2025.10.13 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
01. இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கான விடுதியை அமைப்பதற்கான காணியை கையளித்தல்
குளியாப்பிட்டியில் அமைந்துள்ள இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவர்கள் தமது மருத்துவமனை உள்ளகக் கற்கைகளை குருநாகல் போதனா மருத்துவமனையில் மேற்கொள்கின்றார்கள். மூன்று கற்கைக் குழுக்களுக்குரிய மருத்துவபீட மாணவர்களுக்கு வதிவிட வசதிகளை வழங்குவதற்கு குருநாகல் போதனா மருத்துவமனைக்கு அண்மையில் வயம்ப பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான விடுதி இன்மையால் குறித்த மாணவர்களுக்கு தனிப்பட்ட வகையில் விடுதி வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது. அதனால், அம்மாணவர்களுக்கு பகல் மற்றும் இரவு வேனைகளில் குருநாகல் போதனா மருத்துவமனைக்கு இலகுவாகச் செல்லக்கூடிய வகையில் பாதுகாப்பான இடத்தில் விடுதியை அமைக்க வேண்டிய தேவையுள்ளது.அதற்கமைய, குறித்த விடுதியை நிர்மாணிப்பதற்காக அடையாளங் காணப்பட்டுள்ள குருநாகல் பிரதேச செயலகப் பிரிவில் குருநாகல் மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான 80 பேர்ச்சர்ஸ் காணித்துண்டை அரச காணிக் கட்டளைச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் பிரகாரம் கையளிப்புப் பத்திரத்தின் மூலம் இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்திற்கு கையளிப்பதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் கட்புல அரகேற்றக் கலை பீடம் அமைந்துள்ள காணித்துண்டை குறித்த பல்கலைக்கழகத்திற்கு கையளித்தல்
கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் கட்புல அரகேற்றக் கலைப் பீடம் கொழும்பு மாவட்டத்தின் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகப் பிரிவில் இல. 46, ஹோட்டன் இடம், கறுவாத்தோட்டம் எனும் அரச காணியில் நிறுவப்பட்டுள்ளது. கட்புலக் கலைகள் பீடத்தில் கல்வி பயில்கின்ற 643 மாணவர்களின் செய்முறை மற்றும் கற்கைத்திறன் வசதிகளை மேம்படுத்துவதற்கு குறித்த பீடம் அமைந்துள்ள காணியின் சட்டரீதியான உரித்து அரங்கக் கலைகள் பல்கலைக்கழகத்திடம் இருத்தல் வேண்டும்.அதனால், கட்புல அரங்கேற்றக் கலைப் பீடத்தால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற 0.6277 ஹெக்ரெயார் அளவான அரச காணித்துண்டை அரச காணிக் கட்டளைச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் பிரகாரம் கையளிப்புப் பத்திரத்தின் மூலம் கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்திற்கு கையளிப்பதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. 'இலங்கை ஆரோக்கிய விவசாய நடைமுறைகள்' (SL GAP) இற்காக பொது இலச்சினையை அறிமுகப்படுத்தல் மற்றும் பொது 'அதிகாரபூர்வ அலகொன்றை' நிறுவுதல்
'
இலங்கை ஆரோக்கிய விவசாய நடைமுறைகள்' (SL GAP) வேலைத்திட்டம் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் விவசாயத் திணைக்களத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தின் மூலம் உணவுப் பாதுகாப்பை ஊக்குவித்தல் மற்றும் பயிர்ச் செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகளின் விவசாய உற்பத்திகளின் சந்தைப்படுத்தலை உறுதிப்படுத்தல் மற்றும் விவசாய உற்பத்திகளுக்காகப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் மற்றும் ஏனைய உள்ளீடுகளை குறைந்த மட்டத்தில் பயன்படுத்துவதன் மூலம் சுற்றாடல் பேண்தகு நிலைமையை அதிகரித்தல் மற்றும் தரப்பண்பான மற்றும் சுகாதாரப் பாதுகாப்பான அறுவடையைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது SL GAP வேலைத்திட்டத்திற்காகப் பயன்படுத்தப்படும் இலச்சினையின் அதிகாரபூர்வ தன்மை, 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்துச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய, விவசாயப் பணிப்பாளர் நாயகத்திற்கு உரித்தாக அமைவதால், குறித்த இலச்சினையுடன் சேர்த்து 'விவசாய திணைக்களம்' எனும் பெயரும் பயன்படுத்தப்படுகின்றது. SL GAP வேலைத்திட்டத்தின் கீழ் சகல விவசாயப் பயிர்களையும் உள்ளடக்கிய வகையில் விரிவாக்கம் செய்யப்பட வேண்டியிருப்பதுடன், பல்வேறு அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களால் ஒவ்வொரு பயிருக்குமான SL GAP இலச்சினை பல்வேறு விதத்தில் பயன்படுத்தப்படுவதும் மற்றும் வௌ;வேறான அதிகாரபூர்வ அலகுகளைப் பயன்படுத்தி குறித்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்குப் பதிலாக, இலங்கைக்கே தனித்துவமான ஒரு பொதுவான இலச்சினையின் கீழ் பொது அதிகாரபூர்வ அலகைத் தாபித்து, இவ்வேலைத்திட்டத்தை அமுல்படுத்தல் உலகளாவிய அத்தாட்சிப்படுத்தலில் மிகவும் நன்மையளிக்குமெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒரு பொது இலச்சினையை அறிமுகப்படுத்துவதற்கும், ஒரு அதிகாரபூர்வ அலகொன்றாக (ளுஉhநஅந ழுறநெசள) விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளரை நியமிப்பதற்கும், ஏனைய ஏற்புடைய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் கீழ் SL GAP வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அதிகாரபூர்வ உப அலகொன்றை நிறுவுவதற்கும், விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெற்றுக் கொள்கின்ற வறுமை மற்றும் தீவிர வறுமைக் குடும்பங்களை வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டம்
அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெற்றுக் கொள்கின்ற தற்போது வறுமை மற்றும் தீவிர வறுமை சமூகக் குழுக்களுக்குரிய 12 இலட்சம் குடும்பங்களை வலுவூட்டும் பொறுப்பு சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த அஸ்வெசும பயனாளிகளை வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியின் நிதி மற்றும் ஒத்துழைப்புக்களின் பிரகாரம் முன்னோடிக் கருத்திட்டங்கள் இரண்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன. குறித்த முன்னோடிக் கருத்திட்டங்களின் பொறிமுறைக்கமைய அடையாளங் காணப்பட்ட வறுமை மற்றும் தீவிர வறுமைக் குடும்ப அலகொன்றுக்கு அவர்களின் வியாபாரம் அல்லது மற்றும் தொழில் திட்டங்களின் அடிப்படையிலும், அவர்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு 150,000/- ரூபாய் உயர்ந்தபட்ச தொகைக்கமைய நிதியுதவி வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த முன்னோடி வேலைத்திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் 143 பிரதேச செயலகப் பிரிவுகளில் 839 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 23,775 பேருக்கு 2025 தொடக்கம் 2027 வரையான காலப்பகுதியில், அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக உத்தேச நிதியுதவியை வழங்குவதற்காக கிராம அபிவிருத்தி மற்றும் சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. ஹயிட்ரோபுளோரோ காபன் தர இரசாயனப் பொருட்களைப் படிப்படியாக மட்டுப்படுத்தல் தொடர்பான மொட்றியல் கூட்டமைப்பின் கிகாலி திருத்தத்திற்கமைவான தேசிய பொறுப்பை நிறைவேற்றல்
2018 ஆம் ஆண்டில் இலங்கை ஹயிட்ரோபுளோரோ காபன் தர இரசாயனப் பொருட்களைப் படிப்படியாக மட்டுப்படுத்தல் தொடர்பான மொட்றியல் கூட்டமைப்பின் கிகாலி திருத்தத்தை ஏற்று அங்கீகரித்துள்ளது. குறித்த திருத்தத்திற்கமைய, ஹயிட்ரோபுளோரோ காபன் பொருட்கள் உற்பத்தி செய்யப்படாமலும் மற்றும் அதிக வெப்பமில்லாத அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் குறித்த இரசாயனப் பொருட்களை படிப்படியாக மட்டுப்படுத்தல் 2024 ஆம் ஆண்டு ஆரம்பித்து 2045 ஆம் ஆண்டாகும் போது 80% வீததத்தால் குறைக்க வேண்டியுள்ளது. மேலும் குறித்த இரசாயனப் பொருட்களின் பயன்பாடு 2024.01.01 தொடக்கம் ஒதுக்கீட்டு முறை மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் இரசாயனப் பொருட்கள் குளிர்சாதனப் பெட்டிகள், வளிச்சீராக்கிகள் மற்றும் நடமாடும் வளிச்சீராக்கத் துறைகளில் குளிரூட்டிகளாகவும், விவசாயம், மீன்பிடி, சுகாதாரம், சுற்றுலாத்துறை, கைத்தொழில், வீடமைப்பு மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ளீடுகளாகப் பயன்படுத்தப்படுகின்றது. அதனால், உள்நாட்டு தொழிற்சாலைகளின் நிலைபேற்றுத்தன்மை மற்றும் செலவுகளின் விளைதிறனைக் கருத்தில் கொண்டு புதிய ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட வேண்டியுள்ளது. அத்துடன், இறக்குமதி செய்யப்படும் குறித்த இரசாயனப் பொருட்களை மீள் ஏற்றுமதி செய்வதற்கான மட்டுப்பாடுகளை விதித்தல் மற்றும் இறக்குமதி செய்யப்படுகின்ற எமது நாட்டின் அனைத்துவித நுகர்வுக்காக மாத்திரம் பயன்படுத்துவதற்கான புதிய கொள்கை மற்றும் சட்ட ஒழுங்குவிதிகளை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. ஹயிட்ரோபுளோரோ காபன் தூய இரசாயனப் பொருட்கள் மற்றும் குறித்த இரசாயனப் பொருட்கள் அடங்கியுள்ள அனைத்துக் கலவைகளையும் இலங்கைக்கு இறக்குமதி செய்தல், இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்தல் மற்றும் மீள் ஏற்றுமதி செய்வதைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான கொள்கைகள் மற்றும் சட்ட ஒழுங்குவிதிகளை விதிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. மதுவரித் திணைக்களத்திற்கு வருமான நிர்வாக முறைமையொன்றைக் கொள்வனவு செய்வதற்கான பெறுகை
