2026.03.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

2026.03.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
  • :

2026.03.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்


01. இறக்குமதி பண்டங்களுக்கான செஸ் வரியை கட்டம் கட்டமாக நீக்குதல்
தெரிவு செய்யப்பட்ட உள்நாட்டு கைத்தொழில்களைப் பாதுகாத்தல், அரசிறை வருமானம் ஈட்டல் போன்ற நோக்கங்களுடன் செஸ் வரி உள்ளிட்ட சுங்க வரியில்லாத ஏனைய இறக்குமதி வரியை தொடர்ச்சியாக விதித்தல் மற்றும் குறித்த வரி வகுதிகளை விரிவாக்கம் செய்தல் காலம்பூராகவும் இடம்பெற்றுள்ளது. அதன் பெறுபேறாக குறிப்பாக இடைப்பட்ட மற்றும் உள்ளீட்டுப் பண்டங்களுக்கு அதிக இறக்குமதி செலவின் அடிப்படையில் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில்களின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. அந்நிலைமை சர்வதேச சந்தைகளில் இலங்கையின் உற்பத்திகளில் போட்டித்தன்மை குறைவடைவதற்கும், ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார விருத்தி மட்டுப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. அதனால், உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதன் மூலம் ஏற்றுமதிப் போட்டித்தன்மையை அதிகரித்தல், கைத்தொழில் மேம்பாடு மற்றும் பெறுமதி சேர்ப்பதற்காக ஒத்துழைத்தல், வர்த்தகத்தை இலகுபடுத்தல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வசதிகளை வழங்கல், அனைத்து தரப்பினர்களுக்கும் சமமான போட்டித்தன்மையை உறுதிப்படுத்தல் மற்றும் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் உலக வர்த்தக அமைப்பின் கொள்கைகளுக்கு இணங்கியொழுகுதல் போன்ற நோக்கங்களாகக் கொண்டு, குறித்த செஸ் வரியை கட்டம் கட்டமாக நீக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, அடையாளங் காணப்பட்டுள்ள 2,634 இயைபுமுறைக் குறியீட்டு இலக்கத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படுகின்ற பண்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை 2026 ஆம் ஆண்டு தொடக்கம் 2029 ஆம் ஆண்ட வரை 04 வருடங்களுக்கு கட்டம் கட்டமாக நீக்குவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


02. விலங்குணவுக்காக சோளம் இறக்குமதி தொடர்பாக முறையான பொறிமுறையைத் தயாரித்தல்

விலங்குணவு மற்றும் திரிபோசா உற்பத்தி மற்றும் மனிதப் பயன்பாடு போன்றவற்றுக்கு சோளம் பயன்படுத்தப்படுவதுடன், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சோளம் போதியளவாக இன்மையால், சோளம் இறக்குமதி செய்வதற்கு நேரிடுகின்றது. ஆயினும், கடந்த காலங்களில் அதுதொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் மேலெழுந்துள்ளமையால், சோளம் இறக்குமதி செய்வதற்காக முறையான பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டுமென 2025.12.15 மற்றும் 2025.12.22 ஆம் திகதிகளில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தொடர்ந்து வரும் காலங்களில் உள்நாட்டு சோளத்தின் விலை கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் மூலம் தீர்மானிப்பதற்கும், உள்நாட்டு சோளத்தின் அறுவடை சந்தைக்குக் கிடைக்காத காலங்களில் உள்நாட்டு சோள உற்பத்தி விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில், கால்நடை உற்பத்திகள் மற்றும் சுகாதார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விலங்குணவு உணவுற்பத்தியாளர்கள் மற்றும் விலங்குணவு இறக்குமதியாளர்கள் மூலம் விலங்குணவு உற்பத்திக்குத் தேவையானதும், உள்நாட்டில் விநியோகிக்க முடியாததுமான அளவை மாத்திரம், கால்நடை உற்பத்திகள் மற்றும் சுகாதாரத் திணைக்களம் மற்றும் விவசாய திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் இறக்குமதி செய்வதற்கு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. வரையறுக்கப்பட்ட இலங்கை திரிபோசா லிமிட்டட் இற்கு உணவுத் தரத்திலான சோளம் இறக்குமதி செய்வதற்கும் விநியோகிப்பதற்கான நடவடிக்கை முறைகள்

