2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்க ஊழியர்களின் ஆகக் குறைந்தது அடிப்படைச் சம்பளத்தை அதிகரிப்பதை கவனத்திற் கொண்டு அரசாங்க ஊழியர்களின் இடர் கடனை வழங்கும் அதிகூடிய வரையறையாகக் காணப்படும் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்திலிருந்து (250,000) நான்கு இலட்சம் (400,000) ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதனுடன் சம்பந்தப்பட்ட சுற்று நிருபத்தை பொது நிருவாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டாரவினால் நேற்று (09) வெளியிடப்பட்டது.