மதுவரித் திணைக்களத்திற்கு முழுமையாக டிஜிட்டல்மயப்படுத்தப்பட்ட, ஒருங்கிணைந்த தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட வருமான நிர்வாக முறைமையொன்றை நிறுவுவதற்காக பெறுகை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக 2024.05.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த முறைமை மூலம், தடையின்றி தரவுப் பரிமாற்றல், இடர் முகாமைத்துவம், வருமான சமநிலைப்படுத்தல், உயரிய வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த வருமான முறைமையைப் பெறுகை செய்வதற்காக தனிப் படிமுறை இரண்டு கடிதஉறை முறையின் கீழ் தேசிய போட்டி விலைமுறி முறையைக் கடைப்பிடித்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவால் குறித்த ஒப்பந்தம் Millenium I.T.E.S.P (Pvt). Ltd மற்றும் Metropolitan Technologies (Pvt) Ltd இற்கு 1,310.94 மில்லியன் (வரி இல்லாமல்) ரூபாய்களுக்கு வழங்குவதற்கு விதந்துரைக்கப்பட்டுள்ளது. குறித்த பெறுகை தொடர்பாக பெறுகை மேன்முறையீட்டு சபைக்கு மூன்று (03) மேன்முறையீடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த மேன்முறையீட்டுப் பெறுகை மேன்முறையீட்டுச் சபையால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, மதுவரித் திணைக்களத்திற்கான வருமான நிர்வாக முறைமையைத் தயாரித்தல், அபிவிருத்தி செய்தல், அமுல்படுத்தல் மற்றும் பராமரிப்புச் செய்வதற்காக Millenium I.T.E.S.P (Pvt). Ltd மற்றும் Metropolitan Technologies (Pvt) Ltd இற்கு வழங்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. நேரடி மற்றும் கலவையாக சந்தைக்கு விநியோகிப்பதற்கான யூரிய (Prilled) ) 15,000 மெற்றிக்தொன் இனை அரச உரக் கம்பனி லிமிட்டட் இற்கான பெறுகை
நெற்செய்கைக்கு விவசாயிகளுக்குத் தேவையான யூரியா, நேரடி மற்றும் கலவையாக சந்தைக்கு விநியோகிப்பதற்கு இயலுமாகும் வகையில், சர்வதேச போட்டி விலைமுறி முறையின் கீழ் 15,000 மெற்றிக்தொன் யூரியா உரத்தை அரச உரக் கம்பனி லிமிட்டட் இற்கு பெறுகை செய்வதற்காக 2025.05.26 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சர்வதேச போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக 03 விலைமனுக்கள் சமர்;ப்பிக்கப்பட்டுள்ளன. குறித்த விலைமனுக்கள் தொடர்பாக உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழு வழங்கியுள்ள விதந்துரைகளின் அடிப்படையில், 15,000;10/-5/ மெற்றிக்தொன விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சிங்கப்பூரின் M/s Valency International Pre. Ltd இற்கு வழங்குவதற்கு விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. மாத்தறை நில்வளா ஆற்றின் உவர் நீரணை அமைக்கப்பட்டபின்னர் மேலெழுந்துள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கான கற்கையை மேற்கொள்ளல்
நில்வளா ஆறு, மாத்தறை நகரம் உள்ளிட்ட பிரதான நகரங்கள் சிலவற்றுக்கு மற்றும் அம்பாந்தோட்டடை மாவட்டத்தின் பெலியத்த மற்றும் தங்காலை பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கின்ற மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கின்ற பிரதான நீர் மூலமாகும். நில்வளா ஆற்றின் அடிமட்டம் கடல் மட்டத்தை விடவும் கீழ்நோக்கி அரிப்பு ஏற்பட்டிருப்பதால் வரட்சிக் காலங்களில் கடல்நீர் பம்பி இயக்க நிலையத்திற்கு வழிந்தோடி வருவதால் குடிநீர் விநியோகத்திற்கு போசமான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. அதற்குத் தீர்வாக, 05 கதவுகளுடன் கூடிய உவர் நீரணை வடிவமைப்பு 2018-2022 காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. குறித்த உவர் நீரணை நிர்மாணிக்கப்பட்டமையால் வெள்ளப்பெருக் ஏற்படும் போது மாத்திரமன்றி, வரட்சிக் காலங்களிலும் ஆற்று நீரோட்டத்திற்கு தடைகள் ஏற்படுவதால், பயிர்நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்நிலங்களுக்கு சேதம் விளைவிக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது. அதுதொடர்பாக இதற்கு முன்னர் நீர்ப்பாசனத் திணைக்கத்தின் நீரியல் விஞ்ஞானம் மற்றும் இடர் முகாமைத்துவப் பிரிவு மற்றும் லங்கா ஹயிட்ரோலிக் நிறுவனம் கற்கைகளை மேற்கொண்டிருப்பினும், குறித்த பிரச்சினைக்கு நிலைபேறான தீர்வை வழங்குவதற்கு இதுவரை இயலுமை கிட்டவில்லை. இதுதொடர்பாக ஏற்புடைய அனைத்துத் தரப்பினர்களின் பங்கேற்புடன் 2025.09.08 அன்று ஜனாதிபதி செயலாளர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பொறியியல் துறையில் தகைமை பெற்றுள்ள தொழில் வல்லுநர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுயாதீன நிறுவனத்தின் மூலம் அறிக்கையொன்றைப் பெற்றுக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அவ்வாறான நிறுவனமான இலங்கை பொறியியலாளர் நிறுவனத்திற்கு மாத்தறை நில்வளா உவர் நீரணை நிர்மாணிக்கப்பட்ட பின்னர் மேலெழுந்துள்ள பிரச்சினைகளுக்கு நிலைபேறான தீர்வுக்காக கற்கையொன்றை மேற்கொள்வதற்காக விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. எபொயிரின் முன் நிரப்பப்பட்ட ஊசிமருந்து 4,000 ஐயூ சிறிஞ்சர்கள் 650,000 இற்கான பெறுகை