வரையறுக்கப்பட்ட இலங்கை திரிபோசா லிமிட்டட் இற்கு திரிபோசா உற்பத்திக்குத் தேவையான தரத்துடன் கூடிய சோளத்தை போதியளவு உள்நாட்டில் விநியோகிப்பதற்கு இயலாமையால், அதற்கு இறக்குமதி செய்யப்பட்ட சோளத்தைப் பயன்படுத்துவதற்கு நேரிட்டுள்ளது. ஆயினும், இறக்குமதிக் கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திரம் மற்றும் தாவர இறக்குமதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட பல்வேறு ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டுப்பாடுகளுக்கு சோளம் இறக்குமதி செய்ய வேண்டியிருப்பதால், திரிபோசா நிறுவனத்திற்குத் தொடர்ந்து பேணிச் செல்கின்ற வகையில் அதிக தரத்தைக் கொண்ட சோளத்தை தடைகளின்றியும் தாமதமின்றியும் இறக்குமதி செய்வதற்கான முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கமைய, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்களால் குறித்த பெறுகை வழிகாட்டி மற்றும் ஒழுங்குபடுத்தல் தேவைகளுக்கு இணங்கி வரையறுக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட இலங்கை திரிபோசா லிமிட்டட் இற்கு திரிபோசா மற்றும் அதுசார்ந்த உற்பத்திகளுக்குத் தேவையான சோளத்தைக் கட்டம் கட்டமாக இறக்குமதி செய்தல் தொடர்பாக நடவடிக்கை முறையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை முறையைக் கையாண்டு, 2026 ஆம் ஆண்டுக்கான திரிபோசா உற்பத்திக்கு கட்டம் கட்டமாக உயர்ந்தபட்சம் 15,000 மெற்றிக்தொன் சோளத்தை இறக்குமதி செய்வதற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் இணைந்து சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. மனித வாழ்விடங்கள் மற்றும் பயிர்நிலங்கள் காணப்படுகின்ற இடங்களில் நடமாடுகின்ற விலங்குகளால் பயிர்களுக்கும் மனிதவாழ்வுக்கும் ஏற்படுகின்ற பாதிப்புக்களைக் குறைப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

மனித வாழ்விடங்கள் மற்றும் பயிர்நிலங்கள் காணப்படுகின்ற இடங்களில் நடமாடுகின்ற யானைகள், காட்டுப் பன்றிகள், குரங்குகள், சிறு குரங்குகள், மர அணில்கள் மற்றும் மயில்கள் போன்ற மிருகங்களால் இடம்பெறுகின்ற பயிர்ச் சேதங்களால் எமது நாட்டின் கிராமிய விவசாய வாழ்வாதாரங்களுக்கும் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கும் மோசமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், அதுசார்ந்த வனவிலங்குகள் - மனித மோதல் மற்றும் சொத்துக்கள் அழிவடைதல் போன்றன அதிகமாகப் பதிவாகியுள்ளது. அத்துடன், மோசமான முறையில் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளும் அதிகரித்துள்ளன. அதனால், வனவிலங்குகளால் ஏற்படுகின்ற பயிர்ச் சேதங்கள் மற்றும் மனித வாழ்வுக்கு இடம்பெறுகின்ற பாதிப்புக்களை முகாமைப்படுத்துவதற்காக பொதுமக்கள், பல்கலைக்கழக சமூகத்தவர்கள், கமக்கார அமைப்புக்கள், சூழலியலாளர்கள், சுற்றாடல் பிரச்சினைகள் தொடர்பாக செயலாற்றுகின்ற அரச சார்பற்ற நிறுவனங்கள், விவசாய திணைக்களம், கமநல அபிவிருத்தி திணைக்களம், ஏனைய ஏற்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பங்காளர்களின் கருத்துக்களின் அடிப்படையில் விரிவான வேலைத்திட்டமொன்று கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சால் தயாரிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பாக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள விடயங்களைக் கருத்தில் கொண்டு, குறித்த வேலைத்திட்டத்தில் உட்சேர்;க்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை மீளாய்வு செய்து, தொடர்ந்தும் அடையாளங் காணப்படுகின்ற புதிய யோசனைகளையும் உட்சேர்த்து இவ்வேலைத்திட்டத்தை அமுல்படுத்த வேண்டிய விதம் பற்றி விதந்துரைப்பதற்கு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்களின் தலைமையில் மற்றும் ஏனைய ஏற்புடைய அமைச்சர்களின் பங்கேற்புடன் அமைச்சர்கள் குழுவொன்றை நியமிப்பதற்காக அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

