திருகோணமலை கடற்படைப் பயிற்சி - 2026: கடல்சார் கட்டம் ஆரம்பமானது

திருகோணமலை கடற்படைப் பயிற்சி - 2026: கடல்சார் கட்டம் ஆரம்பமானது
  • :



இலங்கை கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘திருகோணமலை கடற்படைப் பயிற்சி - 2026’ இன் கடல்சார் கட்டம், 2026 ஜூலை 21 ஆம் திகதி திருகோணமலை கடற்பரப்பில் கடற்படைக் கப்பல் படை , 4வது அதிவேகத் தாக்குதல் படகுப் படை, சிறப்புப் படகுப் படை, மரைன் படைப்பிரிவு மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவற்றின் பங்கேற்புடன் ஆரம்பமானது.





அதற்கமைய, 2026 ஜூலை 21 ஆம் திகதி கப்பல்களைக் கையாளும் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு கடற்படைப் பயிற்சிகள் (MISCEX), கடல் மேற்பரப்பு இலக்குகள் மீதான துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சிகள் (SURFEX), கப்பல் அணிவகுப்புப் பயிற்சிகள் (SCREENEX), ஆயுதங்களைக் கையாளும் பயிற்சிகள் (GUNEX) மற்றும் கடலில் ஹெலிகாப்டர் மூலம் செங்குத்தாகப் பொருட்களைப் பரிமாறும் பயிற்சிகள் (VERTREP) என்பன வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. இன்றைய தினத்தில் (2026 ஜூலை 22) தேடுதல் மற்றும் மீட்புப் பயிற்சிகள் (SAREX), காயமடைந்தவர்களை முதலுதவிக்காக அழைத்துச் செல்லும் பயிற்சிகள் (CASEVAC), இரு கப்பல்களுக்கு இடையே பொருட்களைப் பரிமாறும் பயிற்சிகள் (RAS), ஆபத்துக்குள்ளான கப்பலை இழுத்துச் செல்லும் பயிற்சிகள் (TOWING), கடலில் கப்பல்களுக்கு இடையே ஒளி சமிக்ஞை மூலம் தகவல்களைப் பரிமாறும் பயிற்சிகள் (FLASHEX) மற்றும் நங்கூரமிடும் பயிற்சிகள் என்பன மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், இத்திருகோணமலை கடற்படைப் பயிற்சியின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு கடற்படைப் பயிற்சிகளில் பயிற்சி பெறும் அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்களுக்கும் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதுடன், அவர்களின் செயல்பாட்டு அனுபவத்தை அதிகரிப்பதற்கு இது பெருமளவில் வழிவகுக்கும்.

Related Articles