தீவு முழுவதையும் சுற்றி உள்ள கடல் பிரதேசத்திற்கான காலநிலை முன்னறிவிப்பு

தீவு முழுவதையும் சுற்றி உள்ள கடல் பிரதேசத்திற்கான காலநிலை முன்னறிவிப்பு
  • :

எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கான தீவு முழுவதையும் சுற்றி உள்ள கடல் பிரதேசங்களுக்கான காலநிலை முன்னறிவிப்பு 

 
2025 மே மாதம் 10 ஆம் திகதி காலை  05.30 மணிக்கு வெளியிடப்பட்டது  .
 
மழை நிலை :
 
புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரை கரையோரப் பகுதிகளில் கடல் பிரதேசங்களில் ஆங்காங்கே மழை பெய்யும்.
 
தென்மேற்கிலிருந்து காற்று வீசுவதுடன் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு (25-35) கி. மீ ஆக் காணப்படும். 
 
சிலாபத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரை மற்றும் காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரை கடற்கரைக்கு அருகில் உள்ள கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம்.
 
கடலின் தன்மை :
 
சிலாபத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரை மற்றும் காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரை கடற்கரைக்கு அருகில் உள்ள பகுதியில் அவ்வப்போது மிதமானதாக கொந்தளிப்பு  கடுமையாகக் காணப்படும்.
 
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அக்கடல் பிரதேசங்களில் தற்காலிகமான கடும் காற்று ஏற்படக்கூடும் என்பதுடன் அதன் போது அக்கடல் பிரதேசம் தற்காலிகமாக அதிக கொந்தளிப்பாகக் காணப்படலாம். 

Related Articles