எபொயிரின் ஊசி சீறுநீரக நோயாளர்களின் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்தாகும். முன் நிரப்பப்பட்ட குறித்த ஊசி மருந்து 4,000 ஐயூ சிறிஞ்சர்கள் 650,000 இற்கான பெறுகைக்கு சர்வதேச போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக, 04 விலைமனுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த விலைமனுக்கள் தொடர்பாக பெறுகை மேன்முறையீட்டுச் சபையின் விதந்துரையின் அடிப்படையில், குறித்த பெறுகையை கணிசமான பதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்தபட்ச விலைமனுதாரரான இந்தியாவின் ஆஃள சுநடயைnஉந டுகைந ளுஉநைnஉநள (Pஎவ) டுவன இற்கு 574,600 அமெரிக்க டொலர்களுக்கு வழங்குவதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. எபொயிரின் முன் நிரப்பப்பட்ட ஊசிமருந்து 4,000 ஐயூ சிறிஞ்சர்கள் 1,600,000 இற்கான பெறுகை
சீறுநீரக நோயாளர்களின் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் எபொயிரின் ஊசி முன் நிரப்பப்பட்ட குறித்த ஊசி மருந்து 4,000 ஐயூ சிறிஞ்சர்கள் 1,600,000 இற்கான பெறுகைக்கு சர்வதேச போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக, 04 விலைமனுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த விலைமனுக்கள் தொடர்பாக பெறுகை மேன்முறையீட்டுச் சபையின் விதந்துரையின் அடிப்படையில், குறித்த பெறுகையை கணிசமான பதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்தபட்ச விலைமனுதாரரான இந்தியாவின் M/s Reliance Life Sciences (Pvt) Ltd இற்கு 1.414 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வழங்குவதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. கொலிஸ்ட்மெதேட் சோடியம் ஊசி 1,000,000 ஐயூ ஊசிமருந்துக் குப்பிகள் 218,000 இற்கான பெறுகை
கொலிஸ்ட்மெதேட் என்பது, ஒருசில கிராம் நெகட்டிவ் பற்றீரியா மாதிரிகள் காரணமாக ஏற்படுகின்ற மோசமான தொற்றுக்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் மருந்தாகும். குறித்த மருந்தின் தேவையைக் கருத்தில் கொண்டு, கொலிஸ்ட்மெதேட் சோடியம் ஊசி 1,000,000 ஐயூ ஊசிமருந்துக் குப்பிகள் 218,000 இனைக் கொள்வனவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக, 06 விலைமனுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த விலைமனுக்கள் தொடர்பாக உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரையைக் கருத்தில் கொண்டு, குறித்த பெறுகையை இலங்கையின் ஆஃள ஊநலழமய (Pஎவ) டுவன. (M/s Ceyoka (Pvt) Ltd. (Manufacturer : Ciron Drugs & Pharmaceuticals Pvt Ltd, India) 32.48 மில்லியன் ரூபாய்களுக்கு வழங்குவதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. சொ/ப்ட் க்லோன் லயினர் ரேப் 10cm X 10 cm றோல் 500,000 இனை விநியோகிப்பதற்கான பெறுகை
சொஃப்ட் க்லோன் லயினர் ரேப் 10cm X 10 cm றோல் 500,000 இனை விநியோகிப்பதற்காக சர்வதேச போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக, ஐந்து விலைமனுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரையின் அடிப்படையில், கணிசமான பதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்தபட்ச விலைமனுதாரரான இலங்கையின் George Steuart Health (Pvt) Ltd, (Manufactureer : Precision Coatings Pvt Ltd, India) இற்கு 270.56 மில்லியன் ரூபாய்களுக்கு (சேர் பெறுமதி இல்லாமல்) குறித்த பெறுகையை வழங்குவதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. இன்ஸ்லிக்சிமெப் ஊசிமருந்து 100 மில்லிகிராம் தூள் 24,000 ஊசிமருந்துக் குப்பிகளை விநியோகிப்பதற்கான பெறுகை
இன்ஸ்லிக்சிமெப் ஊசிமருந்து 'குறோன்ஸ்கே' நோய் மற்றும் 'அல்சறேரிவ் கொலயிட்ஸ்' எனும் நோய்களுக்கு நோய் அறிகுறிகளைக் குறைப்பதற்காகவும், ஒருசில மூட்டுவாத நோய்களுக்கான சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படும் 100 மில்லிகிராம் தூள் 24,000 ஊசிமருந்துக் குப்பிகளைப் பெறுகை செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக, 02 விலைமனுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரையின் அடிப்படையில், கணிசமான பதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்தபட்ச விலைமனுதாரரான கொரிய குடியரசின் Celltion Inc (Manufactureer : CELLTRION Inc. Republic of Korea) இற்கு 03 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு குறித்த பெறுகையை வழங்குவதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. பீபிஃயூஎஸ்பீஃஅயிபீ அமைவாக ஊசி மருந்து ஏற்றுவதற்காக மனித வளர்ச்சி ஓமோன் அல்லது சொமெட்ரொபின் ஐயூ 448,000 இனை விநியோகிப்பதற்கான பெறுகை
