ஏற்றுமதித் துறையில் உள்ள தொழில்களுக்கு நடைமுறையில் உள்ள ஐந்து நாள் வேலை வாரத்தை, தொழில் ஆணையாளரின் அறிவுறுத்தல்கள் மற்றும் இணக்கப்பாட்டிற்கு அமைய ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அடுத்த ஆறு மாதங்களுக்கு நீடிக்க தீர்மானித்துள்ளாதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
மகளிர் தொழிற்சங்கங்களுக்கும் சேர்ந்த பிரதிநிதிகளும் முதல் முறையாக இந்த சபையில் பங்கேற்றனர்.
தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தலைமையில் நேற்று (15) கூடிய தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை இந்த முடிவை எடுத்துள்ளது. மூன்று மகளிர் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த மூன்று பிரதிநிதிகளும் முதல் முறையாக இந்த சபையில் பங்கேற்றனர்.
ஐந்து நாள் வேலை வாரத்தை அமல்படுத்தும்போது எழும் பிரச்சினைகளை மீளாய்வு செய்ய, முதலாளி, தொழிலாளி; மற்றும் அரசாங்கம் ஆகிய மூன்று தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், ஒவ்வொரு தரப்பினரிடமிருந்தும் இரண்டு பிரதிநிதிகள் என ஆறு பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு துணைக் குழுவை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் சட்டமூலம் ஆய்வு செய்யப்பட்டு, தேவையான திருத்தங்களுடன் முதலாளி மற்றும் தொழிலாளி இரு தரப்பினரின் உடன்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் தொழில் அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.