05. இலங்கையில் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை சுகாதார சேவைகள் முறைமையின் தரப்பண்பை அதிகரித்தல்

இலங்கையில் திடீர் விபத்து மற்றும் அதிர்ச்சியான நிலைமைகள், வீதி விபத்துக்கள் மற்றும் கடுமையான இதயநோய் மற்றும் வலிப்பு நிலைமைகள் காரணமாக மருத்துவனைகளில் சேர்க்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையால், இந்நிலைமைகளுக்கு அவசர சிகிச்சைகளை வழங்குவதற்கு தற்போது மட்டுப்படுத்தப்பட்ட சுகாதார சேவைகளை ஒருங்கிணைந்த வகையிலும், தரநியமமாக கட்டமைப்பின் கீழ் நிறுவ வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த இலங்கையில் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை சேவைகளின் ஒருங்கிணைப்பு, ஒழுங்குபடுத்தல் மற்றும் மேம்பாடுகளைப் பலப்படுத்துவதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை சுகாதார சேவைகள் பராமரிப்பு முறைமை பணிப்பாளர் அலுவலகத்தை (னுசைநஉவழசயவந ழக யுஉஉனைநவெ யனெ நுஅநசபநnஉல உயசந ளுலளவநஅ) தாபிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இப்பணிப்பாளர் அலுவலகத்தை நிறுவுவதன் மூலம் அவசர சுகாதார சேவைகளை ஒரே கட்டமைப்பின் கீழ் ஒருங்கிணைத்து, அவசர மருத்துவ சிகிச்சை வழிகாட்டல்கள், நிபுணத்துவ சேவைக்கு உட்படுத்தும் வழிமுறைகள் மற்றும் இயலளவு விருத்தி வேலைத்திட்டங்களை முறைசார்ந்த வகையில் பலப்படுத்துவதற்கு இயலுமை கிட்டும். அதற்கமைய, தத்தமது அமைச்சுக்களின் கீழ் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை சுகாதார சேவைகள் பராமரிப்பு முறைமை பணிப்பாளர் அலுவலகத்தை தாபிப்பதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. இலங்கை தாதியர் சபைக்கு புதிய கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கான காணித்துண்டை வழங்கல்
இலங்கையில் அரச மற்றும் தனியார் முறைகளில் அனைத்து தாதி உத்தியோகத்தர்களையும் பதிவு செய்தல் மற்றும் கல்விசார் சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்காக சுயாதீன நிறுவனமாக தாபிக்கப்பட்டுள்ள இலங்கை தாதியர் சபை 15 வருடங்களாக ஆரம்ப சுகாதார தாதியர் கல்லூரியில் சிறிய இடவசதியுடன் தற்காலிகமாக இயங்கி வருகின்றது. தற்போது 45,000 இற்கும் அதிகமான அரச துறை தாதி உத்தியோகத்தர்கள் மற்றும் தனியார் துறை தாதியர் மற்றம் தாதியநிலை சார்ந்த ஏனைய குழுவினரைப் பதிவு செய்தல், அவர்களுடைய கோவைகள் மற்றும் கணணித் தரவுக் கட்டமைப்பைப் பேணிச் செல்லல் மற்றும் தொழில்வாண்மை அபிவிருத்திக்கான பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வூட்டுவதற்கான செயலமர்வுகளை நடாத்துதல் போன்ற பணிகள் இலங்கை தாதியர் சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்குப் போதியளவு இடவசதி மற்றும் ஏனைய வசதிகளுடன் கூடிய வளாகமொன்றின் தேவை காணப்படுகின்றது. அதற்கமைய, புதிய கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்குச் சொந்தமான காணியில் அமைந்துள்ள ஆரம்ப தாதியக் கல்லூரிக்கு அருகில் 35 அடி நீளமும் 30 அடி அகலமும் கொண் காணித்துண்டை நீண்டகால குத்தகை அடிப்படையில் இலங்கை தாதியர் சபைக்கு ஒப்படைப்பதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. புத்தளம் தள வைத்தியசாலை அபிவிருத்திக்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் கொண்டுவரல்