மனித வளர்ச்சி ஓமோன் அல்லது சொமெட்ரொபின் மருந்து இயற்கையான வளர்ச்சி ஓமோன் குறைபாட்டால், வளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கான சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகின்ற, குறித்த மருந்துஐயூ 448,000 இனைக் கொள்வனவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக, 02 விலைமனுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரையின் அடிப்படையில், கணிசமான பதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்தபட்ச விலைமனுதாரரான கொரிய குடியரசின் யு டீயரச ரூ ஊழ. (Pஎவ) டுவன. (A Baur & Co. (Pvt) Ltd. (Manufactureer : Merk Serono SPA, Italy இற்கு 860.50 மில்லியன் ரூபாய்களுக்கு குறித்த பெறுகையை வழங்குவதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. இலங்கை பெற்றோலிய எண்ணெய்க் களஞ்சிய முனைய கம்பனியின் கொலன்னாவ முடிவிடத்தின் 7 ஆவது வலயத்தின் உற்பத்தி நிரப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
இலங்கை பெற்றோலிய எண்ணெய்க் களஞ்சிய முனைய கம்பனியின் கொலன்னாவ முடிவிடத்தின் 7 ஆவது வலயத்தின் உற்பத்தி நிரப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் 03 ஆவது கட்டத்தை அமுல்படுத்துவதற்காக குறித்த கம்பனியின் பணிப்பாளர் சபை அனுமதி வழங்கியுள்ளது. தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் மூலம் உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு விதந்துரைக்கப்பட்டுள்ளது. கொலன்னாவ 7 ஆவது முடிவிட வலயத்தின் பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய்க்கான அதிநவீன நிரப்பு வசதிகளுக்கான முழுமையான திட்டத்தை தயாரித்தல் மற்றும் குறித்த வலயத்தில் பெற்றோல் நிரப்பு வசதிகளை நிர்மாணித்தல் கட்டம் - 1 இனை அமுல்படுத்துவதற்காக மொத்தச் செலவாக ரூ. மில்லியன் 1,455 10 வரி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, கொலன்னாவ முடிவிடம் 7 வலயத்தின் உற்பத்தி நிரப்பு வசதிகள் அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கட்டம் - 1 இனை அமுல்படுத்தல் மற்றும் பொறியியல், பெறுகை, நிர்மாணம் மற்றும் இயக்குதல் ஒப்பந்தமாக குறித்த பெறுகைச் செயன்முறையை ஆரம்பிப்பதற்காக வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தைத் திருத்தம் செய்தல்
2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலயமாக நிறுவப்பட்டுள்ளது. குறித்த வலயம் உலகளாவிய போட்டித்தன்மையான விசேட பொருளாதார வலயமாக்குதல், நேரடி வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்திழுத்தல் மற்றும் வணிகம் செய்வதற்கான வசதிக்காக தரப்படுத்தல் போன்றவற்றில் இலங்கையில் உலகளாவிய மட்டத்தில் பலப்படுத்தல் போன்ற, குறித்த சட்டத்தின்நோக்கங்களை அடைவதற்குத் தேவையான சட்ட ரீதியான திருத்தங்கள் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, ஏற்புடைய சட்டத் திருத்தங்களுக்காக 2024.07.29 அன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், மேலும் மேற்கொள்ள வேண்டிய புதிய திருத்தங்கள் சிலவும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், துறைமுக நகரத்தில் முதலீட்டாளர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஊக்குவிப்புக்கள் மற்றும் விடுவிப்புச் செய்யப்பட்ட செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வியாபாரக் கட்டளைகள் 2025.08.04 அன்று தொடக்கம் செல்லுபடியற்றதாயிருப்பதால், குறித்த முதலீட்டாளர்களின் பிரச்சினைகளுக்கு நேரடியாகத் தீர்வுகளை வழங்குவதற்கு உத்தேச புதிய சட்ட ஏற்பாடுகள் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, புதிதாக இனங்காணப்பட்டுள்ள திருத்தங்களை உட்சேர்த்து, 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. மதுவரி அனுமதிப்பத்திரங்களுக்குரிய விதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
