2025.07.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

2025.07.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
  • :

2025.07.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

01. க.பொ.த (உ/த) பரீட்சையில் உயர்வான தேர்ச்சியைப் பெறுகின்ற மாணவர்கள் தமது முதலாவது பட்டப்படிப்பை

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தொடர்வதற்கான வாய்ப்புக்களை வழங்குகின்ற புலமைப்பரிசில் வேலைத்திட்டம்
அரச கொள்கைப் பிரகடனத்திற்கமைய 'நாகரிகமான பிரஜை - முன்னேற்றகரமான மனிதவளத்தை' உருவாக்கும் நோக்கத்தை அடைவதற்காக க.பொ.த (உஃத) பரீட்சையில் உயர்வான தேர்ச்சியைப் பெறுகின்ற மாணவர்கள் தமது முதலாவது பட்டப்படிப்பை சர்வதேச ரீதியாக உயர் தரப்படுத்தலுடன் கூடிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தொடர்வதற்குத் தேவையான புலமைப்பரிசிலை வழங்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனை மூலம் 200 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் கீழ் சர்வதேச தரப்படுத்தல் குறிகாட்டிகளில் முதல் 500 இடங்களைப் பிடித்துள்ள, ஆங்கில மொழியில் கற்பித்தல்களை மேற்கொள்கின்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் 04 ஆண்டுகள் பட்டப்படிப்புக்களைப் பூர்த்தி செய்வதற்குப் புலமைப்பரிசில்களை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதலாம் கட்டத்தின் கீழ் 2025 ஆண்டுக்காக 20 தொடக்கம் 50 மாணவர்களைத் தெரிவு செய்வதற்கு எதிர்பார்;க்கப்படுகின்றது. க.பொ.த (உ/த) பரீட்சையில் பிரதான பாடத்துறைகளின் கீழ் உயர்வான இசட் புள்ளிகளைப் (Z-Score) பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு விண்ணப்பிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது. குறித்த விண்ணப்பங்களில் பொருத்தமான மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுடன் கூடிய தேர்ச்சிக்கான நேர்முகத் தேர்வுக் குழுவொன்றின் மூலம் மேற்கொள்ளப்படும். அதற்கமைய, உத்தேச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. 2026 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்தல்

'உற்பத்திப் பொருளாதாரம் மற்றும் அனைவரையும் பொருளாதார அபிவிருத்தியில் பங்கெடுக்கச் செய்தல்' எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு 2026-2030 அரச நிதிச் சட்டகம் மற்றும் அரச நிதி மூலோபாயக் கூற்று மற்றும் தேசிய கொள்கைச் சட்டகமான 'செழிப்பான நாடு – அழகான வாழ்வு' எனும் கொள்கைச் சட்டகத்திற்கமைய 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் போது தேசிய கொள்கைச் சட்டகத்தில் உட்சேர்க்கப்பட்டுள்ள முன்னுரிமைகள் மற்றும் கிராமிய அபிவிருத்தித் தொடக்க முயற்சிகளுக்கு முன்னுரிமையளிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் அரச கொள்கைப் பிரகடனத்திற்கமைய அமைச்சுக்களின் விடயதானங்களின் கீழ் அந்தந்த அமைச்சுக்கள் அடையாளங் கண்டுள்ள கருத்திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியொதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு அனைத்து அமைச்சுக்களிடமிருந்தும் முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. அதற்கமைய, 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை 2025 ஒக்டோபர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அதன் இரண்டாம் வாசிப்பு (வரவு செலவுத்திட்ட உரையை) 2025 நவம்பர் மாதத்தில் நடாத்துவதற்கும், மூன்றாம் வாசிப்பின் வரவு செலவுத்திட்ட விவாதத்தை 2025 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடாத்துவதற்;கு இயலுமாகும் வகையில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தைத் தயாரிப்பதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. கொரிய குடியரசின் விவசாயம் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளுக்கான பருவகாலத் தொழிலாளர்களை ஈடுபடுத்தும் வேலைத்திட்டம்