2019 ஆம் ஆண்டில் 'யு' வகுதியுடைய தள வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ள புத்தளம் தள வைத்தியசாலை தற்போது வடமேல் மாகாண சபையால் நிர்வகிக்கப்பட்டு வருவதுடன், அதனைச் சுற்றியுள்ள 09 பிரதேச செயலகங்களில் வாழ்கின்ற 04 மில்லியன் மக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்கி வருகின்றது. 13 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள 52 கட்டிடங்களில் தாபிக்கப்பட்டுள்ள இவ்வைத்தியசாலையில் தற்போது 746 நோயாளர் கட்டில்கள் காணப்படுகின்றன. 04 பிரதான விசேட நிபுணத்துவ மருத்துவ சேவைகளும், வெளிநோயாளர் சிகிச்சை சேவைகள், நோய் நிர்ணய சேவைகள்,திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைகள், விடுதி நோயாளர்களுக்கான வசதிகள் மற்றும் ஏனைய ஆதரவுச் சேவைகள் இவ்வைத்தியசாலையால் வழங்கப்பட்டு வருகின்றன. ஆயினும், இவ்வைத்தியசாலை இதுவரை 'யு' வகுதி தள வைத்தியசாலையாக முழுமையாக இயங்கவில்லை. வைத்தியசாலையின் பூகோள அமைவித்துக்கமைய அதிக மழைவீழ்ச்சி காலங்களில் வைத்தியசாலையின் நோயாளர் விடுதி வெள்ளப் பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றமையால், வெளிநோயாளர் பிரிவு, திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் ஏனைய பிரிவுகளுக்கான வைத்தியசாலை இடவசதிகள் போதியளவு இல்லாமை அவதானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 'யு' வகுதி தள வைத்தியசாலையாக இயங்க வேண்டிய தேவையின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டுள்ள பிரதான மருத்துவமனை அபிவிருத்தித் திட்டத்திற்கமைய, புத்தம் தள வைத்தியசாலையை மூன்றாம்நிலை சிகிச்சை மட்டம் வரை அபிவிருத்தி செய்வதற்காக வடமேல்மாகாண ஆளுநர் அவர்களின் உடன்பாட்டுடன், இவ்வைத்தியசாலையை சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் கையகப்படுத்துவதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. இராஜதந்திர கடமைகள் மற்றும் சேவைகள் வெளிநாட்டு கடவுச்சீட்டு உரித்துடைய நபர்களுக்கு வீசா பெற்றுக்கொள்வதை விடுவிப்பதற்காக இலங்கை மற்றும் மொரோக்கோ இராச்சியத்திற்கும் இடையிலான ஒப்பந்தம்


இருநாட்டிலுள்ள பிரஜைகளுக்கு அந்தந்த நாட்டுக்கு பரஸ்பர அடிப்படையில் போக்குவரத்துக்கு வசதியளிப்பதும், ஏற்புடைய நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காகவும் இரு நாடுகளுக்கிடையில் நல்லுறவை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, இலங்கைக்கும் மொரோக்கோ இராச்சியத்திற்கும் இடையில் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக 2018.08.07 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பினும், இதுவரை குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்படவில்லை. அதனால், இரு நாடுகளுக்கிடையில் இராஜதந்திர கடமைகள் மற்றும் சேவைகள் வெளிநாட்டு கடவுச்சீட்டு உரித்துடைய நபர்களுக்கு 30 நாட்களை விஞ்சாத காலப்பகுதிக்கு தங்களுக்குரிய சர்வதேச உள்நுழைவுஃவெளியேறல் இடங்கள் வாயிலாக வீசா இன்றி அடுத்த தரப்பினரின் ஆட்புலப் பரப்புக்குள் உள்நுழைவதற்கும், அங்கிருந்த வெளியேறுவதற்கும் மற்றும் அதன் மூலம் வேறு நாடொன்றுக்குப் பயணிப்பதற்கும் இயலுமை கிடைக்கும் வகையில் இலங்கைக்கும் மொரோக்கோ இராச்சியத்திற்கும் இடையில் ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. மேல்மாகாண நகரங்களில் பாதுகாப்பானதும் காலநிலை மாற்றங்களுக்கு தாங்குதிறன் கொண்ட நீர் விநியோகத்திற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