மதுவரி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்குரிய வழிகாட்டி மற்றும் நிபந்தனைகளைத் திருத்தம் செய்வதற்காக 2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்திற்கமைய, வருடாந்த மதுவரி அனுமதிப்பத்திரக் கட்;டணம், காப்புப் பிணை வைப்புத் தொகை மற்றும் கைத்தொழில் நுழைவுக்காக ஒருதடவை அறிவிடப்படும் கட்டணம் உள்ளிட்ட மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் மதுவரி அனுமதிப்பத்திரக் கட்டணங்களுக்குரி புதிய விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, (52 ஆவது அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 25 ஆவது பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 32 ஆவது பிரிவின் கீழ் ஆக்கப்பட்டுள்ள மதுவரி அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள விதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்குச் சமர்ப்பிப்பதற்காக காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. வானொலி அலைக்கற்றைகளை ஏலவிற்பனை செய்யும் ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்புகள் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2024.07.17 அன்று பாராளுமன்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது. குறித்த திருத்தத்திற்கமைய, அச்சட்டத்தின் 22 ஆம் பிரிவின் (7) ஆவது அட்டவணையின் ஏற்பாடுகளின் பிரகாரம், வானொலி அலைக்கற்றைகள் ஏல விறபனை செய்யும் ஒழுங்குவிதிகள் விதிக்கப்பட வேண்டியுள்ளது. அதற்கிணங்க, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவால் 2397ஃ30 மற்றும் 2024.08.14 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் '2024 ஆம் இலக்க 02 ஆம் இலக்க வானொலி அலைக்கற்றைகள் ஏல விற்பனை செய்யும் ஒழுங்குவிதிகள்' வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ஒழுங்குவிதிகளின் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிதற்காக பதில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19. 2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதன (திருத்தச்) சட்டத்தை அமுல்படுத்தல்
2025 வரவு செலவுத் திட்டத்திற்கமைய,, அரச துறையில் ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு இணையாக தனியார் துறை ஊழியர்களுக்கும் தேசிய குறைந்தபட்ச வேதனத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கிணங்க, 2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதன (திருத்தச்) சட்டம், 2025 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க, வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டம், மற்றும் 2025 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டம், 2025.04.01 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் 2025.07.22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த ஏற்பாடுகளுக்கமைய 2025.04.01 ஆம் திகதி தொடக்கம் மாதாந்த குறைந்தபட்ச வேதனம் 17,500ஃ- ரூபா தொடக்கம் 27,000ஃ- ரூபா வரைக்கும் அதிகரிக்கப்பதுடன், 2026.01.01 ஆம் திகதி தொடக்கம் மாதாந்த குறைந்தபட்ச வேதனம் 30,000ஃ- வரைக்கும் அதிகரித்துள்ளது. அவ்வாறே மாதாந்த குறைந்தபட்ச வேதன அதிகரிப்பு ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதி, மேலதிக நேரக் கொடுப்பனவு, பணிக்கொடை, மகப்பேற்றுக் கொடுப்பனவு மற்றும் விடுமுறை தினக் கொடுப்பனவு போன்ற அனைத்து நியதிச்சட்டக் கொடுப்பனவுக்ளுக்கு ஏற்புடையதாக்கிக் கொள்ள வேண்டும். அத்துடன், இடைத்தரகர் அல்லது ஒப்பந்தக்காரர் மூலமாக ஏதேனுமொரு தொழிற்சாலையில் அல்லது சேவையில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்கள் தொடர்பாக நெருக்கமான தொழில் வழங்குநர் போலவே இறுதி தொழில் வழங்குநர் உள்ளிட்ட அனைத்து தொழில் வழங்குநர்களும் குறித்த ஒழுங்குவிதிகளுக்கு இணங்கியொழுகுவதற்கு சட்டக் கடப்பாடு உள்ளது. குறித்த ஏற்பாடுகளை அமுல்படுத்துவதற்காக தொழில் ஆணையாளர் நாயகம் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கிணங்க, குறித்த ஏற்பாடுகள் தொடர்பாக பத்திரிகை விளம்பரத்தின் மூலம் ஏற்புடைய தரப்பினர்களுக்கு தற்போது அறிவிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகவல் தொழில் அமைச்சரால் அமைச்சரவையின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த ஏற்பாடுகள் சரியான வகையில் அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
20. மொனறாகலை நிர்வாக மாவட்டத்தில் மாவட்ட செயலாளர்ஃஅரசாங்க அதிபர் பதவிக்க நியமித்தல்
மொனறாகலை நிர்வாக மாவட்டத்தில் மாவட்ட செயலாளர்ஃஅரசாங்க அதிபராக கடமையாற்றிய திரு. ஆர்.எம்.பசன் ஸ்ரீ பண்டார ரத்னாயக்க அவர்கள் 2025.08.20 ஆம் திகதி சேவைக்குப் பின்னரான அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அதற்கமைய, வெற்றிடமாகவுள்ள மொனறாகலை மாவட்ட செயலாளர்ஃஅரசாங்க அதிபர் பதவிக்கு தற்போது பொது நிருவாக, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவையின் விசேடதர அதிகாரியான ஏ.ஜி.நிசாந்த அவர்களை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நியமிப்பதற்காக பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
21. அரச நிறுவனங்களால் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் பெறுகையின் கீழ் கபிலச் சீனி மாத்திரம் விநியோகிப்பதை கட்டாயமாக்குதல்