கொரிய குடியரசின் E-8 வீசா வகையின் (பருவகாலத் தொழிலாளர்கள்) கீழ் இலங்கைத் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதற்கு வசதியளிக்கும் முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2025.02.19 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக கொரிய குடியரசின் ஆர்வங்காட்டுகின்ற உள்ளுராட்சி நிறுவனங்களுடன் இராஜதந்திர வழிமுறை மூலம் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டுள்ளன. கொரிய குடியரசின் யொங்க்வோல் உள்ளுராட்சி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பயனாக இருதரப்பினருக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இலங்கையர்களுக்கு பருவகால தொழிலாளர் வேலைத்திட்டத்தின் கீழ் குறுகிய காலம் (05 மாதம் தொடக்கம் 08 மாதங்கள் வரை) யொங்க்வோல் பிராந்தியத்தில் விவசாயம் மற்றும் மீன்பிடிக் கிராமங்களில் தொழில் புரிந்து வருமானம் ஈட்டிக் கொள்வதற்கும் மற்றும் எமது நாட்டுக்கு வெளிநாட்டு செலாவணியை ஈட்டிக்கொள்வதற்கும் வாய்ப்புக் கிடைக்கின்றது. உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய, யொங்க்வோல் உள்ளுராட்சி நிறுவனத்துடன் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. சமுதாய செயற்றிறன் (Community Effectiveness model village) மாதிரிக் கிராமிய வேலைத்திட்டம்

Clean Srilanka தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக அதன் நோக்கங்களை நாடளாவிய ரீதியில் வெற்றியடையச் செய்வதற்காக மூலோபாய செயற்கருவியாக 2025, 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் அனைத்து பிரதேச செயலகப் பிரிவிலும் ஒரு கிராமத்தை (கிட்டத்தட்ட 50 குடும்பங்கள் வசிக்கும்) தெரிவு செய்து, கிராமிய பங்கேற்பு அணுகுமுறையைக் கையாண்டு சமுதாய செயற்றிறன் மாதிரிக் கிராமிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் மூலம் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் சுகாதார நலம், வீட்டுமட்ட முகாமைத்துவம் மற்றும் சமூக நல்லாரோக்கியம், கலாச்சாரம், ஆன்மீக அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு போன்ற விடயத்துறைகளின் கீழ் அடையாளங் காணப்படும் மாதிரி அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு, தெரிவு செய்யப்படும் கிராமம், சமுதாய செயற்றிறன் மாதிரிக் கிராமமாக உருவாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் ஒத்துழைப்புடன் முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்திற்குப் பொருத்தமான கிராமம் தெரிவு செய்யப்படும். அவ்வாறு தெரிவு செய்யப்படுகின்ற கிராமங்கள் அமைந்துள்ள பிரதேச செயலகங்களில் கடமையாற்றுகின்ற நிரல் அமைச்சுக்களுக்குரிய அனைத்து வெளிக்கள உத்தியோகத்தர்களையும் வலுவூட்டி அவர்கள் மூலமாக கிராமிய மக்களின் தேவைகளை வினைத்திறனாகவும் பயனுள்ள வகையிலும் பூர்த்தி செய்வதற்கு இவ்வேலைத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. தேசிய சிறுவர் பாதுகாப்புக் கொள்கைக்கான ஐந்தாண்டு தேசிய செயற்பாட்டுத் திட்டம்

1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட 'சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கை' இற்கு 2019.10.29 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தேசியக் கொள்கையை அமுல்படுத்துவதற்காக சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பத்து (10) விடயத்துறைகளை உள்ளடக்கியதாக அதற்காக செயலாற்றுகின்ற பங்காளர்களின் கருத்துக்களையும் யோசனைகளையும் கருத்தில் கொண்டு 'தேசிய சிறுவர் பாதுகாப்புக் கொள்கைக்கான ஐந்தாண்டு தேசிய செயற்பாட்டுத் திட்டம்' தயாரிக்கப்பட்டுள்ளது. தேசிய கொள்கைச் சட்டகத்தின் 'பாதுகாப்பான சிறுவர் உலகம் - ஆக்கபூர்வமான எதிர்கால சந்ததி' இற்கான கொள்கை ரீதியான கடப்பாடுகளுக்கு அனைத்துவித இணக்கப்பாடுகளுக்கமைய பல்துறைசார் அணுகுமுறையுடன் கூடிய குறித்த ஐந்தாண்டு தேசிய செயற்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை அமுல்படுத்துவதற்காக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. நெதர்லாந்தில் காணப்படுகின்ற இலங்கை மரபுக்குரிய ஓலைச்சுவடிகள் பற்றிய ஆய்வுக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

நெதர்லாந்து ஒல்லாந்த ஆய்வுப் பேரவையால் காலணித்துவ சூழமைவுடன் கூடிய திரட்டுக்கள் தொடர்பான ஆய்வு முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு மேற்கொள்ளப்பட்டுள்ள சர்வதேச முன்மொழிவுக் கோரல்களுக்கமைய சமர்;ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவின் அடிப்படையில், இலங்கை மரபுக்குரிய நெதர்லாந்தின் ஓலைச்சுவடிகள் திரட்டு தொடர்பான ஆய்வை நடாத்துவதற்காக இலங்கை தேசிய சுவடிகள் காப்புத் திணைக்களத்திற்கும், நெதர்லாந்தின் திறந்த பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஐந்து பங்காளர்களுடன் 384,248 யூரோக்கள் நன்கொடையைப் பெற்றுக் கொள்வதற்க இயலுமை கிட்டியுள்ளது. 'றூழளந முழெறடநனபநஇ றூழளந ஏயடரநள? Whose Knowledge, Whose Values? Palm Leaf Manuscripts and the Question of Colonial Collections in Dutch Heritage Institutions' எனும் பிரதான தலைப்பின் கீழ் 2025 தொடக்கம் 2029 வரையான காலப்பகுதியில் உத்தேச ஆய்வை நடாத்துவதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த பங்காளர் ஆறு பேருக்கிடையே கையொப்பமிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் விதந்துரைகள் மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும், 2025-2029 காலப்பகுதியில் குறித்த ஆய்வை நடாத்துவதற்கும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. அரச கடன் முகாமைத்துவ மென்பொருள் தொகுதியொன்றை உருவாக்குதல்

அரச கடன் முகாமைத்துவத்திற்குத் தேவையான கடன் முகாமைத்துவ மென்பொருள் தொகுதியொன்றை கொள்வனவு செய்வதற்கு நேரடி பெறுகை முறைமையைக் கடைப்பிடித்து பொதுநலவாய அமைப்பின் செயலகத்திற்கு விலைமுறியொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக 2024.10.14 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பொதுநலவாய அமைப்பின் செயலகத்திற்கு விலைமுறியொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விலைமுறி மதிப்பீட்டுக் குழு மற்றும் உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவானது, 12,500 பவுண்கள் வருடாந்த பராமரிப்புக் கட்டணத்தின் கீழ் ஊழஅஅழறெநயடவா ஆநசனையைn மென்பொருள் தொகுதியை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை பொதுநலவாய அமைப்பின் செயலகத்திற்கு வழங்குவதற்கு விதந்துரைத்துள்ளன. அதற்கமைய, குறித்த மென்பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளை வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் தாபிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. இலங்கை எக்ஸ்போ கண்காட்சி – 2026
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை 1992, 1994, 1997 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் இலங்கை எக்ஸ்போ கண்காட்சியை நடாத்தியுள்ளது. பதின்னான்கு 14 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் 2026 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் இலங்கை எக்ஸ்போ கண்காட்சி 2026.06.18 தொடக்கம் 21 ஆம் திகதி வரை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதிக்கு தயார்படுத்தும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட 1,500 பேரைக் கவர்ந்திழுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, இலங்கை எக்ஸ்போ கண்காட்சி – 2026 தேசிய வைபவமாக ஏற்பாடுகளைச் செய்வதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்;ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. நாடளாவிய ரீதியில் நகர்ப்புறங்களில் சுகாதாரநல வசதிகளை மேம்படுத்தல்

அன்றாட நகரப் பிரதேசங்களுக்கு வருகை தருகின்ற பொதுமக்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்க உரிய தரப்பண்புகளுடன் பயன்படுத்தக்கூடிய மலசலகூட வசதிகள் போதியளவு இன்மையால், உரிய தரப்பண்புகளுடன் பயன்படுத்தக்கூடிய மலசலகூட வசதிகளை நிர்மாணிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையால் உத்தேசிக்கப்பட்டுள்ள வசதிகளை நிறுவுவதற்கு வேண்டிய பொருத்தமான இடங்கள் நகர அபிவிருத்தித்திட்டங்களுக்கமைய அடையாளங் காணப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டத்தின் கீழ் 20 சுகாதாரநல வசதிகளுடன் கூடிய மலசலகூடத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளதுடன், அதற்காக 525.29 மில்லியன் ரூபாய்கள் செலவாகுமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, கீழ்க்காணும் இடங்களில் உத்தேச சுகாதாரநல வசதிகளுடன் கூடிய மலசலகூடத் தொகுதிகளை நிர்மாணிக்கும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• தெமோதர புகையிரத நிலையம்
• சிகிரியா ஹோட்டல் சந்தி
• கண்டி குளவீதி
• க்றெகரி குளம், நுவரெலியா
• கிண்ணியா கடற்கரை, திருகோணமலை
• பளிங்குக் கடற்கரை, திருகோணமலை
• நிலாவெளிக் கடற்கரைப் பிரதேசம், திருகோணமலை
• பாசிக்குடா, மட்டக்களப்பு
• றுவன்வெலிசாய விகாரை வாகனத் தரிப்பிடம் வளாகம்
• லங்காபுர, பொலன்னறுவை
• யாழ்ப்பாணம் குரிகட்டுவான் இறங்கு துறை
• ஹிக்கடுவ கடற்கரை
• ஹிரிவெட்டிய, திக்வெல்ல
• பறைவெல்ல கடற்கரைப் பூங்கா, தங்காலை
• ஒன்பது வில்வளைவுப் பாலம், எல்ல
• மொனறாகலை கடற்கரை, பேருவள
• கல்கிஸ்ஸ புகையிரத நிலையம்
• நீர்கொழும்பு கடற்கரைப் பூங்கா கருத்திட்டம், கட்டம் ஐ
• பத்தரமுல்ல சந்தி
• மடகமுவ சரணாலயம், குருநாகல்

10. குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு சீனக் குடியரசின் உதவித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வீடமைப்பு வேலைத்திட்டத்தின் மேற்பார்வைப் பணிகளுக்கு ஆலோசனை நிறுவனங்களைத் தெரிவு செய்தல்

குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு சீனக் குடியரசின் உதவித்திட்டத்தின் கீழ் 1,996 வீட்டு அலகுகளை அமைப்பதற்கான வேலைத்தள மேற்பார்வைப் பணிகக்கான பக்கேஜ் 03 இன்கீழ் ஆலோசனை நிறுவனங்களைத் தெரிவு செய்வதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபை விருப்பக் கோரல்களை கோரியுள்ளது. அதற்காக, 06 விருப்பக் கோரல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 03 நிறுவனங்கள் மாத்திரம் முன்மொழிவுக்கான கோரலை (சுகுP) சமர்ப்பிப்பதற்கு தகைமை பெற்றுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசகர்களைத் தெரிவு செய்வதற்கான பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைய, கீழ்க்காணும் வகையில் ஆலோசனை சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தங்களை வழங்குவதற்காக நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பக்கேஜ் i – மொரட்டுவையில் 575 வீட்டு அலகுகள் மற்றும் கொட்டாவையில் 108 வீட்டு அலகுகளுக்கான கட்டுமானக் கருத்திட்டத்தின் ஆலோசனை சேவைகளுக்கான ஒப்பந்தத்தை பொறியியல் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனைப் பணியகத்திற்கு வழங்குதல்

பக்கேஜ் ii – தெமட்டகொடவில் 586 வீட்டு அலகுகள் மற்றும் மஹரகமவில் 112 வீட்டு அலகுகளுக்கான கட்டுமானக் கருத்திட்டத்தின் ஆலோசனை சேவைகளுக்கான ஒப்பந்தத்தை இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குதல்
பக்கேஜ் ஐஐஐ – பேலியகொடவில் 615 வீட்டு அலகுகளுக்கான கட்டுமானக் கருத்திட்டத்தின் ஆலோசனை சேவைகளுக்கான ஒப்பந்தத்தை இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குதல்

11. அரசுக்கு – அரசு எனும் அடிப்படையில் தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்தல்

அரசுக்கு – அரசு எனும் அடிப்படையில் தட்டுபாடு நிலவுகின்ற மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஆற்றல்மிக்க நாடுகளைத் தெரிவு செய்வதற்கான பொறிமுறையொன்றை வகுத்துக் கொள்வதற்காக சிரேட்ட அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்கு 2025.05.19 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள பொறிமுறை வரைபை பெறுகை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்து, குறித்த ஆணைக்குழுவின் முன்மொழிவுகள் மற்றும் அவதானிப்புக்களின் பிரகாரம் அரசுக்கு – அரசு எனும் அடிப்படையில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு ஆற்றல்மிக்க நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கும், அதனை அரசு பெயர் குறித்துரைக்கின்ற நிறுவனங்கள் மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு சரியான வகையில் ஒப்பந்தங்களை மேற்கொண்டு பொதுவான விநியோகச் சங்கிலி மூலம் விநியோகிப்பதற்கு சிரமமாகவுள்ள மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரங்களை விநியோகிப்பதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. கண் வில்லைகள் விநியோகத்திற்கான பெறுகை