காலநிலை மாற்றங்களின் தாக்கங்களால் இலங்கையில் பெரும்பாலான பிரதேசங்களில் பாதுகாப்பான குடிநீர் விநியோகத்திற்கு மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. நீர் விநியோக முகாமைத்துவத்தின் அத்தியாவசிய பகுதியாக காலநிலை தாங்குதிறன் கொண்ட நீர்ப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் வெள்ளப்பெருக்கு மற்றும் வரட்சி போன்ற காலநிலை நிலைமைகளுக்கு எதிராக தாங்குதிறனைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை மேலெழுந்துள்ளது. சுற்றாடல் நிலைபேற்றுத்தன்மையை உறுதிப்படுத்தல் மற்றும் சமூகப் பொறுப்புக்களுடன் கூடிய பால்நிலை சமத்துவப் பதிலளிப்புக்களைக் காட்டுகின்ற மற்றும் அனர்த்த ஆபத்துக்களுக்கான தாங்குதிறனை உறுதிப்படுத்துவதற்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் தாபிக்கப்பட்டுள்ள சுற்றாடல் மற்றும் சமூகப் பிரிவால் 'அனர்த்தங்களுக்கு தாங்குதிறன் உட்கட்டமைப்பு வசதிகளுக்கான கூட்டு' இன் மூலம் மேற்கொள்ளப்பட்ட கருத்திட்ட முன்மொழிவுக் கோரல்களுக்குப் பதிலளிக்கும் வகையில் ருN ர்யடிவையவ நிறுவனத்தின் ஆலோசனைக்கமைய, 'மேல்மாகாண நகரங்களில் பாதுகாப்பானதும் காலநிலை மாற்றங்களுக்கு தாங்குதிறன் கொண்ட நீர் விநியோகம் : அம்பத்தலே நீர் விநியோகத் திட்டத்தின் நீர்ப் பாதுகாப்புத் திட்டத்திற்காக காலநிலை மாற்றங்களுக்கு தாங்குதிறன் கொள்கையை ஒருங்கிணைத்தல்' எனும் கருத்திட்ட யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 24 மாத காலத்தில் உத்தேச கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக 469,232 அமெரிக்க டொலர்கள் நிதி கிடைத்துள்ளது. குறித்த கருத்திட்டத்திற்கு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையால் 10,000 அமெரிக்க டொலர்கள் இணை நிதியிடல் மூலம் நிதிப்பங்களிப்பு வழங்கப்படுகின்றது. அதற்கமைய, உத்தேசகருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. ;திட்வா' புயல் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுக்கல்வி நிறுவனங்களை மீள்நிலைக்குக் கொண்டுவரல்
கடந்த ஆண்டு நாடளாவிய ரீதியில் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ள திட்வா புயல் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுக் கல்வித் துறைசார்ந்த நிறுவனங்களை துரிதமாக மீள்நிலைக்குக் கொண்டுவர வேண்டியுள்ளது. அதன்கீழ் நாட்டின் 09 மாகாணங்களில் 150 தேசிய பாடசாலைகளை புனரமைப்பதற்காக 1,988.83 மில்லியன் ரூபாய்களும், 07 கல்வியியல் கல்லூரிகளைப் புனரமைப்பதற்கு 285.40 மில்லியன் ரூபாய்களுமாக 2,274.23 மில்லியன் செலவாகுமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலதிகமாக, அதிக சரிவு கொண்ட பிரதேசங்களில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்களின் மண்சரிவு ஆபத்துக்களை நீக்குவதற்காக தேசிய கட்டிடங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள அறிக்கை மற்றும் திட்டமிடலுக்கமைய தேவையான கட்டமைப்புக்களை (ளுவசரஉவரசநள) நிர்மாணிக்க வேண்டியுள்ளது. அதற்கமைய, குறித்த புனரமைப்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டிய தேவையைச் சுட்டிக்காட்டி, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையைக் கருத்தில் கொண்டு, 2025 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் பாராளுமனறத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீட்டு நிதியொதுக்கீட்டைப் பயன்படுத்தி குறித்த புனரமைப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான ஒதுக்கீடு செய்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. 2026 சிறுபோகத்தில் வயல் காணிகளில் பயிரிடுகின்ற விவசாயிகளுக்கு உரத்திற்கான நிதியுதவி வழங்கல்