வரையறுக்கப்பட்ட லங்கா சீனி (தனியார்) கம்பனியின் கீழ் இயங்குகின்ற பலவத்த மற்றும் செவனகல தொழிற்சாலைகள் மூலம் கபிலச் சீனி 56,000 மெற்றிக்தொன் வருடாந்தம் உற்பத்தி செய்யப்படுவதுடன், கரும்புச் செய்கையின் செழிப்பான அறுவடை காரணமாக இவ்வருடம் கபிலச் சீனி உற்பத்தி மட்டத்தையும் கடந்து சென்றுள்ளது. அதற்கமைய, உயரிய தரப்பண்பு உள்நாட்டு உற்பத்தியான கபிலச் சீனி எமது நாட்டு மக்கள் மத்தியில் தொடர்ந்தும் விரிவாக்கம் செய்வதன் மூலம் உள்நாட்டு கபிலச் சீனி தொழிற்றுறையை நிலைபேறாக அபிவிருத்தி செய்வதற்கு அரசு கவனம் செலுத்தியுள்ளது. அத்துடன், குறித்த தொழிற்சாலைகளில் பணிபுரிகின்ற ஊழியர்கள், இத்தொழிற்றுறையில் தங்கி வாழ்கின்ற உள்நாட்டு கரும்பு விவசாயிகளும் இவ் உற்பத்தித் தொழிற்றுறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சேவை வழங்குநர்களையும் பாதுகாப்பதற்காக கபிலச் சீனி உற்பத்திக்கு உள்நாட்டு சந்தையில் விந்பனை வாய்ப்புக்களை விரிவாக்கம் செய்ய வேண்டிய தேவையும் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, முப்படையினர், இலங்கை பொலிசு, சிறைச்சாலைகள் திணைக்களம், அரச மருத்துவமனைகள் போன்ற அரச நிறுவனங்களுக்கு உணவுப் பொருள் பெறுகையின் கீழ் சீனி விநியோகத்தின் போது கபிலச்சீனி மாத்திரம் விநியோகிப்பதற்கு கட்டாயமாக்குவதற்கும், வரையறுக்கப்பட்ட லங்கா சதொச மூலம் நேரடியாக வரையறுக்கப்பட்ட லங்கா சீனி (தனியார்) கம்பனியில் கபிலச் சீனி கொள்வனவு செய்து நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கும், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
22. போதைப்பொருட்களை வேரோடு ஒழிப்பதற்காக 'நாடே ஒன்றிணைவோம்' நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
எமது நாட்டில் போதைப்பொருட்களின் பரவல் தேசிய ஆபத்தாக மாறியுள்ளமையுடன், போதைப்பொருள் கடத்தல்களை மையமாகக் கொண்டு அதிகமான குற்றச்செயல்கள் இடம்பெறுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. தேசிய மட்டத்தில் அரசியல் தலைமைத்துவம், வினைத்திறனாக தீர்மானமெடுக்கும் பொறிமுறையைப் போலவே விரிவான மக்கள் பங்கேற்புடன் கூடிய தேசிய மட்டத்திலான நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் குறித்த ஆபத்துக்களை வேரோடு இல்லாதொழிக்க வேண்டுமெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த தேசிய நோக்கத்தை அடைவதற்காக 'நாடே ஒன்றிணைவோம்;' எனும் பெயரிலான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விரிவான பரப்புரைச் செயன்முறை மூலம் சமூகத்தை இவ்வாபத்து பற்றி விழிப்புணர்வு செய்தல், போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய வலையமைப்பை இல்லாதொழித்தல், புனர்வாழ்வு வாய்ப்புக்களை அதிகரித்தல், பாவனையிலிருந்து விடுபடுவதற்கு விருப்பமானவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, 'நாடே ஒன்றிணைவோம்' தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை அவசரமானதும் துரிதமானதுமான தேசிய வேலைத்திட்டமாக ஆரம்பிப்பதற்கும், மற்றும் அதற்காக தேசிய வழிநடாத்தல் செயற்குழுவொன்றை நியமிப்பதற்கும் கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
23. 2025 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (செயல்நுணுக்க முக்கியத்துவமுள்ள வணிகங்களுக்கு விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்களை வழங்குவதற்கான வழிகாட்டல்கள்) ஒழுங்குவிதிகளின் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கல் கடன் திட்டத்தின் கீழ் அரசின் உடன்பாடுகளுக்கமைய கொழும்பு துறைமுக நகரத்தில் வணிகங்களை மேற்கொண்டு செல்கின்ற செயல்நுணுக்க முக்கியத்துவமுள்ள ஆரம்ப வணிகங்களுக்காக வரி ஊக்குவிப்புக்களை அமுல்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்துவதற்காக 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுஙிகுவிதிகளை வெளியிடுவதற்காக 2025.07.07 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, '2025 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (செயல்நுணுக்க முக்கியத்துவமுள்ள வணிகங்களுக்கு விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்களை வழங்குவதற்கான வழிகாட்டல்கள்) ஒழுங்குவிதிகள்' 2454/62 ஆம் இலக்க 2025.09.20 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ஒழுங்குவிதிகளின் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
24. கடன் கருவியாக இலங்கை அரசு உள்நாட்டு பிணைமுறி வெளியிடல்
