350 மருந்து வகைகளுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்

350 மருந்து வகைகளுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்
  • :
 
350 மருந்து வகைகளுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்படவுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.

 அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (17) இடம்பெற்ற தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டில் பயன் படுத்தப்படும் மருந்துகளை ஒழுங்கு படுத்தும் பொறுப்பு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு உரியது என சுட்டிக்காட்டிய தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் அதன்படி 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் 60 வகையான மருந்துகள் உச்ச வரையறையுடன் விலை கட்டுப் படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
 
கடந்த 21 ஆம் திகதி சுகாதார அமைச்சரினால் மருந்துகளின் விலை ஒழுங்குபடுத்துவதற்காக வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டு அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறப்பட்டதாகவுஉம் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த சில மாதங்களாக மருந்துகளின் விலை நிர்ணயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த காலத்தில் விலைகள் நிர்ணயிக்கப்பட்ட 350 மருந்துகளின் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
 
இந்த மருந்துகளின் பட்டியலில் பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் அடங்கும் என்றும், பல மருந்துகளுக்கு குறிப்பிடத்தக்க விலைக் குறைப்பு இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related Articles