2025ஃ26 பெரும்போகத்தில் வயல் காணிகளில் பயிரிடுகின்ற விவசாயிகளுக்கு உரத்திற்கான நிதியுதவி வழங்குவதற்காக 2025.08.18 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த வேலைத்திட்டத்தை 2026 சிறுபோகத்திலும் தொடர்ந்து அமுல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, வயல் காணிகளில் மேற்கொள்கின்ற நெற்செய்கைக்கு ஒரு ஹெக்ரெயாருக்கு 25,000/- ரூபா வீதம் உயர்ந்தபட்சம் 02 ஹெக்ரெயார்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கும், நெற்செய்கை மேற்கொள்ளாத வயல்காணிகளில் விவசாய பணிப்பாளர் நாயகத்தால் விதந்துரைக்கப்படும் மற்றும் போகக் கூட்டத்தில் எடுக்கப்படுகின்ற தீர்மானத்தின் பிரகாரம் பயிரிடுகின்ற ஏனைய பயிர்களுக்கு ஒரு ஹெக்ரெயாருக்கு 15,000ஃ- ரூபா வீதம் ஒரு விவசாயிக்கு உயர்ந்தபட்சம் 02 ஹெக்ரெயார்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. ஜப்பான் அரசால் வழங்கப்படுகின்ற பயன்படுத்தப்பட்ட, தாழ்வான மிதிபலகைகொண்ட பேரூந்துகளைப் பெற்றுக்கொள்ளல்
இலங்கை ஜனாதிபதிக்கும், எமது நாட்டுக்கு விஜயம் செய்த ஜப்பான் வெளிவிவகாரங்கள் தொடர்பான பாராளுமன்ற துணை அமைச்சருக்கும் இடையில் 2025 பெப்ரவரி மாதம் இடம்பெற்ற சந்திப்பின் போது இலங்கையின் பொதுப் பேரூந்துப் போக்குவரத்துத் துறைக்கு ஜப்பான் ஒத்துழைப்பு வழங்கக்கூடிய விதங்கள் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது. அதுதொடர்பாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவராலயத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளில் பயன்படுத்தப்பட்ட, தாழ்வான மிதிபலகைகொண்ட 08 பேரூந்துகளை நன்கொடையாக வழங்குவதற்கு ஜப்பான் அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்த பேரூந்துகளைப் பெற்றுக் கொள்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. மத்திய அதிவேக நெடுஞ்சாலை கருத்திட்டத்தின் குருநாகல் தொடக்கம் தம்புள்ள வரையான பகுதியின் ஐஏ கட்டத்தை நிர்மாணித்தல்
ஒட்டுமொத்த மத்திய அதிவேக நெடுஞ்சாலை வீதியின் முழுமையாக எதிர்பார்க்கப்படும் அனுகூலங்களைப் பெற்றுக் கொள்வதற்காக 58.6 கிலோமீற்றர் மொத்த நீளம் கொண்ட குருநாகல் தொடக்கம் தம்புள்ள வரையான ஐஏ ஆம் கட்டத்தை அமுல்படுத்தல் அவசியமாகவுள்ளது. குறித்த பகுதியை நிர்மாணிப்பதற்காக அடையாளங் காணப்பட்டுள்ள காணிகளைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு 2025.06.09 அன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. காணிக் கையகப்படுத்தல் செயன்முறையின் முன்னேற்றம் 73.% வீதமாவதுடன், மேலும் கையகப்படுத்துவதற்காக இழப்பீடுகன் செலுத்தப்பட வேண்டியுள்ளது. அதற்கமைய, மத்திய அதிவேக நெடுஞ்சாலை வீதிக் கருத்திட்டத்தின் குருநாகல் தொடக்கம் தம்புள்ள வரையான ஐஏ ஆம் கட்ட வீதியை நிர்மாணிப்பதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கீழ்க்காணும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் குறித்த கட்டங்களை அமுல்படுத்துவதற்கு நிதி வழங்குவதற்குப் பொருத்தமான ஆற்றல்வளத்தை அடையாளங் கண்டு, அதற்கமைய நிதியொதுக்கீடு செய்தல்
• குறித்த பகுதி பூகோளவியல் ரீதியாக கூருணர்வு பிரதேசத்தின்ஊடாக செல்வதால், நிர்மாணப் பணிகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆரம்ப பூகோள தொழிநுட்ப சோதனைகள், சரிவு உறுதிப்பாடு மற்றும் மண்சரிவு ஆபத்துக்களை மதிப்பீட்டை தேசிய கட்டிடங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளல்
• குறித்த பகுதி பிரதான மற்றும் சிறு நீர் மூலங்கள் ஊடாக செல்வதால், இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபத்தின் மூலம் நீரியல் வடிவமைப்புக்கள், வெள்ளப்பெருக்கு ஆபத்து மதிப்பீடு மற்றும் புயல் நீர் முகாமைத்துவ திட்டத்தை தயாரித்தல்

14. இறப்பர்பால் வெட்டாமல் கைவிடப்பட்டுள்ள முதிர்வடைந்த இறப்பர் செய்கைகளை மீள்நடுகை மூலம் இறப்பர் செய்கையின் உற்பத்தித்திறனை அதிகரித்தல்