தற்போது போதியளவு வெளிநாட்டு செலாவணி கிடைக்கின்றமையாலும், அதற்கமைய உள்நாட்டு வெளிநாட்டு செலாவணிச் சந்தை பணத் திரவத்தன்மை வலுவடைந்துள்ளமையால், இலங்கையில் வணிக வங்கிகளை இலக்காகக் கொண்டு, குறித்த வங்கிகளுக்கு வெளிநாட்டு நாணயங்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்களை வழங்கி இலங்கை வெளிநாட்டு நாணயங்களால் பெயரிடப்பட்ட உள்நாட்டு கடன் கருவியை வழங்குவதற்கு அரசு கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அரச கடன் திணைக்களத்தால் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத்தில் முதலீட்டாளர்களின் விருப்பைத் தீர்மானிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சந்தை ஆய்வின் பெறுபேறுகளுக்கமைய, ஒரு வருடம் காலம் தொடக்கம் மூன்று வருடங்கள் வரை 100 மில்லயின் அமெரிக்க டொலர் வரைக்கும் பல்வேறு அளவுகளில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் ஆர்வங் காட்டுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, குறுகியகால பணத்திரவத்தன்மை கருவியாக, தற்போது காணப்படும் சட்ட வரையறையில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளதார அபிவிருத்தி அமைச்சால் உள்நாட்டு டொலர் பிணைமுறிகளை வெளியிடுவதற்கு உரிய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
25. இலங்கை மத்திய வங்கியின் கீழ் இயங்குகின்ற நிதிப் புலனாய்வுப் பிரிவு மற்றும் மொறிசஸ் குடியரசின் நிதிப் புலனாய்வுப் பிரிவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
2006 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க நிதிக் கொடுக்கல் வாங்கல் அறிக்கைப்படுத்தும் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய, இலங்கை நிதிப் புலனாய்வுப் பிரிவு இலங்கை மத்திய வங்கியின் கீழ் தாபிக்கப்பட்டுள்ளது. குறித்த நிதிப் புலனாய்வுப் பிரிவு மற்றும் மொறிசஸ் குடியரசின் நிதிப் புலனாய்வுப் பிரிவுக்கும் இடையில், பணத் தூய்தாக்கல், அதனுடன் தொடர்புடைய குற்றங்கள், பயங்கரவாதத்pற்கு நிதியளித்தல் மற்றும் ஆயத விரிவாக்கத்திற்காக நிதியளித்தல் தொடர்பாக விசாரணை செய்தல் அல்லது வழக்குத் தொடர்வதற்கு ஏற்புடைய நியாயமான காரணத்தின் அடிப்படையில் ஊகிக்கின்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கான கொள்கைச் சட்டகத்தை வழங்கும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருதரப்பினருக்கிடையே கையொப்பமிடுவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
26. இலங்கை நிதிப் புலனாய்வுப்பரிவு மற்றும் வத்திக்கான அரசின் (ர்ழடல ளுநநஃஏயவiஉயn ஊவைல ளுவயவந) நிதிப் புலனாய்வுப் பிரிவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
பணத் தூய்தாக்கல், அதனுடன் தொடர்புடைய குற்றச் செயல்கள், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் பயங்கரவாதத்pற்கு நிதியளித்தல் மற்றும் ஆயத விரிவாக்கத்திற்காக நிதியளித்தல் போன்ற செயற்பாடுகளைத் தடுத்தல் தொடர்பான ஏற்புடைய தகவல் பரிமாற்றத்தின் போது ஒத்துழைப்புத் தெரிவித்தல் தொடர்பாக, இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு மற்றும் வத்திக்கான அரசின் (ர்ழடல ளுநநஃஏயவiஉயn ஊவைல ளுவயவந) நிதிப் புலனாய்வுப் பிரிவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இருதரப்பினருக்கிடையில் குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
27. உள்நாட்டு சந்தையில் நிலவுகின்ற கீரிசம்பா அரிசித் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக புசு11/பொன்னி சம்பா என அழைக்கப்படும் அரசி இறக்குமதி செய்தல்
குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் வீட்டுமட்ட வருமானம் மற்றும் செலவுக் கருத்துக்கணிப்புக்கமைய இலங்கையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள ஆண்டுக்கான அரிசி நுகர்வு 2,460,000 மெற்றிக்தொன்களாவதுடன், அவற்றில் ஆண்டுக்கான கீரிசம்பா நுகர்வு 10/ சதவீதமாகும். அதாவது, 246,000 மெற்றிக்தொன்களாகும். தற்போது உள்நாட்டுச் சந்தையில் கீரிசம்பா அரிசித் தட்டுப்பாடு நிலவுதாலும், கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிக விலைக்கு கீரிசம்பா விற்பனை தொடர்பாகக் கவனம் செலுத்தி ஒரு இறக்குமதியாளருக்கு 520 மெற்றிக்தொன்கள் உயர்ந்தபட்சம், 2025.10.15 ஆம் திகதி தொடக்கம் 2025.11.15 ஆம் திகதி வரை கீரிசம்பா அரிசிக்கு பதிலீடாகக் கருதப்படும் புசு11/பொன்னி சம்பா அரிசி இறக்குமதிக்காக இறக்குமதிக் கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையிலிருந்து விடுவிப்பதற்காக உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் விதந்துரைக்கமைய விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் வணிக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அவர்களும் ஒருங்கிணைந்து சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


