2025.03.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
01. பேரூந்துகளில் வடிவமைப்புக்களை (Design) மாற்றுதல் மற்றும் மாற்று உருவமைப்புக்கள் (Modification) தொடர்பான சட்ட நிலைமைகள்
மோட்டார் வாகனங்கள் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளுக்கமைய மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அவர்களின் முற்கூட்டிய அனுமதியுடன் வாகனங்களின் வடிவமைப்புக்களை (Design) மாற்றுதல் மற்றும் மாற்று உருவமைப்புக்களை (Modification) மேற்கொள்ளலாம். அதற்கிணங்க, 1983 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மோட்டார் வாகனங்கள் (தயாரித்தல்) கட்டளைகள் அவ்வப்போது திருத்தப்பட்டு, வாகனங்கள் மாற்று உருவமைப்புக்கள் செய்யக்கூடிய விதங்கள் பற்றிய ஒழுங்குவிதிகள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனாலும், கடந்த காலங்களில் அவ்வாறான கட்டளைகள் மூலம் வெளியிடப்பட்டுள்ள வாகன உதிரிப்பாகங்களைப் பொருத்துதல் மற்றும் வடிவமைப்பு மாற்றங்களுக்கு மேலதிகமாக, மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் மூலம் உள்ளக பொறிமுறை மூலம் பேரூந்துகளை அலங்காரப்படுத்தல் மற்றும் மாற்று உருவமைப்புக்களுக்கான வழிகாட்டிக் கோவையொன்று தயாரிக்கப்பட்டு உள்ளக சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆனாலும், அதற்குரிய மோட்டார் வாகனங்கள் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம், குறித்த கட்டளைகள் வெளியிடப்படவில்லை. அதனால், இவ்வனைத்து நிலைமைகளையும் கருத்தில் கொண்டு, பேரூந்துகளின் அலங்காரங்கள் மற்றும் மாற்று உருவமைப்புக்களால் பேரூந்துகளில் பயணிக்கின்ற பயணிகளின் பாதுகாப்புக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்கள் பற்றி ஆராய்ந்து, அதுதொடர்பாக முறைசார்ந்த வகையில் செயலாற்றுவதற்கு விதந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு உள்ளிட்ட ஏனைய அனைத்து நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
01. காலி புதிய நீதிமன்றக் கட்டிடத்தொகுதிக்கு அருகாமையில் கையகப்படுத்தப்பட்ட காணியில் சட்டத்தரணிகள் அலுவலகக் கட்டிடத் தொகுதியொன்றை நிர்மாணித்தல்
நீதி அமைச்சின் பயன்பாட்டுக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள, காலி புதிய நீதிமன்றக் கட்டிடத்தொகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ள 130 பேர்ச்சர்ஸ் காணியில் காலி சட்டத்தரணிகள் சங்கத்தின் செலவில் சட்டத்தரணிகள் அலுவலகக் கட்டிடத்தொகுதியை நிர்மாணிப்பதற்கான யோசனை 2025.02.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. அதில் குறித்த யோசனையை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக நிலவுகின்ற சட்ட ரீதியான பிரச்சினைகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து அமைச்சரவைக்கு விதந்துரைகளுடன் கூடிய அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளரின் தலைமையில், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சு, காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் உள்ளிட்ட ஏனைய ஏற்புடைய நிறுவனங்களின் பிரதிநிதித்துவத்துடன் கூடிய அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு, கீழ்க்காணும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கும், காலி சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- காணி உரிமை அரசுக்கு இருக்குமாறு, மேற்குறிப்பிடப்பட்ட 130 பேர்ச்சர்ஸ் காணித் துண்டில் காலி சட்டத்தரணிகள் சங்கத்தின் நிதியத்தின் மூலம் சட்டத்தரணிகள் அலுவலகக் கட்டிடத்தொகுதியை நிர்மாணித்தல்
- அச்சங்கத்தால் கட்டிட நிர்மாணத்திற்காக மேற்கொள்ளப்படுகின்ற மொத்த முதலீட்டுத் தொகை வாடகையில் கழிவிடப்படுகின்ற வகையில் 30 வருடங்களுக்கு குறித்த கட்டிடத்தைப் பராமரித்துப் பயன்படுத்துவதற்காக அதன் உரித்தை காலி சட்டத்தரணிகள் சங்கத்திற்கு வழங்குதல்
- பொதுமக்களுக்கு சட்டவாளர் சேவைகள் வழங்குவதைத் தவிர வேறெந்த விதத்திலும் வணிக ரீதியான நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த முடியாது.
- 30 வருடங்களின் பின்னர் கட்டிடத்தின் உரித்து நீதி அமைச்சுக்கு ஒப்படைத்தல்
- பின்னர், தொடர்ந்தும் தேவையாயின் அரச பிரதம விலைமதிப்பீட்டாளரின் விலைமதிப்புக்கமைய காலி சட்டத்தரணிகள் சங்கத்துடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் குத்தகை அடிப்படையில் குறித்த கட்டிடத்தைப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு வழங்கல்.
- சர்வதேச சூரிய மின்சக்திக் கூட்டமைப்பு (ISA) இற்கு ஆண்டுக்கான ஒத்துழைப்புக் கட்டணத்தைச் செலுத்துதல் மற்றும் இலங்கை மற்றும் சர்வதேச சூரிய மின்சக்திக் கூட்டமைப்புக்கும் இடையிலான நாடுகளின் பங்காண்மை பணிச்சட்டகத்தில் (CPF) கையொப்பமிடல்
- சூரிய மின்சக்திப் பாவனையை ஊக்குவிக்கின்ற உறுப்பு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் சர்வதேச சூரிய மின்சக்திக் கூட்டமைப்பு தாபிக்கப்பட்டுள்ளது. தற்போது, இலங்கை உள்ளிட்ட 75 நாடுகள் அதன் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 54 நாடுகள் பங்காண்மைப் பணிச்சட்டகத்தை ஏற்று அங்கீகரித்துள்ளது. இலங்கைக்குரிய வகுதிக்கான தன்னார்வ ஒத்துழைப்புக் கட்டணமாக வருடாந்தம் 25,000 அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டும். சூரிய மின்சக்தித் துறையில் குறித்த சூரிய தொழிநுட்ப உள்ளீட்டு வளங்கள் நிலையம்; (STAR – C) மூலம் இயலளவ விருத்தி, கொள்கை மேம்பாடு, நிதி வசதிகளுக்கான அணுகல், உலகளாவிய வலையமைப்பு, அறிவுப் பரிமாற்றம் போன்ற நன்மைகள் சர்வதேச சூரிய மின்சக்திக் கூட்டமைப்பின் மூலம் அதன் உறுப்பு நாடாக இலங்கைக்கு பெற்றுக்கொள்ளக் கூடியதாக அமையும். அதற்கிணங்க, வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள கீழ்க்காணும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- 2024/25 நிதியாண்டு தொடக்கம் 25,000 அமெரிக்க டொலர்கள் வருடாந்த ஒத்துழைப்புக் கட்டணமாக தொடர்ச்சியாக செலுத்தல்
- இலங்கையில் தொழிநுட்ப உள்ளீட்டு வளங்கள் நிலையம் (STAR – C) நிலையத்தை அமைத்தல்
- ‘நாடுகளுக்கான பங்காண்மைப் பணிச்சட்டகத்தில்” இலங்கையும் சர்வதேச மின்சக்திக் கூட்டமைப்பும் கையொப்பமிடல்
- 1990 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கைத்தொழில் மேம்பாட்டுச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்
- கைத்தொழில் துறையில் தொழிநுட்பம், வணிகம், திறன் மற்றும் சுற்றாடல் ஆகிய துறைகளுக்குரிய காலத்துடன் தழுவிய தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் கைத்தொழில் கொள்கையை வகுப்பதற்காக தற்போது காணப்படுகின்ற 1990 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கைத்தொழில் மேம்பாட்டுச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகள் போதுமானதாக இல்லையென்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால், குறித்த சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 03.08 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டவரைஞரால் குறித்த சட்டத்திருத்தங்களுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், சட்டத்திருத்தப் பணிகளுக்காக சமகால அமைச்சரவையின் கொள்கை ரீதியான உடன்பாடு பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென சட்டவரைஞர் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கமைய, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனையை கருத்தில் கொண்டு குறித்த சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கான பணிகளைத் துரிதப்படுத்திப் பூர்த்தி செய்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- 1957 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க தேயிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்
- 1957 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க தேயிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்திற்கு கீழ்க்காணும் விடயங்களை உள்ளடக்கி திருத்தங்களை மேற்கொள்வதற்காக 01.11 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது :
- தேயிலைத் தொழிற்சாலைகளில் உற்பத்திப் பணிகளை வகைப்படுத்தி பின்னர் வெளியகற்றப்படும் தேயிலைக்கான “மீள் செயலாக்கத் தேயிலை” (Reclaimable Tea) எனும் பொருள்கோடலை அறிமுகப்படுத்தல்
- மீள் செயலாக்க தேயிலையை தொடர்ந்து இறுதியான தேயிலை வடிகட்டலின் பின்னர் எஞ்சுகின்ற பகுதி “நிராகரிக்கப்பட்ட தேயிலை” (Refuse Tea) எனப் பெயரிடல்
- தேயிலை செயலாக்கத்தில் ஈடுபடுபவர்கள் (Tea Processors) gjpT nra;jy;> mtu;fSf;F mDkjpg;gj;jpuk; toq;fy; kw;Wk; epu;tfpj;jy; cs;spl;l mtu;fSila nraw;ghLfSld; njhlu;Gila rl;l Vw;ghLfis cs;thq;fy;
சட்ட வரைஞரால் தற்போது குறித்த சட்டத்திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அதற்காக சமகால அமைச்சரவையின் கொள்கை ரீதியான உடன்பாடு பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, பெருந்தோட்டத்துறை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு குறித்த சட்டமூலத்தைத் தயாரிக்கின்ற பணிகளைத் துரிதப்படுத்திப் பூர்த்தி செய்வதற்கு அமைச்சரவை கொள்கை ரீதியான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
07. அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாமினரை முகாமைத்துவம் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை நடைமுறைப்படுத்தல்
அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் நேர அட்டவணையை அடையாளங் கண்டு, அதுதொடர்பாக தேவையின் அடிப்படையில் கட்டாயமாக ஆட்சேர்ப்புச் செய்ய வேண்டிய அளவை அடையாளங்கண்டு அதற்கமைய, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்காக 2024.12.30 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த குழுவுக்கு அந்தந்த அமைச்சுக்களால், அவற்றின் கீழ் காணப்படுகின்ற திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் காணப்படுகின்ற பதவி வெற்றிடங்களைப் பூரணப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேண்டுகோள்களைக் கருத்தில் கொண்டு, குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்காக அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தொடர் இல |
அமைச்சுக்கள்;/ மாகாணசபை/ ஆணைக்குழு |
ஆட்சேர்ப்பு செய்வதற்காக குழுவால் விதந்துரைக்கப்பட்டுள்ள பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை |
1. |
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு |
909 |
2. |
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு |
109 |
3. |
சுற்றாடல் அமைச்சு |
144 |
4. |
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு |
2500 |
5. |
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு |
22 |
6. |
விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சு |
03 |
7. |
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு |
185 |
8. |
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு |
20 |
9. |
பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு |
1615 |
10. |
மத்திய மாகாண சபை |
72 |
11. |
ஊவா மாகாண சபை |
303 |
மொத்தம் |
5>882 |
07. கேகாலை நிர்வாக மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர்/ அரசாங்க அதிபர் பதவிக்கு நியமித்தல்
கேகாலை நிர்வாக மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர்/ அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய திரு. ஜே.எம்.ஆர்.பீ. ஜயசிங்க அவர்கள் 2025.02.01 தொடக்கம் வடமத்திய மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமையால், தற்போது கேகாலை மாவட்ட செயலாளர்/ அரசாங்க அதிபர் பதவி வெற்றிடம் நிலவுகின்றது. குறித்த பதவிக்கு தற்போது பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றுகின்ற இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான எச்.எம்.ஜே.எம். ஹேரத் அவர்களை நியமிப்பது பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது. இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான எச்.எம்.ஜே.எம். ஹேரத் அவர்களை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கேகாலை நிர்வாக மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர், அரசாங்க அதிபராக நியமிப்பதற்காக பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. குருநாகல் நிர்வாக மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர்ஃஅரசாங்க அதிபர் பதவிக்கு நியமித்தல்
குருநாகல் நிர்வாக மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர்ஃஅரசாங்க அதிபராகக் கடமையாற்றிய திரு. ஆர்.எம்.ஆர்.ரத்னாயக்க அவர்கள் 2025.03.03 தொடக்கம் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளமையால், குறித்த பதவி வெற்றிடம் நிலவுகின்றது. குறித்த பதவிக்கு பொருத்தமான அதிகாரியாக தற்போது வடமேல் மாகாண முதலமைச்சின்; செயலாளராக கடமையாற்றுகின்ற இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான டீ.எம்.கே.சீ. திசாநாயக்க அவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளார். அதற்கமைய, டீ.எம்.கே.சீ. திசாநாயக்க அவர்களை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் குருநாகல் நிர்வாக மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர்/ அரசாங்க அதிபராக நியமிப்பதற்காக பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்புக்களுக்கிடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் சிங்கள மொழியே மூலமாக அமையும்.