மற்றும் உற்பத்திச் செயன்முறைக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். அதனால், இடர்களுக்கு உள்ளாகக்கூடிய குழுவினரை மாத்திரம் முறைசார்ந்த சமூகப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தில் உள்வாங்குவதற்கும், ஏனையவர்களை பொருளாதாரச் செயன்முறையில் முனைப்பான பங்காளர்களாக மாற்றுவதற்கும் படிப்படியாக முறையாகத் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்த வேண்டியுள்ளது. அதற்கிணங்க, புதிய அரசின் கொள்கைக்கமைய 'வளமான நாடு – செழிப்பான வாழ்க்கை' எனும் தொலைநோக்கை வெற்றியடையச் செய்வதற்கு இயலுமாகும் வகையில் பல்வித அணுகுமறைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த வேலைத்திட்டமாக 'பிரஜா சக்தி' வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. குளியாபப்பிட்டி, நாரங்கல்ல பிரதேசத்தில் நிறுவப்படுகின்ற தொழிநுட்பவியல் பாடத்திட்டத்திற்கான தேசிய கல்வியல் கல்லூரியின் விடுதிக் கட்டுமானம்
உயர்தரப் பாடத்திட்டத்தில் தொழிநுட்பவியல் பாட அலகு அறிமுகப்படுத்தப்பட்;ட பின்னர், ஏற்பட்டுள்ள ஆசிரியர் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் கொரிய அரசின் நிதியுதவியின் கீழ் தொழிநுட்பவியல் பாடத்திட்டத்திற்கான தேசிய கல்வியியல் கல்லூரியை நிறுவுவதற்கு 2017 ஆம் ஆண்டில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த கல்வியியல் கல்லூரிக்கான விடுதியை நிர்மாணிப்பதற்காக திறந்த போட்டி விலைமுறி முறையைக் கடைப்பிடித்து ஒப்பந்தக்காரர்களைத் தெரிவு செய்வதற்காக 2024.03.04 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதுடன், 12 விலைமனுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைய, விடுதிக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான விபரங்களுடன் கூடிய, குறைந்த விலைமனுதாரரான International Construction Consortium (Pvt) Ltd இற்கு வழங்குவதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமானங்களுக்கான எரிபொருள் விநியோக ஒப்பந்தங்களை வழங்கல்
பரிஸ், கென்டன், டாக்கா, டுபாய், கென் ஐலன்ட், ஜெடான் மற்றும் இந்தியாவின் வெங்களுர், கொச்சி, சென்னை, புதுடில்லி, மதுரை, மும்பாய், திருனந்தபுரம் மற்றும் திருச்சிராப்பள்ளி போன்ற சர்வதேச விமான நிலையங்களில் ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமானங்களுக்கான எரிபொருள் விநியோகத்திற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக சர்வதேச மட்டுபடுத்தப்பட்ட போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளது. அதற்கமைய, உயர் மட்டத்திலான நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைய கீழ்க்குறிப்பிட்டவாறு இரண்டு (02) ஆண்டுகளுக்கு குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. சூதாட்ட விளையாட்டு ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையை நிறுவுதல்
இலங்கையில் சீட்டாடுதல் மற்றும் விளையாட்டு நிறுவனங்களை தரநிர்ணயப்படுத்தல், சமூகப் பாதிப்புக்களைக் குறைத்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு விரிவானதும் முழுமையானதுமான விடயதானத்துடன் கூடிய சுயாதீன ஒழுங்குபடுத்தல் நிறுவனமாக, சூதாட்ட விளையாட்டு ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையை நிறுவுவதற்கும், அதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் 2023.06.26 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வதற்கு சமகால அமைச்சரவையின் கொள்கை ரீதியான அங்கீகாரம் தேவையென சட்டவரைஞரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை துரிதமாகத் தயாரித்து அமைச்சரவை கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்குவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, விளையாட்டில் ஊக்கு பதார்;த்தப் பயன்பாட்டிற்கு எதிரான சமவாயச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்
ஊக்கு பதார்த்தப் பயன்பாட்டுக்கு எதிரான இலங்கை முகவராண்மை (SLADAயு) ஆனது, ஊக்கு பதார்த்தப் பயன்பாட்டுக்கு எதிரான உலக முகவராண்மை (றுயுனுயு) அமைப்பின் சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கமைய இயங்குகின்ற நிறுவனமாகும். அத்துடன், இலங்கை விளையாட்டு வீரர்களுக்கான சர்வதேச விளையாட்டுக்களில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், ஊக்கு பதார்த்தப் பயன்பாட்டுக்கு எதிரான இலங்கை முகவராண்மை நிறுவனத்தின் சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கமைய செயலாற்றுதல் வேண்டும். ஊக்கு பதார்த்தப் பயன்பாட்டுக்கு எதிரான உலக முகவராண்மை அமைப்பு ஒவ்வொரு நாட்டிலுள்ள ஊக்கு பதார்த்தப் பயன்பாட்டுக்கு எதிரான சட்டங்களைப் பகுப்பாய்வு செய்து தரநியமமான முறையில் இருக்கின்றமையை மீளாய்வு செய்து, மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் விதந்துரைக்கப்பட்டுள்ளன. 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, விளையாட்டில் ஊக்கு பதார்;த்தப் பயன்பாட்டிற்கு எதிரான சமவாயச் சட்டத்தைத் தயாரிக்கும் போது, 2013 ஆம் ஆண்டில் காணப்பட்ட சர்வதேச தரநியமங்களே உள்வாங்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் ஊக்கு பதார்த்தப் பயன்பாட்டுக்கு எதிரான உலக முகவராண்மை அமைப்பு, இலங்கையின் ஊக்கு பதார்;த்தப் பயன்பாட்டிற்கு எதிரான சமவாயச் சட்டம் மீளாய்வு செய்யப்பட்ட பின்னர், குறித்த சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் பல விதந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, விளையாட்டில் ஊக்கு பதார்;த்தப் பயன்பாட்டிற்கு எதிரான சமவாயச் சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.