இன்று (11) நள்ளிரவு 12.00 மணி முதல் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் அனைத்தும் முழுமையாக முடியடையும் வரை, மேலதிக வகுப்புக்களை, விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துதல் என்பன தடை செய்யப்பட்ள்ளன என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், குறித்த பரீட்சை தொடர்பான எதிர்பார்ப்பு வினாக்களை அச்சிட்டு வௌியிடுதல், பரீட்சைக்குரிய வினாக்கள் வழங்கப்படும் அல்லது அதுபோன்ற வினாக்கள் வழங்கப்படும் என்று சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், மின்னணு அல்லது அச்சு ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்துதல் அல்லது வைத்திருத்தல் என்பன முற்றாக தடைசெய்யப்பட்ள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விதிமுறைகள் , மீறப்படுமாயின் கீழுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு மறைப்பாடுகளை மேற்கொள்ளுமாறும் பரீட்சைகள் திணைக்கம் மேலும் தெரிவித்துள்ளது
- பொலிஸ் தலைமையகம் - 0112421111
- பொலிஸ் அவசர இலக்கம் - 119
- இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கம் - 1911