கண்களில் விழிப்படலத்தை நீக்குதல் அல்லது மயோபியாவ தொடர்பான சிகிச்சைகளின் போது கண்ணுக்கு பொருத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் 05 வகையான கண்வில்லைகளை விநியோகிப்பதற்காக சர்வதேச போட்டி முறையின் கீழ் விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதற்காக விலைமுறிதாரர்கள் 05 பேர் விலைமனுக்களைச் சமர்ப்பித்துள்ளனர். அதற்கமைய, உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைய, குறித்த 05 வகையான கண்வில்லைகளை கீழ்க்காணும் விநியோகத்தர்களிடமிருந்து பெறுகை செய்வதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எஸ் ஆர் இலக்கம் 13005029 மற்றும் 13005032 ஆம் இலக்க பெறுகைகளுக்குரிய விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களுடன் குறைந்த விலைமுறிதாரரான இலங்கையின் M/s Elshaddai Enterprises (Pvt) Ltd இற்கு கண்வில்லைகளை விநியோகிப்பதற்கு வழங்கல்

எஸ் ஆர் இலக்கம் 13005026 மற்றும் 13005031 மற்றும் 13005030 ஆம் இலக்க பெறுகைகளுக்குரிய விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களுடன் குறைந்த விலைமுறிதாரரான இலங்கையின் M/s Jayasuriya Associates இற்கு கண்வில்லைகளை விநியோகிப்பதற்கு வழங்கல்

13. சமாதான நீதிவான்களை (நியமனம், இடைநிறுத்துகை, இல்லாதாக்குகை மற்றும் நடத்தைக்கோவை) கட்டளைகளைத் திருத்தம் செய்யதல்

1978 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க நீதித்துறை சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் சமாதான நீதிவான் பதவிக்கு நியமனம், இடைநிறுத்துகை, இல்லாதாக்குகை, முடிவுறுத்துகைக்கான ஒழுங்குவிதிகளை விதிப்பதற்கு அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 2360ஃ22 ஆம் இலக்க 2023.11.27 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் 2023 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க சமாதான நீதிவான்களை (நியமனம், இடைநிறுத்துகை, இல்லாதாக்குகை, மற்றும் நடத்தைக் கோவை) ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த ஒழுங்குவிதிகள் திருத்தம் செய்யப்பட்டு திருத்தப்பட்ட கட்டளை 2439ஃ34 ஆம் இலக்க 2025.06.04 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான கம்பனி மற்றும் வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (தனியார்) கம்பனியில் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ள ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி விசேட விசாரணைக் குழுவொன்றை நியமித்தல்

வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான கம்பனியின் மூலம் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக பங்களிப்பு வழங்கினாலும், அதனை மேற்கொண்டு நடாத்திச் செல்வதற்கு அரசுக்கு அதிக செலவுச்சுமை நேரிட்டுள்ளமையால், குறித்த கம்பனிக்கு ஆண்டுதோறும் ஏற்படுகின்ற அதிக நட்டத்தை தாங்கிக்கொள்வதற்கு சிரமமங்கள் தோன்றியுள்ளன. இக்கம்பனியை பொருளாதார ரீதியாக அனுகூலங்களுடனும், வினைத்திறனாகவும், பயனுறுவாய்ந்த அரச நிறுவனமாக மாற்றியமைத்து, நவீன தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி வெற்றிகரமாக மேற்கொண்டு நடாத்திச் செல்வதே பொதுமக்களின் விருப்பாகவுள்ளது. அதற்காக, வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான கம்பனிக்கு சமகால நிலைமை ஏற்படுவதற்கு ஏதுவாக அமைந்த காரணிகள் தொடர்பாக கடந்த காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள பரிவர்த்தனைகள் மற்றும் சம்பவங்கள் பற்றி முறையான ஆய்வு மற்றும் மதிப்பீடொன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அத்துடன் விமான நிலைய தொழிற்பாடுகள் தொடர்பாக பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (ஸ்ரீலங்கா)(தனியார்) கம்பனியின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை பற்றி பல்வேறு தரப்பினர்களும் அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். அதற்கமைய, 2010 – 2025 காலப்பகுதியில் மேற்குறிப்பிட்ட நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கருத்தப்படும் ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகளைக் கண்டறிந்து விபரங்களுடன் கூடிய விதந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக முன்னாள் கணக்காய்வாளர் தலைமை அதிபதி எச்.எம்.காமினி விஜேசிங்க அவர்களின் தலைமையிலான ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ழூழூழூழூழூ

Related Articles