இலங்கையில் ஒட்டுமொத்த இறப்பர் செய்கைக் காணிகள் 84,002 ஹெக்ரெயார்களாகும். ஆயினும், திறமைவாய்ந்த பயிற்சி பெற்ற இறப்பர் பால் வெட்டுபவர்களின் பற்றாக்குறை, இறப்பர் பால் வெட்டும் நுட்ப முறைகள் பற்றி அறிவு மற்றும் உபகரணங்கள் இன்மை, செய்கைக்கான பராமரிப்புச் செலவு அதிகரித்திருத்தல், சீரற்ற காலநிலை போன்ற காரணங்களால் இறப்பர் பால் வெட்டும் நாட்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையால் நாளாந்த இறப்பர் பால் வெட்டாமையால் நிரந்தர வருமானம் இன்மையால் தற்போது இறப்பர் செய்கை காணி உரிமையாளர்கள் குறிப்பிடத்தக்களவு செய்கையில் இறப்பர் பால் வெட்டாமல் கைவிடுவதற்கு முன்வந்துள்ளனர். அவ்வாறான காணிகளை வினைத்திறனாக மீளமைப்பதன் மூலம் அதிக ஏற்றுமதி பெறுமதியுள்ள இறப்பர் உற்பத்தித் தொழிற்றுறையின் விருத்திக்கும், மொத்தத் தேசிய உற்பத்திக்கும் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கமைய, தற்போது நாடளாவிய ரீதியில் கைவிடப்பட்டுள்ள 3,300 ஹெக்ரெயார் இறப்பர் காணிகளை மீளமைப்பதற்கு இயலுமை கிட்டும் வகையில் 'இறப்பர்பால் வெட்டாமல் கைவிடப்பட்டுள்ள முதிர்வடைந்த இறப்பர் செய்கைகளை மீள்நடுகை மூலம் இறப்பர் செய்கையின் உற்பத்தித்திறனை அதிகரித்தல்' எனும் பெயரிலான கருத்திட்டமொன்றை 2026 தொடக்கம் 2028 வரையான காலப்பகுதியில் அமுல்படுத்துவதற்கும், அதற்காக 1,212.38 மில்லியன் நிதியொதுக்கீடு செய்வதற்கும் பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. 2009 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி சட்டத்தை நீக்குதல்
2009 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி சட்டத்தை நீக்குவதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக 2025.02.24 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்குதல்) சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் பாதுகாப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. 2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க விளையாட்டில் ஊக்கப் பதார்த்த (தடை செய்யப்பட்ட நிரல்;) ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
உலக ஊக்கப்பதார்த்த தடுப்பு முகவராண்மையால் விளையாட்டு வீரர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ள பதார்த்த பட்டியல் வருடாந்தம் இற்றைப்படுத்தப்படுவதுடன், அதற்கு இணையாக உடன்படிக்கை செய்துள்ள நாடுகள் அப்பட்டியல் அந்தந்த நாடுகளில் வலுவாக்கம் செய்யப்படும். அதற்கிணங்க, 2026 ஆம் ஆண்டில் குறித்த தடை செய்யப்பட்ட பதார்த்தப் பட்டியலை எமது நாட்டில் வலுவாக்கம் செய்வதற்காக 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டுக்கு எதிரான சமவாயச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ், 2471ஃ51 ஆம் இலக்க 2026.01.16 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் 2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க விளையாட்டில் ஊக்குப் பதார்த்த (தடை செய்யப்பட்ட நிரல்;) ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாம் முகாமைத்துவத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்தல் (விடய இல. 45)
அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் நேரச் சட்டகத்தை அடையாளங் கண்டு, அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளரின் தலைமையில் உத்தியோகத்தர் குழுவொன்றை நியமிப்பதற்காக 2024.12.30 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த குழுவுக்கு அந்தந்த அமைச்சுக்களில் குறித்த அமைச்சின் கீழ் இயங்குகின்ற திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் நிலவுகின்ற பதவி வெற்றிடங்களைப் நிரப்புவதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, 2026.02.12 அன்று இடம்பெற்ற குறித்த குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில் கீழ்வரும் ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்காக அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தொடர் இல அமைச்சுக்கள்ஃ மாகாண சபைகள் ஆட்சேர்ப்புக்கான குழுவால் விதந்துரைக்கப்பட்டுள்ள பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை
01. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 300
02. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு 67
03. பாதுகாப்பு அமைச்சு 9,794
04. கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு 112
05. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு 121
06. புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சு 02
07. பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு 1,915
08. பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு 66
09. கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு 60
10. சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு 776
11. விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சு 201
12. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 214
13. கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மறும் சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சு 15
14. சுற்றாடல் அமைச்சு 213
15. இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சு 06
16. வெளி விவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு 03
17. தொழில் அமைச்சு 01
18. பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு 09
19. துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு 339
20. வலுசக்தி அமைச்சு 01
21. வர்த்தக, வாணிப,உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சு 50
22. வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சு 10
23. மத்திய மாகாண சபை 22
24. சப்பிரகமுவ மாகாண சபை 236
25. வடமேல் மாகாண சபை 401
26. வடமத்திய மாகாண சபை 66
27. கிழக்கு மாகாண சபை 282
28. ஊவா மாகாண சபை 146
29. வடக்கு மாகாண சபை 411
மொத்தம் 15,839

18. விரிவான அனர்த்தங்களின் போது கடமைகளை மேற்கொள்கின்ற அரச உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு செலுத்தல் (விடயத்தலைப்பு 51)
விரிவான அனர்த்தங்களின் போதும் மற்றும் அனர்த்தத்தின் பின்னரான காலப்பகுதியில் கடமைகளில் ஈடுபடுகின்ற அரச உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு செலுத்தல்களுக்கு அப்போதைய பொது நிருவாக அனர்த்த முகாமைத்துவ கால்நடை வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளரால் 2019.09.01 திகதிய சுற்றறிக்கை மூலம் ஏற்புடைய ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன. சமகாலத்தில் நிலவுகின்ற பொருளாதார நிலைமைகளுக்குப் பொருத்தமான வகையில் காலத்தோடு தழுவியதாக திருத்தம் செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு, முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் மற்றும் தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அவதானிப்புக்கள் மற்றும் முன்மொழிவுகளின் அடிப்படையில் தற்போது வலுவிலுள்ள குறித்த கொடுப்பனவுகளை 100மூ வீதத்தால் அதிகரிப்பதற்கும், 2025.11.21 ஆம் திகதி தொடக்கம் 2025.12.15 வரையான விரிவான அனர்த்தத்தின் போது கடமைகளில் ஈடுபட்டவர்களும் மற்றும் தொடர்ந்து வரும் காலங்களில் விரிவான அனர்த்தங்களின் போதான கடமைகளை மேற்கொள்கின்ற அரச உத்தியோகத்தர்களுக்கு இக்கொடுப்பனவை வழங்குவதற்கும் இயலுமாகும் வகையில் சுற்றறிக்கை ஆலோசனைகளை வெளியிடுவதற்காக பாதுகாப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles